For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

ஒரு காட்டுல ரெண்டு சேவல்கள் இருந்துச்சி. ஊரை ஒட்டி அந்தக்காடு இருந்ததுனால, இரை மேயிறதுக்கு அங்கெ வசதியாஇருந்தது. மேயிற நேரம் போக மத்த நேரத்துல மரத்து அடியிலஉக்காந்து பேசவும், மண்குளிப்பு செய்துக்கிடவும் ஊர்க்கதைஅளக்கவும் வசதியா இருந்தது.

இப்படி இருக்கிறப்ப, கடவுள் ஒருநா வயசான கிழவன் வேசத்துலஇந்த உலகத்த சுத்திப்பாக்க வந்தாரு. இந்தக் காடு வழியா அப்படிஅவரு நடந்து வர்றபோது இந்தப் பாதையில ஒரே நெரிஞ்சிமுள்ளு எங்கன கண்டாலும் நடக்கமுடியாம கிடந்தது.

ஒரு எட்டு எடுத்து வைக்கவும் உள்ளங்கால்ல முள்ளு அப்பிரும்.அதெத் தொடச்சிட்டு அடுத்த அடி எடுத்து வெச்சா அந்தக்காலும்அப்பிடும். நடக்கவே முடியாம பரிதவிச்சிக்கிட்டே கடவுள்வாராரு.

இரை பிறக்கிக்கிட்டிருந்த இந்த சேவலுக ரெண்டும் இதைப் பாத்துஅடபாதரவே, வயசானகாலத்துல வீட்டுல கிடக்காம இப்பிடிமுள்ளுக்காட்டுலயா வந்து சீப்படணும்னு நினைச்சி அந்தமனுசருக்கு எப்பிடி உதவனும்னு யோசிச்சி, அவரு வாரவழிநெடுக இருந்த நெருஞ்சிமுள்ளுக அம்புட்டையும்கொத்திக்கொத்தி பிறக்கி சுத்தமாக்கிட்டதுக.

சேவல்க செஞ்ச உதவியப் பாத்து கடவுளுக்கு சந்தோசம்வந்துட்டது. அதுக ரெண்டையும் கூப்புட்டாரு. எங்கால்ல தச்சமுள்ளெ ஒங்க கண்ணுர தச்சதாக நினைச்சி எனக்கு ஒதவிசெஞ்சீகளே, ஒங்களுக்கு நா ஒரு உதவி செய்யனும்னுநினைக்கேம். என்ன வேணும் ஒங்களுக்குன்னு கேட்டாரு.

பிறகுதாந் தெரிஞ்சது; வந்தது மனுசரில்லெ, கடவுள்ன்னுட்டு.

அதுல ஒரு சேவலு கேட்டது - நா மனுசப் பிறவி ஆகணும்.மனுசப்பிறவி ஆகி நல்லது பொல்லது எல்லாம்அனுபவிக்கனும்னு கேட்டது.

இன்னொரு சேவல் கேட்டது - எனக்கு இந்தப் பிறவியே போதும்.நா யாரு கையாலயும் சாகாம எனக்கு நீண்ட ஆயுள் மட்டும்வேணும்னு கேட்டது.

நீங்க கேட்டபடியே ஆகட்டும்ன்னு வரங்கொடுத்துட்டு கடவுள்போயிட்டாரு.

அப்பவே முதச்சேவல் மனுசனா ஆயிட்டது. தன்னோட கூட்டாளிசேவல திரும்பிக் கூடப் பாக்காம, போயிட்டு வர்ரேம்ன்னுகூடச்சொல்லாம, மனுசப்பிறவி கிடைச்சதே பெரிசுன்னு ஊருக்குள்ளவந்தது.

வரும்போதே அவனுக்கு வயித்துப்பசி கிறுகிறுன்னு வருது.சேவலா இருக்கையில புழு, பூச்சி, சிந்துனது, சிதறுனது எதுஆம்புட்டாலும் பிறக்கித் திங்கலாம். மனுசப் பிறவி ஆச்சே;அப்பிடித் திங்கமுடியுமா. பெரிய வயிறு. ஒரு வட்டில் சோறும்ஒரு கும்பா குழும்புமில்ல வேணும். யாரு தருவா. வீடு வீடாப்போயி, பசிக்கி; சோறு குடுங்கன்னு கேட்டாம்.

தடிமாடு கிணக்க இருந்துக்கிட்டு பிச்சைச் சோறு கேக்கெனுகேட்டு, இம்புட்டுக் கஞ்சி ஊத்துனாக. அந்தக் கஞ்சியஉள்ளங்கையில வாங்கி நக்குனாம். கஞ்சி வாங்குறதுக்கு ஒருசட்டிகூட கிடைக்கலையான்ன கேட்டாங்க.

ஒரு சட்டிக்காக லோலோன்னு அலைஞ்சாம். எங்கெயும்கிடைக்கல.

தைப் பொங்கலுக்கு வீடுகள்ள இருக்க பழைய பானை சட்டிகளைதூர விட்டெறிஞ்சதுல ஒரு சட்டி கிடைச்சது.

தினோம் போயி கஞ்சி கேட்டா திட்டுராங்க. வேலைக்குப் போனாவேலை செய்யத் தெரியல. அங்கயும் திட்டுதாங் கிடைக்கி. என்னசெய்யிறது. மனுசப் பிறவி எடுத்தாச்சி.

எப்பிடியாவது உயிர் பிழைக்கனுமெ. முடிஞ்ச வேல செஞ்சிஅரைவயிறும் குறைவயிறுமா காலங்கழிக்காம். இந்த அளகுலஅவனுக்கு கல்யாண ஆசை வந்திருச்சி! என்னசெய்யிறதுன்னுட்டுத் தெரியல. யாரு பொண்ணு குடுப்பாஇவனுக்கு.

