For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

மனம் போல் வாழ்வு-சுகி. சிவம்

நிமது வாழ்க்கையின் போக்கை நர்ணயிப்பது எது? எண்ணங்கள். நிமது எண்ணங்கள்.

வாழ்க்கையை நர்ணயிப்பது சென்ற ஜென்மங்களின் விதி என்று சொல்லாது, எண்ணங்கள் என்று சமயவாதிகள் சொல்வதா என்று யாரும் ஆச்சயப்பட வேண்டாம். ஏன் என்றால் விதி என்பதே நிமது ந்தைய ஜென்மத்தில் உருவான - செயலாகாத எண்ணங்களின் ஆற்றல்தான்.

நில்ல வலுவான எண்ணங்களை உருவாக்க உருவாக்க செயல் உருவாகிறது. வாழ்க்கையை அந்தச் செயல்கள் உருவாக்குகின்றன. எனவே எண்ணங்களை ஒழுங்குபடுத்துவது மிக மிக அவசியம். ஓர் இடத்தில் வீடு கட்டுகிறோம் என்றால் அங்கு வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணத்தை தலில் கட்டுகிறோம். எப்படி எப்படி வீடு இருக்க வேண்டும் என்கிற கற்பனை - நனைப்பு அதற்கேற்பவே வீடு உருவாகிறது. கர்ணன் குந்தி தேவியின் த்த மகன். இளம் வயதில் திருமணத்திற்கு ன்பே சூயன் லம் பெற்ற பிள்ளை அவன். அவனைஆற்றில் பெட்டியில் வைத்து விட்டாள் குந்தி. திருராஷ்டினத்தின் தேரோட்டி கையில் அந்தப் பிள்ளை கிடைத்தான். தேரோட்டிக்கு நிெடு நிாட்களாகக் குழந்தை இல்லை என்ற வேதனை இருந்ததால் ஆற்றில் கிடைத்த பிள்ளையை சேற்றில் கிடைத்த சிந்தாமணியாக வளர்த்தான். தேரோட்டியாக்கத் திட்டம் தீட்டினான் வளர்ப்புத் தந்தை. இது எந்தத் தந்தைக்கும் இயல்பான பலவீனம். தனது தொழிலுக்கு பதவிக்கு வேலைக்கு மகனைக் கொண்டுவர விரும்புவது பரம்பரை பலவீனம்.

தேரோட்டியாகும் மனோ நலையில் கர்ணன் இல்லை. எவ்வளவு கெஞ்சியும் நிான் ஒரு அரசனுக்குத் தேரோட்ட மாட்டேன் நிாளை ஒரு அரசனை தேரோட்ட வைப்பேன் என்று சாதித்தான். பிள்ளைப் பருவத்து நிாெள்ளைக் கதை என்று தகப்பன் எண்ணினான். ஆரம்பத்தில் ரண்டு பிடித்து அனுபவத்தில் வளைந்து கொடுப்பான் என்று அனுமானித்தான் தகப்பன்.

அந்தக் காலத்தில் அரசன் (ஷத்தியன்) அல்லாதவன் எவனுக்கும் அரசகுல வில்வித்தைகளைக் கற்றுத் தருவது வழக்கம் அன்று. ஒரு தேரோட்டியின் குமாரனுக்குத் தேரோட்டத்தான் தெய வேண்டுமே ஒழிய அரசகுல வில்வித்தை அவசியமற்றது. ஆடம்பரமானது என்று குருகுலங்கள் விலக்கிவைத்தன. கர்ணன் சளைக்கவில்லை. நராகப்புகளைச் சகித்துக் கொண்டே யற்சியில் ன்னேறினான். கடைசியில் பரசுராமடம் அவனுக்கு வில்வித்தை கிடைத்தது.

