உங்களுக்கான பாதை உங்களது கையில்தான்!
உங்கள் முன்பு பரந்து விரிந்திருக்கும் பாதையில் நீங்கள் நடை போட விளையும்போது தன்னம்பிக்கையுடன் செல்லுங்கள்.. அது உங்களுக்கு சரிவரவில்லையா.. புதுப் பாதையை நீங்களே செப்பனிட்டு அதில் நடை போடுங்கள்.. நிச்சயம் வெற்றி உங்களுக்கே.
வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா என்று நாம் செல்லும் பாதையிலா ஆயிரம் தடைகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து வெற்றி வாகை சூட வேண்டும். நம்முடைய வெற்றிக்கான பாதையை நாம் தான் நிர்ணயிக்க வேண்டும். உங்கள் பாதையில் சென்று இலக்கை அடையுங்கள்.

நாம் செல்லும் பாதை கரடுமுரடாக இருப்பினும் அதையெல்லாம் பொருட்படுத்தாது வெற்றியை நோக்கிப் பயணிக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஓர் பாதை உண்டு. ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்கும் போது தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும்.
முயற்சி திருவினையாக்கும் என்பது போல நம் வாழ்வில் இலக்கை அடையும் வரை அதை நோக்கிப் பயணிக்க வேண்டும். இடையூறுகள் இல்லாத பாதை ஏது அவற்றையெல்லாம் தவிடுபொடியாக்கி வெற்றி பெறுங்கள். எப்பொழுதும் உங்கள் மீது இருக்கும் நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். உங்களுக்கான பாதையை நீங்களே தீர்மானியுங்கள்.
உங்களுக்கென ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொள்ளுங்கள் அதற்கான பாதையை வகுத்து அதில் வெற்றி நடை போடுங்கள். நிச்சயம் ஒரு நாள் வெற்றி கிட்டும். தோல்வி அடைந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் வெற்றியை நோக்கி வீறு நடை போடுங்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில். வெற்றியை நோக்கி இருக்கட்டும் உங்கள் பாதை.