For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Mullaperiyar Dam Water Level Today | முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் இன்று

Google Oneindia Tamil News

Newest First Oldest First
9:45 AM, 21 Mar

கடந்த திங்கள்கிழமை நிலவரப்படி, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.30 அடியாக இருந்தது, நீர்வரத்து பூஜ்ஜியமாகவும், அணையில் இருந்து 105 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.
10:49 AM, 12 Mar

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் காலை 6:00 மணி நிலவரப்படி 121 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி). அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11 கன அடியாக இருந்தது. நீர் இருப்பு 2826 மில்லியன் கன அடியாகும்.
11:35 AM, 11 Mar

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு நீர் திறப்பு வினாடிக்கு 1000 கன அடியாக குறைக்கப்பட்டது. முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி 121 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி). அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11 கன அடியாக இருந்தது. நீர் இருப்பு 2826 மில்லியன் கன அடியாகும்.
10:27 AM, 16 Jul

முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 133.20 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரத்து 143 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் வினாடிக்கு 1,789 கன அடியாகவும் இருந்தது.
11:43 AM, 30 Nov

முல்லைப் பெரியாறு அணையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி நீர்மட்டம் 142 அடி (மொத்த உயரம் 152 அடி), அணையில் நீர் இருப்பு 7,666 மில்லியன் கன அடி, அணைக்குள் நீர்வரத்து விநாடிக்கு 2,710 கன அடி, நீர் வெளியேற்றம் விநாடிக்கு, 2,300 கன அடியாக இருந்தது.
10:45 AM, 22 Nov

நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 141.10 அடியில் உள்ளது.அணைக்கு 3104 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு மின்சார தேவைக்காக 1800 கன அடி, இரைச்சல் பாலம் வழியாக 450 கன அடி என மொத்தம் 2250 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
9:41 AM, 18 Nov

152 அடி கொண்ட முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிவரை நீரைத் தேக்கிக்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ள நிலையில், நீர் மட்டம் 141 அடியைத் தொட்டுள்ளது. 141 அடியை எட்டியதால் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அணைக்கு நீர்வரத்து 3,348 கனஅடியாக உள்ள நிலையில் நீர் திறப்பு 2,300 கனஅடியாக உள்ளது.
11:23 AM, 17 Nov

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 140.50 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2795 கனஅடி நீர் வரத்தும், வினாடிக்கு 2300 கனஅடியும் வெளியேற்றப்படுகிறது.
9:39 AM, 15 Nov

முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் நேற்று காலை 140 அடியை எட்டியது. இதனால் பொதுப்பணித் துறையினர் முதல் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவித்துள்ளனர்.
10:11 AM, 11 Nov

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம், நீர்மட்டம், 138 .70 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 1867 கன அடியாக உள்ளது.
4:57 PM, 2 Nov

முல்லைப் பெரியாறு அணையில் நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம், 138.30 அடி உயரமாக இருந்தது. (மொத்த உயரம் 142 அடி) அணைக்கு நீர்வரத்து 4104 கன அடியாகவும், அணையில் இருந்து தமிழகத்துக்கு நீர் வெளியேற்றம் 2,974 கன அடியாகவும் உள்ளது.
10:08 AM, 29 Oct

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம், அண்மையில் பெய்த கனமழையால் 138 அடியை எட்டியுள்ளது. அணைக்கு நீர்வரத்து 3,522 கன அடியாக உள்ள நிலையில், அணையிலிருந்து 2,300கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 142 அடியைத் தாண்டினால், உபரி நீர் கேரளாவிற்கு திறந்துவிடப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2:59 PM, 26 Oct

முல்லைப்பெரியாறு அணையில் கோர்ட் உத்தரவின்படி 142 அடி வரை தண்ணீர் சேகரிக்க முடியும். இன்றைய நிலவரப்படி அணைக்கு நிகர நீர்வரத்து வினாடிக்கு 2,109 கன அடியாக உள்ளது. அணையின் நீர் மட்டம் 138 அடியாக உள்ளது.
10:11 AM, 25 Oct

முல்லைப் பெரியாறு அணையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம், 136.80 அடி உயரமாகவும், (மொத்த உயரம் 142 அடி) அணையில் நீர் இருப்பு, 6,320 மில்லியன் கன அடியாகவும், அணைக்கு நீர்வரத்து 5,020 கன அடியாகவும், அணையில் இருந்து தமிழகத்துக்கு நீர் வெளியேற்றம் 2,200 கன அடியாகவும் உள்ளது.
9:42 AM, 18 Oct

பலத்த மழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை 131.30 கன அடியாக நீர்மட்டம் அதிகரித்தது. அதாவது ஒரேநாளில் நீர் மட்டம் 2.5 அடியாக உயர்ந்துள்ளது. மேலும் 4,439 மில்லியன் கன அடியாக இருந்த நீர் இருப்பு, 5,001 இருப்பாகி ஒரே நாளில், 522 மில்லியன் கன அடி தண்ணீர் அதிகரித்துள்ளது. இதே போல் விநாடிக்கு 1,433 கன அடி தண்ணீர் வந்த நிலையில் 7,815 கன அடி வரத்து ஏற்பட்டு, ஒரே நாளில் விநாடிக்கு 6,382 கன அடி தண்ணீர் அதிகமாக வரத்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
9:16 AM, 26 Jul