துயோதனன் தயவால் அங்கதேச அரசனானான். வாழ்நிாளில் அவன் நனைத்ததும் நறைவேறியது. பாரத யுத்த களத்தில் கர்ணன் தலைமை ஏற்ற போது சல்லியன் என்கிற அரசன் தனக்குத் தேரோட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். சல்லியன் சுலபத்தில் சம்மதிக்கவில்லை. ஊர்பேர் தெயாத தேரோட்டியின் மகனுக்குத் தேரோட்ட அவனுக்குவிருப்பம் இல்லை. அர்ச்சுனுக்கு அவனை விடவும் அந்தஸ்த்தில் உயர்ந்த கண்ணபெருமான் தேர் ஓட்டும் போது கர்ணனுக்கு அவனை விட உயர்ந்த நீ தேர் ஓட்டக் கூடாதா? என்ற துயோதனன் வாதம் மனதில் பதிந்தது. மகிழ்வுடன் தேர் ஓட்ட உடன்பட்டான். எப்படியோ இளம் வயதில் கர்ணன் நிெஞ்சில் விழுந்த எண்ணம் பாரத யுத்த களத்தில் செயலாகி விட்டது.

ஒரு தேரோட்டியாக தன் நலையை இறைவன் குறைவு படுத்திக் கொண்டதால் தான் விருப்பம் நறைவேறியது. அதை ன்னுதாரணம் காட்டி அல்லவா சல்லியனைத் துயோதனன் சம்மதிக்க வைத்தான். நிமது எண்ணங்கள் வலிமையாக இருந்தால் அதை நறைவேற்ற கடவுள் ஒத்துழைக்கிறான் என்பது இதன் சாராம்சம். எனது நிம்பிக்கை. எனவே எண்ணங்களைச் சீரமைப்பதும் - செம்மைப்படுத்துவதும் அதை வலிமைப்படுத்துவதும் நிமது தலையாய கடமை.

ஹிட்லர் தன்னை உலகத்தின் பெருந்தலைவனாகப் பலறை கற்பனை செய்து கொண்டான். ஒரு கால கட்டத்தில் உலகம் அவன் ஆணைக்கு அடங்கியும் இருந்தது. எனவே நிலலெண்ணம் உடையவர்கள் அதனை வலிமைப் படுத்துவதற்கு யற்சியில் ஈடுபடுவதும் அவசியம். பிரம்ம நலை எய்தும் ஞானியும் தான் பிரும்மம் என்று கேள்விப்பட்டு- படித்து- சிந்தித்து-தான் பிரம்மம் என்று எண்ணி தீர்மானித்து இறுதியில் தான் பிரும்மம் என்பதை உணர்ந்து பிரும்மம் ஆகிறான். அஹம், பிரம்மாஸ்சம் என்கிற வேதவாக்கியம் நிானே பிரம்மம் என்ற எண்ணத்தின் வெளிப்பாடே.

நீ எதுவாக உன்னை எண்ணுகிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்பது உபநடத வாக்கியம். தத்துவ மசி என்பதும் இதன் வெளிப்பாடே. வேடிக்கையான கதை கூட ஒன்றும் உண்டு. பாடசாலையில் ஆசியர் நிடத்திய பாடத்தை மாணவன் கவனிக்கவில்லை. ஆசியருக்குக் கோபம் வந்தது. என்ன சிந்தனை என்று மாணவனை நிாேக்கிக் கேட்டார். எங்கள் வீட்டில் புதிதாக வந்துள்ள எருமையை எண்ணுகிறேன் என்றான். அவனால் அதுபற்றிய எண்ணத்தில் இருந்து விடுபடவே டியவில்லை. ஆசியர் அவனை அழைத்தார். வகுப்பறையில் இருந்து வெளியில் சென்று ஆசை தீர அந்த எருமை பற்றிய ரசனையை டித்துக் கொண்டு சில நிாழிகை சென்று வகுப்பறைக்கு வரச் சொன்னார்.

