For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

"மலர்களால் முழுவதும் மூடிய

இந்நொடியிலேயே இறக்க விரும்புகிறேன்-

நம்முடைய இந்தக் கனவில்"

-ETSWIN

எல்லோருக்கும் இப்படிப்பட்ட மரணம் வாய்ப்பதில்லை

பிறப்பு சாதாரணமானது

இறப்பு மகத்தானது

பிறப்பாவது தீர்மானிக்கப்படலாம்.

மரணத்தை யாரும் தீர்மானிக்க முடியாததாலேயே அது மகத்தானதாக மாறுகிறது-

மரணம் மலர்ச்சி

பிறப்பு வெறும் மொட்டு

பிறப்பு வெறும் ஊற்று

மரணம் அழகிய சங்கமம்.

உதயத்திலும் அழகியது அஸ்தமனம்-

உழைத்த தோள்களுக்கு ஓய்வு கிடைப்பதால்:

குட்டிப் பறவைகளை தேடித் தாய்ப் பறவைகள் சிறகடிப்பதால்:

அதனால் தான் மாலை வெயிலில் விட்டமின்-டி உடலுக்கு கிடைக்கும்

ரகசியத்தை இயற்கை தன் மடிக்குள் முடிந்து வைத்திருக்கிறது.

மரணத்தை அற்புதமாக்கிக் கொள்ள மனிதனால் முடியும்-

வாழ்வை அற்புதமாக்கிக்கொண்டு

அதன் அதிசயத்தை ஒவ்வொரு நொடியிலும் மூழ்கி ருசிப்பவன் மட்டுமே

மரணத்தை அழகாக்கிக் கொள்வான்

உள்ளுணர்வின் உச்சகட்டம் நிகழும் பொழுது

ஏற்படுகிற மரணம் தான் சமாதி.

அது தியானத்தின் பொழுது நிகழலாம்-

அதுவே மலர்களால் மூடி இருக்கும் போதும் நிகழலாம்.

மலர்கள் உதிர்வதை கண் மூடிஎண்ணங்களை சாத்தி ஆழ்ந்து கவனிக்கும் மனிதனே

மலர்களால் மூடப்படுவான்.

மலர்களால் மூடப்படுவது எவ்வளவு மென்மையான அனுபவம்-

உதிர்ந்த மலர்களும் மரணத்தின் குறியீடுகளே-

உதிரும் போதே அவை மரணத்தை தழுவி விடுகின்றன.

மலர்பவை எல்லாம் உதிர்பவை என்கிற உன்னதத் தத்துவம்

ஒவ்வொரு பூவின் இதழிலும் உபநிடதமாய் எழுதப்பட்டிருக்கிறது.

வாடிய பிறகும் அவை விட்டுச்செல்லும் சுகந்தம் நீடித்திருக்கிறது.

கனிகளெல்லாம் மலர்களின் ஆத்மாக்களை உள்ளடக்கியவை.

நல்ல நொடியை சாதாரண மனிதர்கள் வாழ்வதற்கு தேர்ந்தெடுக்கிறார்கள்-

அபரிமிதமான மனிதர்கள் சாவதற்கான நொடியை தேர்ந்தெடுக்கிறார்கள்.

வாழும் போது தேர்ந்தெடுக்கும் தன்மை உள்ளவர்களால்

மரணத்தை தேர்ந்தெடுக்க முடியாமல் போகிறது.

மரணத்தின் முன்பு கைகளை கட்டிக்கொண்டு தலையைக் குனிந்து

சர்வ நாடியும் ஒடுங்கி அவர்கள் நிற்பது பரிதாபமாக இருக்கிறது.

வாழ்கிற அவர்களின் ஒவ்வொரு கணமுமே மரணத்திற்கு இணையானதே-

கம்பீரமாக மரணத்தை எதிர்கொள்ள

நெஞ்சு நிமிர நிற்பவர்கள் பின்னால் மரணம் ஓடி ஒளிந்து கொள்கின்றது.

அவர்கள் சாகும் போதும் எஜமானர்களாக இருக்கிறார்கள்.

சுவையின் உச்சத்தில் உணவு இருக்கும் போது

அதை முடித்துக்கொள்ளும் பக்குவம் எல்லோருக்கும் வருவதில்லை.

உணவு மட்டுமல்ல: மகிழ்ச்சியளிக்கக் கூடிய எத்தகைய உணர்வும் உச்சத்தில்

இருக்கும் போதே அங்கிருந்து எகிறிக்குதிக்கும் திராணியிருப்பவர்கள் தான்

வைராக்கியம் படைத்தவர்களாக வரலாற்றில் வாழ்கிறார்கள்.

செல்வச் செழிப்பின் உச்சத்திலிருந்தும்

அரசப்பதவியின் சிகரத்திலிருந்தும்

துறவுக்கு குதித்ததால் தான் பூமியின் மீது நடந்த புனித மனிதராக

புத்தரை இங்கர்சால் முதல் ரஸல் வரை, இறைமையை

நம்பாதவர்களும் ஏற்றுக் கொண்டார்கள்.

நாமும் கூட ஏற்றுக்கொள்ளலாம்.

