For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாமியார்னா தாடி வச்சிக்கிட்டு, தடவிக் கொடுப்பவர்னு மட்டும் நினைச்சீங்களா.. இவர் வேற மாதிரி!

Google Oneindia Tamil News

Recommended Video

    பேப்பரில் பேனா செய்யும் விசித்திர சாமியார்

    ரேபரேலி: சாமியார் என்றால் ஜடாமுடி, நீண்ட தாடி, கையில் உத்திராட்ச கொட்டை, காவி உடை என்றுதான் எல்லோருக்கும் டக்கென நினைவுக்கு வரும். ஆனால் இவர் வித்தியாசமான சாமியார்.

    கடவுளை நினைக்கும் நேரம் தவிர ஓய்வு நேரங்களில் படு உருப்படியான காரியம் ஒன்றை செய்து வருகிறார். அது கையில் கிடைக்கும் பேப்பரை வைத்து பேனாக்களை தயாரிக்கிறார்.

    UP saint makes pen from papers

    கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதில்லையா. ஆனால் உண்மைதான். இவரது பெயர் கிருஷ்ண பிஹாரி. உத்தரப் பிரதேச மாநிலம் தல்மா என்ற இடத்தில் உள்ள கந்தேஸ்வரி ஆசிரமத்தில் சாமியாராக இருக்கிறார். இவர் வழக்கமான சாமியார்களிடமிருந்து வித்தியாசப்படுகிறார்.

    கையில் கிடைக்கும் பேப்பர்களை பேனாக்களாக மாற்றுகிறார். பிளாஸ்டிக்குக்கு இவர் மிகப் பெரிய எதிரி. இந்த பேப்பர் பேனாக்களை ஏழைகளுக்கு இலவசமாக தருகிறார் என்பது இன்னொரு ஆச்சரியம்.

    இதற்காக ஆகும் செலவையும் இவரே பார்த்துக் கொள்கிறார். இவரது தீவிர பக்தர்கள் சிலர் பேனாக்கள் தயாரிப்புக்காக அவ்வப்போது பணமும் கொடுத்து உதவுகிறார்களாம். இதுவரை 400 பேனாக்களை இவர் தயாரித்து கொடுத்துள்ளாராம்.

    ஏன் சாமி இப்படி வித்தியாசமா இருக்கீங்க என்று கேட்டபோது, பிளாஸ்டிக் சுற்றுச்சூழலை பாதிக்கிறது. எனவேதான் பேப்பரிலிருந்து பேனாவைத் தயாரிக்க முடிவு செய்தேன். பிளாஸ்டிக்கை முழுமையாக ஒழிக்க வேண்டும். அது நமது கையில்தான் உள்ளது.

    எனது செயலுக்கு பலரும் ஆதரவு தருகிறார்கள். சிலர் உதவுகிறார்கள். உதவியை நான் எதிர்பார்ப்பதில்லை. ஹாபியாக இதை செய்யாமல் ஒரு சமூக நோக்கோடு செய்கிறேன் என்று கூறுகிறார் கிருஷ்ண பிஹாரி.

    இவர் தெய்வீகமானவர் மட்டுமல்ல.. சுற்றுச்சூழலுக்கு தேவையானவரும் கூட.. மனதார பாராட்டுவோம்!

    English summary
    A mahant of Dalmau's Khandeshwari Ashram has started making pens using paper, says 'Plastic pollutes environment. So I started this. People help me. We're distributing pens free of cost but some people give me money asking to take this initiative forward'
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X