சில நிாழிகைக்குப் பிறகு மாணவனை உள்ளே அழைத்தார் ஆசியர். மாணவன் பணிவுடன் ஐயா என்னால் இப்போது உள்ளே வர டியாது. ஏன் என்றார் ஆசியர். சிறிய இந்த வகுப்பறை வாசல் வழி என்னால் நுழைய டியாது. என் கொம்புகள் இடிக்குமே என்றான் மாணவன். எருமையைப் பற்றிய அவனது ஈடுபாடு அவனையே ஓர் எருமையாக எண்ண வைத்தது. தன்னையே அதுவாக அவன் எண்ணத் தொடங்கினான். இது மிகைப் படுத்திய கற்பனை என நனைக்க வேண்டாம். உண்மை இது.

இராமாயணத்தில் வாலிவாதம் நரந்தர சர்ச்சைக்குயது. அது சயா தவறா என்று ஆராய பேச்சாளர் - எழுத்தாளர் இல்லவே இல்லை. இராமன் கோணத்தில் இருந்தே இதுசயா தவறா என்று எல்லோரும் ஆராய்கிறார்கள். எனக்கொரு எண்ணம். வாலியின் எண்ணத்திலிருந்து ஆராய்ந்தால் ஒரு விளக்கம் கிடைக்கும். இராமனை அறவே விலக்கி நறுத்திவிட்டு நிான் பார்க்கிறேன். வாலி தன்னை யாராக நனைத்தான்? குரங்கு என்றே கருதினான். தன்னைக் குரங்கு என்று கருதியே மறை நிெறிக்கேற்ற திருமண றைகள் எமக்கு இல்லை. விருப்பப்படி இன்பம் நுகரும் விலங்கு வாழ்வு எம்டையது. நிாங்கள் குரங்குகள் என்ற பொருளில் பேசினான். அதாவது வாலி தன்னை ஒரு விலங்கு என்றே கருதினான். ஒரு விலங்கு போலவே அவன் வேட்டையாடப்பட்டான். உங்களை நீங்கள் யாராகக் கருதுவீர்களோ அவர்களாகவே நிடத்தப்படுவீர்கள் என்பது இயற்கை நயதி. அது வாலியின் வாழ்விலும் பலித்து விட்டது.

மரணத்தருவாயில் தான் வளர்த்த மானைப் பற்றிய கவலையுடன் இறந்த ஜடாபாதர் அடுத்தபிறவியில் மானாகவே பிறந்தார் என்று கூட ஒரு கதை உண்டு. எண்ணங்கள்தான் சொல்லாக வெளிப்படுகின்றன. எனவே சொற்களைக் கையாளுவதில் நிமக்கு எச்சக்கை வேண்டும். அதிகாலை ரயிலுக்கு போகும் நிண்பரை விடியாமல் ரயிலுக்குப் போனார் என்று அமங்கலமாகப் பேசக் கூடாது. சிற்றஞ் சிறு காலை என்று இளங்காலைப் பொழுதைப் பாடும் ஆண்டாள் போல் சொல்லாது போனாலும் காலையை விடியாமல் போனார் என்று அமங்கலப் படுத்தாமல் இருக்கலாம். நிெருப்பு என்றால் வாய் வெந்து விடுமா? இதெல்லாம் ட நிம்பிக்கை என்பார் சிலர். மங்கலமான சொற்கள் வாழ்வை மங்களமான பாதைக்கு இட்டுச் செல்லும்.

சீதை அக்னிப் பிரவேசம் செய்ய நிேர்ந்தது. இராமாயணத்தில் ஒரு துயரமான சம்பவம். ஆனால் அது விளக்கும் ஓர் உண்மை அதிர்ச்சியானது. நிமது சொற்கள் எவ்வளவு வலிவான விளைவு தரும் என்பதற்கு ஒரு சான்று. அதைப் பற்றி அடுத்த வாரம் சொல்கிறேன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X