For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

மரணமடையும்போது அழுக்காவதும் நின்று விடுகிறது.

அழுக்கு வேறு; அழுகுதல் வேறு

மரணத்தில் நிகழ்கிற அழுகல்

அழுக்கை உடல் வெளியே தள்ள இயலாத தள்ளாமையால்தான்.

உலகம் முழுவதுமே துப்புரவுத் தொழிலாளிகளால்தான் இயங்குகிறது.

பூமியை துப்புரவு செய்வது உழவு -

நூலை துப்புரவு செய்வது நெசவு -

மண்ணைத் துப்புரவு செய்வது குயவு -

கடல் துப்புரவாவது மழை -

காற்று துப்புரவாவது தென்றல்

தொடர்ந்த துப்புரவால் சுழற்சி நடக்கிறது.

நீரும் சுத்திகரிக்கிறது -

நெருப்பும் சுத்திகரிக்கிறது -

நீர் சுத்திகரித்து, தான் அழுக்கடைந்து விடுகிறது -

நெருப்பு தன்னைத் தொடர்ந்து சுத்திகரித்து

அழுக்கடைகிறது.

தண்ணீர் மாசுபடுகிறது -

சுவை குன்றுகிறது -

கலக்கிறவற்றால்

சேர்கிறவற்றால்

கூடுகிறவற்றால்

நீர்கூட நீர்த்துப் போகிறது.

தீ அழுக்கடைவதில்லை -

தன்னைத் தொடர்ந்து சுத்தப்படுத்திக் கொண்டு

தூய்மையாயிருக்க

எரியத் தெரியவேண்டும்.

பலர் நினைக்கிறார்கள் -

நெருப்புக்கு எரிக்கத்தான் தெரியுமென்று -

அதுவும் எரிந்து போகிறதென்பது

அவர்களுக்குத் தெரியாமல் போகிறது.

தீ அழிக்கத் தானே செய்யும் -

அது எப்படி சுத்திகரிக்கிறது என்று -

அவர்களுக்குத் தெரியவில்லை

நீரைக் கூட சுத்திகரிக்க நெருப்பு தேவையென்று.

நீரைச் சூடாக்கினால்

தூய நீர் மட்டும் ஆவியாகிக் குளிரும்போதுதான்

தூய்மையான ஞீடிண்ணாடிடூடூஞுஞீ தீச்ணாஞுணூ கிடைக்கிறது.

தூய நீருக்கு

நிறமில்லை

மணமில்லை

சுவையில்லை அதைப் பருகவும் முடிவதில்லை.

கொஞ்சம் தூய்மையற்றுப் போகிறபோதுதான் -

கொஞ்சம் தாதுப் பொருட்கள் கலக்கும்போதுதான் -

நீர் இனிக்கிறது - சுவைக்கிறது.

தூயநீர் வரும்போதும் தாகத்தைத் தணிப்பதில்லை.

நீர் மட்டுமல்ல -

தங்கமும் அப்படித்தான் -

தூய தங்கம் வளைகிறது -

அதை நகையாக மாற்ற கொஞ்சம் அதன் தூய்மை கெடவேண்டும்.

தங்கம் மட்டுமல்ல -

மனிதர்களும்தான் -

முற்றிலும் தூய்மையானவர்கள் மரம்போல் இருப்பார்கள்-

சுவையற்று, உணர்வற்று, மணமற்று, நிறமற்று.

அவர்களுடன் நட்பு கொள்வதும் சிரமம் -.

நட்பு அவர்களைப் பயமுறுத்தும் -

தங்கள் தூய்மை எங்கேனும் அழுக்கடையும் ஆபத்து

நிகழ்ந்து விடுமோ என்று அவர்கள் நடுங்குவார்கள்

நேரடியாக இருக்கும்போது நெருப்பு எரிக்கிறது -

மறைமுகமாக வேறொரு ஊடகத்தின் மூலம் அணுகும்போது

அது சுத்திகரிக்கிறது -

அதுதான் நீரையும் ஆவியாக்கி

மழை பொழியச் செ-

கடலை வடிகட்டும்போதுதான் மேகமாகிறது.

சூரிய நெருப்பின் ஒளியில்தான்

செடி மண்ணிலிருக்கும் சத்தை மணிகளாகப் பிரித்தெடுக்கிறது -

அனைத்துப் படைப்புக்களும், இயக்கமும்

வெவ்வேறு சக்திகள் உற்பத்தி செய்யும்

உஷ்ணத்தின் விளைவாகத்தான்

தனக்குள் ஒரு நெருப்பு கனன்றால்தான்

தன்னைக் கற்பென்றும்,

நேர்மையென்றும்

சுய ஒழுக்கமென்றும் மனிதன் சுத்திகரிக்க முடியும் -

தனக்குள் வைராக்கியம் தீயாகக் கனியும்போதுதான்

உலகத்தின் அசுத்தத்தையெல்லாம் நீக்க

நம் கண்கள் கைகளாக நீளுகின்றன.

துப்புரவுத் தொழிலாளி

சுத்தம் செய்யும்போது

சோறு அவனுக்கு மட்டுமல்ல

அனைவருக்கும் கிடைக்கிறது -

துப்புரவு செய்பவர்கள் இல்லாவிடின்

நம்மைச் சுற்றிய அசுத்தத்திலேயே நாம் அடங்கிப் போவோம் -

அமுங்கிப் போவோம் -

மூச்சுவிட முடியாமல் - பேச்சு வர இயலாமல்.

(சாரல் இன்னும் தெளிக்கும்...)

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X