For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

ஜிம்பாப்வேயுடன் 2-வது டெஸ்ட்: மேற்கிந்தியத் தீவுகளுக்கு வெற்றி வாய்ப்பு - தேவை 72 ரன்கள்

கிங்ஸ்டன்:

ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது கிரிக்கெட் டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இன்னும் ஒரு நாள் மீதமுள்ள நிலையில் அந்த அணி வெற்றி பெற 72 ரன்களே தேவை.

31 ரன்கள் பின்தங்கிய நிலையில் திங்கள்கிழமை தனது 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகள் அணி வேகப் பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சைச் சமாளிக்க முடியாமல் திணறியது. வீரர்கள் அனைவரும் வந்த வேகத்தில் அவுட்டாகி திரும்பி வண்ணம் இருந்தனர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் கபில் தேவின் சாதனையை முறியடிக்க 3 விக்கெட்டுகள் தேவை என்ற நிலையில் இருந்த வால்ஷ் சிறப்பாகப் பந்து வீசினார். இறுதியில் ஜிம்பாப்வே அணி 102 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வால்ஷ் 21 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் 435 விக்கெட்டுகளை வீழ்த்தி அவர் உலக சாதனை படைத்தார்.

ஜிம்பாப்வேயை 102 ரன்களுக்குச் சுருட்டிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 72 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் 2-வது இன்னிங்ஸைத் துவங்கியது. ஆட்ட நேர இறுதியில் விக்கெட் இழப்பின்றி 8 ரன்களை அந்த அணி எடுந்திருந்தது. இன்னும் ஒரு நாள் மீதமுள்ள நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் அணி நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக 4-ம் நாள் காலை தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 339 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.கேப்டன் ஜிம்மி ஆடம்ஸ் ஆட்டமிழக்காமல் 101 ரன்கள் எடுத்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X