For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோலாம்பூர் பேட்மிட்டன்: இன்று இந்தியா-டென்மார்க் போட்டி

By Staff
Google Oneindia Tamil News

ஒரு ஊர்ல அக்கா தங்கச்சி இருந்தாக. அக்காளுக்கு ரெண்டு ஆம்பிளைப்பிள்ளைக; தங்கச்சிக்கு பிள்ளை இல்ல.

ரெண்டு பேருமே ஒருத்தனுக்கே வாக்கப்பட்டிருந்தாங்க. ரெண்டாவது பிள்ளை பிறந்ததும் புருசன் செத்துப்போனாம். ரெண்டு பிள்ளைக அண்டியும் சவலையுமாபெத்ததுனாலயும் புருசன சாகக் கொடுத்ததுனாலயும் மூத்தவ நொந்து நொறுங்கி, ஒன்னுவிட்டு ஒருநா சேட்டமில்லன்னு படுத்துக்கிடுவா.

தங்கச்சிகாரிதாம் காட்டுலயும் வீட்டுலயும் வேலைபாத்து பிள்ளைகளையும் பாத்துக்கிடுவா.

இவுகளுக்கு சொந்தமா கொஞ்சம் காடுகரையும் வீடும் சொந்தமா இருந்திச்சி. அதனால பசிக்காம கஞ்சி குடிக்க முடிஞ்சது.

இப்படி இருக்கிறப்ப,

கார்த்திக மாசம் அடைப்பு வந்தது. பிடிச்ச அடைமழை விடமாட்டடேங்குது. வீட்டை விட்டு வெளிய தலைகாட்ட முடியல. அக்காளுந் தங்கச்சியும். காடுஎன்னாகுமோ வீடு என்னாகுமோன்னு அப்பிடிக் கவலைப் பட்டுக்கிட்டிருக்காக. பிள்ளைகளோடவும் ஈர விறகோடவும் கஷ்டப்பட்டிருக்காக.

அப்ப,

வீட்டுக் கதவ பரண்டுற சத்தம் கேட்டுது. தங்கச்சிக்காரிதாம் போயி கதவைத் தொறந்தா. பாத்தா... ஒரு சின்ன அழகான நாய்க்குட்டி, தெப்பமாநனைஞ்சி நடுங்கிட்டு இவகிட்ட அடைக்கலங் கேக்கு.

யாரு அதுன்னு அக்காக்காரி கேக்கா

""அக்கா அக்கா ஒரு நாய்க்குட்டிக்கா; ரொம்ப பாவமா இருக்கக்கான்னு சொன்னா.

நாமளே ஒரு பாவம் இதுல நமக்கு எதுக்கு நாக்குட்டி வெளியில தள்ளி கதவச் சாத்து.

வாடை தாங்க முடியாம பசியோட நடுங்கிக்கிட்டே முனகல் சத்தத்துல அழுது நாக்குட்டி.

எங்களப் போல நீயும் ஒரு அனாதைதானா; ஒனக்கு அம்மா இல்லியான்னு கேட்டா.

நாக்குட்டி அதையே சொல்லி அழுது.

என்ன ஆனாலும் சரிதாம் வந்துரு; நா இருக்கேம் உன்னெப் பாத்துக்கிடன்னு அத வீட்டுக்குள்ள தூக்கிட்டு வந்துட்டா.

பொ; அத வெளியில கொண்டு வீசிட்டுவா.நாமளே கஞ்சிக்கு லோலுப் படுதோம். நமக்கு என்னத்துக்கு நாக்குட்டி?

எனக்கு கிடைக்கிற கஞ்சியில நா ஊத்துவேம். அது இருக்கட்டும்ன்னு பிடிவாதமா நாக்குட்டிய தக்கவச்சிட்டா தங்கச்சிக்காரி. அதேபோல அவ தனக்குஊத்துற கஞ்சியிலதாம் அதையும் வளத்தா. நாக்குட்டிக்குத் தந்துட்டுதாம் எதையும் அவ சாப்புடுவா.

நாக்குட்டி மேல அக்காளுக்குப் பிரியமில்ல. அவளுக்கு பிரியமெல்லாம் தன்னோட பிள்ளைக பேர்லதாம். பிள்ளைக கொஞ்ச கொஞ்சமா வளந்து வாராக.அம்மாவுக்கு நாக்குட்டி பிடிக்காததுனால அவங்களுக்கும் நாக்குட்டி பிடிக்கலன்னாலும் அம்மாவுக்கு மேலு சேட்டமில்லாமப் போறப்பெல்லாம்சித்திதாம் வேலைக்குப் போயி தவசம் வாங்கிட்டு வந்து உலை வச்சி குத்திப் போட்டு கஞ்சி காச்சி எல்லாருக்கும் ஊத்தணும்.

பிள்ளைக பெரிசாகி, மாடுமேய்க்கவும் ஆடு மேய்க்கவும் அத்தக்கொத்து வேலைக்குப் போக ஆரம்பிச்சாக. கொஞ்சம்கொஞ்சமா சம்சாரிவேலகளையும் கத்துக்கிட்டு முழுச்சம்பளகாரங்களாகி வளந்து நல்ல இளவட்டங்களாகவும் ஆயிட்டாக.

இனி அவங்களுக்கு பொண்ணுக பாத்துக் கட்டி வைக்கணும். நல்ல வேல தெரிஞ்சவங்களுக்கு பொண்ணுக கிடைக்கிற தா கஷ்டம். நாந்தாரெம் பொண்ணு நீதாரெம் பொண்ணுன்னு வந்தாக.

