For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மறைந்து நூற்றாண்டு கழித்த பிறகும் ஈர்க்கும் நாயகன்.. விவேகானந்தர் ஏன் வீரத்துறவி தெரியுமா?

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    சிகரெட் பிடிக்கும் விவேகானந்தர் ஏன் வீரத்துறவி தெரியுமா?

    சென்னை: இந்தியத் தாய் பெற்றெடுத்த திரு மகன்களில் மிக முக்கியமான ஒருவர் சுவாமி விவேகானந்தர்.

    விவேகானந்தரின் ஆற்றல் மிகு தோற்றமே மக்களை கிளர்ந்தெழச் செய்யும். மக்கள் கூட்டங்களை அவர் ஈர்க்கும் திறமையை வேறொருவருக்கு வாய்த்திருக்கவில்லை.

    விவேகானந்தர் பல்வேறு சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு ஈர்ப்பு விசையாக இருந்துள்ளார்.

    ஆதர்ஷ நாயகன்

    ஆதர்ஷ நாயகன்

    நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் முதல்கொண்டு யோகி அரவிந்தர் வரையில் பல்வேறு சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு விவேகானந்தர் ஒரு ஆதர்ச நாயகன்.
    ரவீந்திரநாத் தாகூர், விவேகானந்தரை ஒரு 'ஜீனியஸ்' என்று அழைக்கிறார். பிரபலமான விஞ்ஞானி ஜகதீஷ் சந்திர போஸ், விவேகானந்தரால் தான், ஈர்க்கப்பட்டதாக தெரிவிக்கிறார்.

    அமெரிக்காவில் எழுச்சி உரை

    அமெரிக்காவில் எழுச்சி உரை

    அமெரிக்காவுக்கான இந்தியாவின் முதல் விளம்பர தூதர் விவேகானந்தர்தான் என்று தைரியமாக சொல்லலாம். இந்தியாவின் பண்பாட்டு பெருமைகள் குறித்தும், இந்து மதத்தின் பெருமைகள் குறித்தும் அமெரிக்காவில் விவேகானந்தர் ஆற்றிய எழுச்சிமிக்க உரை, இந்தியர்கள் குறித்தான அமெரிக்கர்களின் பார்வையை மாற்ற உதவியது.

    மூட நம்பிக்கையை சாடினார்

    மூட நம்பிக்கையை சாடினார்

    விவேகானந்தருக்கு இந்து மதத்தில் நிலவிய சிலமூட நம்பிக்கைகள் மீது நம்பிக்கை கிடையாது. மூட பழக்கவழக்கங்களை விவேகானந்தர் தீவிரமாக எதிர்த்தார். இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரையறை செய்யும், இந்து தர்மத்தின் எந்த ஒரு வரையறைக்குள்ளும் கட்டுப்படாத மார்டன் சாமியார் விவேகானந்தர். நல்ல கருத்துக்கள் எந்த மதத்தில் இருந்தாலும் அதை எடுத்துக்கொண்டு இந்து மதத்தை பின்பற்றுவோர், அதை பின்பற்ற வேண்டும் என்று சொன்னவர் விவேகானந்தர்.

    பக்தி ஒன்றே முக்கியம்

    பக்தி ஒன்றே முக்கியம்

    அவர் ஒரு வரையறைக்குள் அடங்காத மரபு சார்பற்ற சாமியாராக தோற்றமளித்தார். புகை பழக்கம் கொண்டவர்கள், அசைவ உணவுகள் சாப்பிடுவோர் குறித்து எந்த வருத்தமும் அவருக்கு கிடையாது. பக்தி என்பதையே விவேகானந்தர் வலியுறுத்தினாரே தவிர, அதற்கான நடைமுறைகளை கிடையாது. பக்தி யோகத்தோடு, கர்ம யோகம் செய்ய கூறியவர் விவேகானந்தர். அதாவது, சும்மா இருத்தல் ஆகாது, பற்று இல்லாமல், இறைவனுக்கு சமர்ப்பணமாக எண்ணி, நமது கடமைகளை செவ்வனே செய்ய வேண்டும் என்பதே கர்ம யோகம்.

    காலத்தால் அழியா காவிய நாயகன்

    காலத்தால் அழியா காவிய நாயகன்

    இதனால் தான் இத்தனை வருடங்களுக்குப் பிறகும் கூட இளைஞர்களின் ஆதர்ஷ நாயகனாக இருக்கிறார் சுவாமி விவேகானந்தர். 1902ம் ஆண்டு, ஜூலை 4ம் தேதி மண்ணுலகை விட்டு விண்ணுலகை ஈர்க்க சென்ற சுவாமி விவேகானந்தரின் 116வது நினைவு தினம் இன்று. ஒரு நூற்றாண்டு கடந்தபோதிலும், அவர் இளைஞர்களின் உந்து விசையாக இன்னும் வாழ்ந்து கொண்டுதான் உள்ளார்.

    English summary
    Vivekananda’s ways were unorthodox. The cigar-smoking monk had no problem with those who ate meat.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X