முல்லை பெரியாறு அணைக்கு வினாடிக்கு 4875 கன அடி நீர் வரத்துள்ளது. அணையின் நீர்மட்டம் 135.25அடியாக உள்ளது. வினாடிக்கு 900 கன அடிமட்டுமே திறக்கப்பட்டுள்ளது.
11:41 AM, 23 Jul

இன்றைய நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 131.50 அடியாகவும், நீர் இருப்பு 5,048 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் நீர் வரத்து வினாடிக்கு 4,294 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் வினாடிக்கு 900 கன அடியாகவும் இருந்தது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 1.25 அடி உயர்ந்தது.
11:09 AM, 17 Jun

நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி அதிகபட்சமாக பெரியாறில் 110.2 மி.மீ., தேக்கடியில் 39.4 மி.மீ., மழை பதிவானது. இதனால் 1724 கனஅடியாக இருந்த நீர்வரத்து 2808 கன அடியாக அதிகரித்தது. நீர்மட்டம் 131.70 அடியாக(மொத்த உயரம் 152 அடி) இருந்தது. நீர் இருப்பு 5095 மில்லியன் கன அடியாகும்.தமிழக குடிநீர், சாகுபடிக்காக திறக்கப்பட்ட 900 கனஅடி நீர் 1400 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
9:48 AM, 14 Jun

நேற்றைய நிலவரப்படி, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.70 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 645 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்காக, வினாடிக்கு 900 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
1:12 PM, 12 Feb

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 130 அடி உயரமாகவும் (முழு கொள்ளளவு 142 அடி) அணையில் நீர் இருப்பு 4 ஆயிரத்து 697 மில்லியன் கன அடியாகவும், அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 60 கன அடியாகவும், அணையில் இருந்து நீர் வெளியேற்றம், வினாடிக்கு 600 கன அடியாகவும் இருந்தது.
10:25 AM, 17 Dec

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 124.05 அடி உயரமாகவும் அணையில் நீர் இருப்பு 3,430 மில்லியன் கன அடியாகவும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 496 கன அடியாகவும், அணையில் இருந்து தமிழகத்துக்கு நீர் வெளியேற்றம் வினாடிக்கு 1,311 கன அடியாகவும் இருந்தது.  பெரியாறு மற்றும் தேக்கடி ஏரி பகுதிகளில் மழை இல்லை.
10:04 AM, 10 Dec

கடந்த செவ்வாய்க்கிழமை நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம்,125.20 அடியாக இருந்தது. அணையில் நீர் இருப்பு 3,661 மில்லியன் கன அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,771 கன அடியாகவும், அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1,400 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.
10:00 AM, 2 Dec

பெரியாறு அணை நீர்மட்டம் குறைந்து வருவதால் தமிழக குடிநீர், சாகுபடிக்கான நீர்திறப்பு 1522 கனஅடியில் இருந்து 1444 கனஅடியாக குறைக்கப்பட்டது. நீர்ப்பிடிப்பில் மழையில்லாததால் பெரியாறு அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 484 கனஅடியாக குறைந்தது. 10 நாட்களில் நீர்மட்டம் 3 அடி வரை குறைந்து நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி 125.60 அடியாகவும் (மொத்த உயரம் 152 அடி), நீர் இருப்பு 3748 மில்லியன் கனஅடியாகவும் இருந்தது. இதனால் நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
1:57 PM, 21 Nov

பெரியாறு அணை நீர்மட்டம் 126.60 அடியாக (மொத்த உயரம் 152 அடி) உயர்ந்தது. நீர் இருப்பு 3964 மில்லியன் கனஅடியாகும்.நேற்று காலை 8:30 மணிப்படி தேக்கடியில் 5.2, பெரியாறில் 1.4 மி.மீ., மழை பதிவானது. வினாடிக்கு 4822 கனஅடி நீர் அணைக்கு வந்தது.
9:54 AM, 18 Nov

தேனி மாவட்டத்தில் பலத்த மழையால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து நேற்று 2,985 கன அடியாக உயர்ந்தது. 1,167கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்மட்டம் 123.10 அடி யாக இருந்தது.
11:41 AM, 12 Nov

முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்யாததால் அணைக்கு நீா்வரத்து குறைந்தது. நேற்று புதன்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 123.35 அடியாகும். அணையில் நீா் இருப்பு, 3,291 மில்லியன் கன அடியாக இருந்தது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 681 கனஅடியாகவும், நீா் வெளியேற்றம் விநாடிக்கு 1,267 கன அடியாகவும் இருந்தது.
12:20 PM, 21 Sep

இன்றைய நிலவரப்படி பெரியாறு அணை நீர்மட்டம் 126.75 அடியாகவும், அணைக்குள் விநாடிக்கு 3,777 கன அடி தண்ணீர் வந்தது. ஒரே நாளில் 2378 கன அடி அதிகரித்து வந்தது, மேலும் நீர்மட்டம் 1 அடி உயர்ந்தது.
3:40 PM, 8 Aug