நல்லா இருக்கிற ஒரு பொம்பளைகிட்டெப்போயி, எனக்குபொண்டாட்டியா இருக்யான்னு கேட்டு ""விளக்குமாத்துப் பூசைகிடைச்சதுதாம் மிச்சம். இப்படி ஒரு நாலைஞ்சி இடத்துலகிடைச்சது.

சேவலா இருந்தபோது எவ்வளவோ பரவாயில்லயேன்னுதோணுது! இப்படி விளக்குமாத்து அடி வாங்கியும் பொண்டாட்டிஇல்லாம அவனால இருக்கமுடியல. அங்கிட்டும் இங்கிட்டும்தேடிப்பாத்து இவனுலயும் கேடுகெட்டவ ஒருத்திய கல்யாணமும்முடிச்சிக்கிட்டாம்.

கல்யாணம் முடிச்சிக்கிட்டாங்கிறதும் தப்புதான்; கூட்டியாந்துவச்சிக்கிட்டாம்னுதாம் சொல்லணும்.

அவளும் வந்ததே சரின்னு ஒரு புள்ளையவும் பெத்துக்கிட்டா.பொண்டாட்டி புள்ளென்னு ஆனதுதான், இவன உக்காரவிடமாட்டேங்கா, தூங்கவிடமாட்டேங்கா; எந்த நேரமும் நொச்சுநொச்சுனு கஞ்சிக்கில்லெ தண்ணிக்கில்லே அதெக் கொண்டா,இதவாங்கிட்டுவா அதவாங்கிட்டுவான்னு இவனபிச்சிபுடுங்குதா.

அதோட எனக்கு சேட்டமில்ல, எம் பிள்ளைக்கு சேட்டமில்லன்னுமருந்துச் செல்வு வேற. அலுத்து போயி வந்து, குடிக்கத் தண்ணிகொண்டான்னு இவங் கேட்டாக்கூட ""வாக்கிலியங்கெட்டபயலுக்கு தண்ணி வேற கேக்காக்கும்ன்னு வசவு பிடிச்சான்னாஅம்புட்டுத்தேம் புழுத்தவாயி குறுக்க போக முடியாது. ரொம்நொந்து போனாம் பாவம்.

ஒரு நா, இவனோட கூட்டாளியா இருந்த சேவலைப் போயிதேடிப் பிடிச்சி பாத்தாம். அப்பிடிப் பார்க்கும்போது அந்த சேவல்நாலஞ்சி வெடைக் கோழிகளோட கொக்கரிச்சிக்கிட்டு சந்தோசமாஇருக்கு. இவன் போனதும், அதுகளை எல்லாம் விட்டுட்டுஇவனப்பாக்க வந்தது. அதெப் பாக்க இவனுக்குப் பொறாமையாஇருந்தது.

பொண்டாட்டி பிள்ளைன்னு ஒரு தொந்தரவு கிடையாது.கஷ்டப்பட்டு வேல செய்யணும்ங்கிறதும் கிடையாது. இவங்கிட்டவந்து, என்னப்பா எப்பிடி இருக்கெ; நல்லா இருக்கயான்னுசேவல் விசாரிச்சது.

ரெண்டும் பாடுபஞ்சு பேச ஆரம்பிக்கும்போது மழை பெய்யஆரம்பிச்சது. பக்கத்துல இருக்க தீவனப்படப்புக்குஅடியிலபோயி சேவலு இருந்துக்கிட்டது. இவன்நனைஞ்சிக்கிட்டே நின்னாம்.

இந்த சமயத்துல அந்தக் கடவுள் வந்தாரு; இவங்க எப்பிடிஇருக்காங்கன்னு பாக்க. பாத்ததும், என்னப்பா எப்பிடிஇருக்கீகன்னு விசாரிச்சார். சேவல் சந்தோசமா சிரிச்சிட்டு வந்தது.இவன் மூசுமூசுன்னு அழுதுகிட்டே வந்தாம்.

மனுசனா ஆகணும்னு ஆடைப்பட்டெ, அதுபடிக்கே ஆனெ.இப்ப என்னத்துக்கு மூசுமூசுன்னு அழுவுத?

கடவுளே, நா மனுசனா ஆயி ""வாந்தது போதும். அது ஒருசென்மமா. என்ன இப்பவே பழையபடிக்கும் சேவலாஆக்கிருங்கன்னு கால்ல விழுந்தாம்.

என்னப்பா; எந்தி, எந்தி, நல்லது பொல்லது எல்லாத்தையுமேஅனுபவிக்கனும்னு போனியே, அனுபவிச்சயா இல்லியா?

கடவுளே நா நல்லதெ எங்கெ அனுபவிச்சேம். அங்கெஇருக்கதெப் பாத்தா நல்லதே கிடைதாதுன்னில்லெ தோணுது.பிறகு எப்பிடி இந்த மனுசங்க நூறு வருசம்வாழ்ந்துக்கிட்டிருக்காங்க?

நீங்க இப்பொ என்ன பழையபடிக்கும் சேவலா ஆக்கலைன்னா,நா எங்கனயும் போயி வங்கொலையா விழுந்து சாவுறத் தவித்துவேற வழி தெரியலன்னு திரும்பவும் கால்ல விழுந்தாம்.

கடவுளுக்கு இரக்கம் வந்துட்டது. அவனெ பழையபடிக்கும்சேவலா ஆக்கிட்டாரு. இருங்க சந்தோசமா இருங்கன்னு சொல்லிமறைஞ்சிட்டாரு.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X