நமக்கு பிடித்தமான நொடியை-

அது பூரண நிலவொளியில் மரமல்லிகையின் மீது நறுமணம் படர்ந்த

இரவாக இருக்கலாம்.

குயில்கள் கூவும் மாலைப்பொழுதாக இருக்கலாம்-

சிகாபா பூச்சிகள் ஒலிக்கும் அமைதியான இரவு வேளையாக இருக்கலாம்

முன்பனி பெய்யும் காலைப் பொழுதாக இருக்கலாம்

பிடித்தமானவர்களைப் பார்த்து புன்னகைக்கும் நொடியாக இருக்கலாம்.

நம் விருப்பம் நம் கட்டை விரலின் ரேகைகளைப் போல் மாறுபடலாம்.

மரணம் என்பது வெறும் இறப்பு மட்டுமல்ல;

இறந்தகாலத்தை முழுவதுமாக பல்லி வாலைக் கழற்றி விடுவதைப் போல

ஞாபகத்திலிருந்து கழற்றி விடுவதும் மரணம் தான்.

மரணச்சிப்பிக்குள் எப்போதும் ஜனன முத்து இருப்பது திறந்து பார்க்கும்

தைரியமிருப்பவர்களுக்கு மட்டுமே தென்படுகிறது.

பழையனவற்றைக் கழற்றி விடுவதும் நமக்கு பயத்தை தருகிறது.

நாம் வாழ்ந்த வீட்டைக் காலி செய்யும் போதும்

ஊரை விட்டுக் கிளம்பும் போதும்

நமக்குள் இருக்கும் சின்னப்பகுதிகள் இறந்து போவதால் தான் வலி ஏற்படுகிறது.

அதிக ஞாபக சக்தி என்பது புதிய பிறப்புக்கான கருத்தடை சாதனம்

என்பதை பலர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

மலர்கள் முழுவதும் மூடிய நொடியில் முழுவதுமாக அமிழும் போது

கவலை எதற்கு? சஞ்சலம் எதற்கு?

மிகவும் முதிர்ந்த சுஷியைப்பற்றி

மாஸ்டருக்கு

எப்போதும் ஆழ்ந்த வருத்தம்""

-BUSON, YOSA

ஒவ்வொரு பருவத்திற்கும் ஓர் அழகு உண்டு.

தவழாமல் நடக்கிற குழந்தை காலத்தின் பிறழ்.

போன்சாய்" என்பது குழந்தைகளுக்கு கிழத்தனத்தை வரவழைக்கிற முயற்சி.

"முதிர்ச்சி" வேறு "முதன்மை" வேறு

நாற்று பூத்தால் அது காலத்தின் கோளாறு.

அக்கினி நட்சத்திரத்தின் குளிர்ச்சி ஆபத்தானது.

குழந்தைகளிடம் இல்லாத குழந்தைத்தனம் ஆபத்தானது.

"சுஷி" --சீடன்

அவனிடம் இருக்க வேண்டியது கேள்விகள்.-

சீடனே பதிலாக அமைந்தால் அது வெறும் அறிவிலிருந்து வெளியாகும் பதில்-

ஞானத்திலிருந்து வருவதல்ல-

அர்த்தமில்லாமல் திருப்பிச் சொல்கிற கிளியின் மொழியைப் போல -

சிறிது நேரத்திற்கு மட்டும் கிளர்ச்சியூட்டும்- பின்பு சலிப்பைத் தோற்றுவிக்கும்-

அதன் வரவேற்பிலும் மகிழ்ச்சியில்லை- ஊடலிலும் உண்மையில்லை.

உண்மையிலே குழந்தையாக இருப்பவர் தான் மாஸ்டராக முடியும்.

குழந்தையைப் போன்ற மனதில் தான் கேள்விகள் தோன்றும்.

காரணம் அந்த மனம் காலியாகவே இருக்கும்-

முதிற்சியடைந்த மனம் கனக்கும்-

மனம் வித்தியாசமானது-

முதிர முதிர அது உதிர மறுக்கிறது.

ஏற்கனவே "சுஷி" முதிர்ந்திருப்பதால்-

-அது உண்மையான முதிர்ச்சியாக இல்லாமல்

-இறுகிப் போகும் ஒன்றாக இருப்பதால்

-இனி முதிர வாய்ப்பு இல்லாமல் போவதால்

மாஸ்டருக்கு வருத்தம்.

சீடனின் பெயரைச் சொன்ன கவிதை மாஸ்டரின் பெயரைச் சொல்லவில்லை-

காரணம் பெயரையும் அடை.யாளத்தையும்

தொலைக்கிற போது தான் ஒருவர் மாஸ்டராக முடியும்.

அவர் வருத்தம் சோகத்தினால் அல்ல-

கருணையினால்-

உலகத்தில் மற்றவர்கள் மீது தோன்றும் அளவற்ற கருணையைக்

கண்களில் தேக்கி வைப்பவரே "மாஸ்டர்"

அவர் பெயரில்லை-

அவர் பிரபஞ்சப் பெருவொளியின் ஒரு துளி என்பதால்

(தூறல் வரும்)

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X