நேற்றைய நிலவரப்படி முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 130 அடியாக உள்ளது. அணைக்கு 17, 746 கன அடி நீா் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து தமிழகத்துக்கு 1, 650 கன அடி தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.
1:46 PM, 1 Aug

கடந்த 3 மாதங்களாக 112 அடியில் இருந்த முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த ஜூலை 11ஆம் தேதி 113 அடியாக உயர்ந்தது அதன்பிறகு ஜூலை 22ஆம் தேதி மேலும் ஒரு அடி உயர்ந்து, 114 அடியாக காணப்பட்டது. தற்போது நேற்று காலை 115.10 அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 525 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1,745 மில்லி கன அடியாக உள்ளது.
2:35 PM, 21 May

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் - [21-05-2020]

நேற்றைய நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 113.10 அடியாக உள்ளது. நீர்வரத்து 28 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 125 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

முல்லைப் பெரியாறு அணை வரலாறு

முல்லைப் பெரியாறு அணைக்கான கட்டுமானப் பணி 1887 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னி குக் தலைமையில் ஆங்கிலேய இராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணை கட்டும் பணியை மேற்கொண்டது. முல்லைப்பெரியாறு அணையின் கட்டுமானப்பணிகளுக்காக 80 ஆயிரம் டன் சுண்ணாம்புக்கல் பயன்படுத்தப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணை எங்கு உள்ளது?

முல்லைப் பெரியாறு அணை தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது. அணை கட்டப்பட்ட இடம் கேரளாவுக்கு சொந்தமானது. ஆனால் அணை தமிழகத்திற்கு சொந்தமானது. தமிழக பொதுப்பணித்துறை இந்த அணையைப் பராமரித்து வருகிறது.

எந்த ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது முல்லைப் பெரியாறு அணை?

முல்லைப் பெரியாறு அணை கேரளாவில் பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. பெரியாறு மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கி கேரளாவில் பாய்கிறது. இந்த அணையின் நீர்ப்பிடிப் பகுதியில் வன சரணாலயம் தேக்கடி உள்ளது.

முல்லைப் பெரியாறு முழு கொள்ளளவு விவரம்

முல்லைப்பெரியாறு அணையின் மொத்த கொள்ளளவு 152 அடியாகும். ஆனால் முழுக்கொள்ளளவும் நீர் தேக்கினால் ஆபத்து என்று கேரள அரசு அணையின் மொத்த அளவான 152 அடியிலிருந்து 136 அடியாக குறைத்து விட்டது. இதுதொடர்பான வழக்கில் உச்சநீதி மன்றம் வல்லுனர் குழுவை அனுப்பி அணையை ஆராய்ந்து 142 அடி வரை உயர்த்த உத்தரவிட்டது. அணையின் மொத்த நீர் கொள்ளளவு 15.5 டி.எம்.சி ஆகும். அணையின் மொத்த உயரம் 155 அடி ஆகும்.

முல்லைப் பெரியாறு வானிலை

முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப் பகுதியில் தேக்கடி வன சரணாலயம் உள்ளது. இதன் கீழ்ப்பகுதியில் இடுக்கி அணை கட்டப்பட்டுள்ளது. மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டதால் எப்போதும் குளிர்ச்சியான காற்றும் இதமான சூழலும் நிலவி வருகிறது.

முல்லைப் பெரியாறு - அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்

தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை அருவி, கும்பக்கரை அருவி, சுருளி அருவி, மங்களதேவி ஸ்ரீகண்ணகி கோவில், வைகை அணை, பென்னிகுவிக் மணிமண்டபம் ஆகியவை சிறந்த சுற்றுலாத்தலங்கள் ஆகும். கேரளாவில் அணை அமைந்துள்ள இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு, தேக்கடி, இரவிகுளம் தேசியப் பூங்கா, இராமக்கல் மெட்டு பல்வேறு சுற்றுலாத் தலங்கள் இங்குள்ளன. தேக்கடியை ஒட்டி குமுளி பகுதியும் காண தகுந்த சுற்றுலாத் தலமாக உள்ளது. இங்கு மலையில் இருந்து பெறப்படும் வாசனை பொருட்கள் அதிகளவு கிடைக்கும் என கூறப்படுகிறது.

முல்லைப் பெரியாறு - பார்வையிடும் நேரம்

முல்லைப் பெரியாறு அணையை அனைத்து நாட்களிலும் காலை 6 அணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடலாம். ஆனால் காலை 7 மணி முதல் மாலை 3 வரை அணைப்பகுதியை பார்வையிடுவதுதான் சிறந்தது என கூறப்படுகிறது. இங்கு இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வெளிநாட்டினருக்கு 300 ரூபாய் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

Mullaperiyar Dam Water Level Today
English summary
Mullaperiyar Dam Water Level Today: Check complete details on Mullaperiyar Dam Water Level, History, Total Capacity, Weather, Visit Timings, Nearby Places to Visit and much more interesting facts on Mullaperiyar Dam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X