For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வயநாடு காத்திருக்கிறது தான்யாவுக்காக.. கேரளாவின் முதல் ஆதிவாசி பெண் கலெக்டர்!

வயநாட்டில் ஆதிவாசி பெண் ஸ்ரீதான்யா கலெக்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Sreedhanya IAS: கேரளாவின் முதல் ஆதிவாசி பெண் கலெக்டர் தான்யா- வீடியோ

    வயநாடு: கவர்ச்சியான நிறம்.. ஈர்க்கும் எளிமை.. மலைக்க வைக்கும் திறமை.. இவர்தான் தான்யா! மாவட்ட கலெக்டராக விரைவில் வரப்போகிறார் இந்த ஆதிவாசி பெண்!

    வயநாடு மாவட்டத்தில் தொழுவண்ணா என்ற பகுதி உள்ளது. இங்கு வசித்து வருபவர்கள்தான் ஆதிவாசி இனத்தை சேர்ந்த சுரேஷ் - கமலம் என்ற தம்பதியினர். இவர்களது மகள் ஸ்ரீதான்யா. வயது 26 ஆகிறது.

    சின்ன குழந்தையில் இருந்தே துருதுருவென இருப்பார்.. நன்றாக படிக்கக்கூடியவர்.. பெரியவளாகி நீ என்னவாக ஆக போறே...ன்னு யாராவது கேட்டால், அதற்கு தான்யா சொன்ன ஒரே பதில் கலெக்டர்!

    என்னது பிரேமலதா பிரச்சாரமா.. வேண்டாம் சாமி.. ஆளை விடுங்க.. தெறித்து ஓடும் கூட்டணி வேட்பாளர்கள்என்னது பிரேமலதா பிரச்சாரமா.. வேண்டாம் சாமி.. ஆளை விடுங்க.. தெறித்து ஓடும் கூட்டணி வேட்பாளர்கள்

    கரையான் ஓலை

    கரையான் ஓலை

    தான்யாவின் கனவுக்கும் குடும்பத்துக்கும் நிறைய வேறுபாடு.. குடும்பத்தை தன் பிடியில் வைத்து கொண்டது. சாதாரண ஓலை வீடு.. அதுகூட பழைய கூரை... கரையான் பிடித்த வீட்டிலேயே வசித்து வந்தாள் இந்த குட்டி அறிவாளி!

    தான்யா

    தான்யா

    இருந்தாலும் தன் லட்சியத்தை அடைய வேண்டும் என்ற முயற்சியை ஒருபோதும் கைவிடவில்லை. இன்னும் சொல்ல போனால் குடும்ப சூழலோ, சுற்றியிருக்கிற சூழலோ தான்யாவுக்கு ஒரு பொருட்டே இல்லை! தன் உயரத்தை அடைய வேண்டும் என்பதற்காக கடினமான சூழலை பழகி கொள்ள ஆரம்பித்தாள்.

    சிவில் சர்வீஸ்

    சிவில் சர்வீஸ்

    இது எல்லாவற்றுக்கும் மேலாக பெற்றோரின் அரவணைப்பு, தான்யாவை அந்த உயரத்துக்கு அருகிலேயே அழைத்து சென்றது. கலெக்டர் ஆவது என்றால் சும்மாவா என்ன? சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும்.. அதற்கு டெல்லி செல்ல வேண்டும்.. ஆனால் பணம் வேண்டுமே? அதற்கு கூட பணம் இல்லாமல் திணறினர்.

    கூலி வேலை

    கூலி வேலை

    அக்கம்பக்கத்தில் கடனை வாங்கி தான்யாவுக்கு கொடுத்து டெல்லிக்கு அனுப்பி வைத்தனர் பெற்றோர். தேர்வையும் நன்றாகவே எழுதிவிட்டு ஊர் திரும்பினார் தான்யா. வந்ததும் பெற்றோருக்கு துணையாக கூலி வேலைக்கு கிளம்பி சென்றுவிட்டார் தான்யா!

    கையில் கட்டு

    கையில் கட்டு

    அப்போதுதான் திடீரென ஒரு விபத்து.. கரண்ட் தாக்கியதில் அவரது இடது கை எலும்பு முறிந்துவிட்டது. இதற்கான சிகிச்சை எடுத்து கொண்டார். வலி காரணமாக கையில் கட்டு போட்டு கொண்டார். இந்த சமயத்தில்தான் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.

    ஆதிவாசி

    ஆதிவாசி

    அதில் தான்யா 410-வது ரேங்க் பெற்றிருக்கிறார். இதன்மூலம் வயநாடு பகுதியில் ஆதிவாசி பெண் ஒருவர் முதல் முறையாக மாவட்ட ஆட்சியர் ஆகியுள்ளார் என்ற பெருமையும் தேடி வந்துள்ளது. பொதுமக்களின் வாழ்த்துக்கள் ஒரு பக்கம் குவிந்து வந்தாலும், ஆதிவாசி மக்கள் தான்யாவை தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்!

    வயநாட்டு பகுதியில் ஏராளமான கடமைகளும், பொறுப்புகளும் வரிசையாக காத்துக் கிடக்கின்றன.. கலெக்டர் தான்யாவின் வருகைக்காக!

    English summary
    Tribal Girl Sreedhanya will be the first person from Wayanad to become an IAS officer if selected.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X