ஒரு நல்ல நாளுல ரெண்டு பேத்துக்கும் கலியாணம் முடிஞ்சது.

வந்த மருமகள்களும் காட்டு வேலைக்குப் போனதுனால வரும்படி நிறையவே வந்ததோட மிச்சம் விளவும் ஆரம்பிச்சது. சாப்பாட்டுக்கும் எண்ணெதுணிமணிக்கும் பஞ்சமில்ல. இப்பிடீப் போனா, மிச்சம் விழுற பணத்துல காடுகரை வாங்கலாம். ஆடுமாடு வாங்கலாம் இன்னொரு பங்காளிக்கு ஒரு வீடும்கட்டிக்கிடலாம்.

கொஞ்ச நா தாம்; எல்லாம் சரியா போயிகிட்டிருந்தது. பிள்ளைங்களுக்கு பொண்டாட்டிக்காரிக வந்ததுதாம் ரெண்டு பிள்ளைகளுக்கும் சந்தோஷத்துலகண்ணுமண்ணு தெரியாமப் போயிருச்சி. பொண்டாட்டிக முந்திக்குள்ள போயி முனைஞ்சிக்கிட்டு அவளுக சொல்லறதுக்கெல்லாம் தலைய தலைய ஆட்டுதாக.

இப்ப எல்லாம் சாயந்திரம் வந்துட்டாப் போதும்; அத்தைமாருக - அக்கா தங்கச்சிக - ரெண்டு பேத்துக்கும் பார்வையே தெரிய மாட்டேங்குமாலைக் கண்ணுனால மந்தைக்குப் போகணும்ன்னா சின்ன அத்தை வளக்கிற அந்த நாய்தாம் கூட்டிடடுப் போகும். முதல்ல அந்த நாயுவும் சின்னஅத்தையவும்தான் மருமகள்களுக்குப் பிடிக்காமப் போயிருச்சி. மனுசனுக்கே சாப்பாட்டுக்கு வழி இல்ல. இதுல நாயி என்னத்துக்கு? இப்படித்தாம் சண்டைதொவங்கிச்சி.

நாய விரட்ட முடியாதுன்னு சின்ன அத்தெ சொல்லவும் அப்ப நாயக் கூட்டீட்டு எங்கனயாவது போங்கன்னு பதில் வந்தது.

நாள்ஆக ஆக அவங்க ரெண்டு பேத்துக்கும் பகல்லயும் பார்வை தெரியாம குறைஞ்சிட்டே வருது. வேலைக்குப் போக முடியல.

தான் குடிக்கிற கஞ்சிக்கு வேல செய்ய முடியலயேங்கிற கவலை. காலமெல்லாம் வேல செஞ்சோம், வேல செய்ய முடியாத மாட்டெ குறைஞ்ச விலைக்குவித்துறலாம்; வாங்க்கிக்கிடுவாக. மனுசர யாரு வாங்குவா. காசு பெறாத மனுசரா ஆயிட்டமேன்னு வருத்தம்.

சின்ன அத்தைய வீட்ட விட்டுப் போன்னு சொல்லீட்டாக. பெரிய அத்தைக்கு உங்களைப் பெத்த பாவத்துக்கு கஞ்சி ஊத்துறது ஞாயம். சின்ன அத்தைக்கும் அந்தநாயிக்கும் நாங்க என்னத்துக்கு கஞ்சி ஊத்தனும். எங்க தலையிலா எழுதியிருக்குன்னு சொல்லீட்டாக மருமக்க.

சின்ன அத்தையும் நாயும் இப்ப ஊருக்குள்ள பிச்சைக் கஞ்சி எடுத்துத்தாம் சாப்பிடுதாக. பாழடைந்த வீடு, அரசமரத்து நிழலு, மழை பேஞ்சா ஊர் மடத்துலஇப்பிடிப் போகுது பொழுது. அவளுக்கு நாய் துணை; நாயிக்கு அவ துணை.

பிச்சைக் கஞ்சிக்குப் போறப்ப அந்த அழுக்குத் தூக்குச்சட்டிய நாய்தாம் கவ்விக்கிட்டு வரும். அதுலதாம் கஞ்சி வாங்குறது. எப்பிடி வேல செய்வா இப்பஇப்பிடி ஆயிட்டதேன்னு சொல்லி ஒருவாய் கஞ்சிய தூக்குச்சட்டியில கொண்டு வந்து போடுவாக. அவக வீடு இருக்கிற தெருவுக்கு மட்டும் பிச்சைத் கஞ்சிவாங்கப் போறதில்ல.

கண்ணுதாம் தெரியலையே தவிர இப்பவும் அவ குதுரவாலி குத்திக்கொடுக்க, வரகு திரிக்கன்னு ஏண்ட வேல செய்ய முடிஞ்சது. காட்டு வேலைக்குமட்டும்போக முடியாது.

எப்பவாவது பெரிய அத்தெ தட்டுண்டு தடுமாறி தங்கச்சியப் பாக்க வருவா. தங்கச்சி பேரைச் சொல்லி கூப்பிட்டுக்கிட்டே வருவா அந்த பாழடைஞ்சவீட்டுக்கு. ரெண்டு பேரும் தொட்டு தடவிப்பாத்துக்கிடுவாங்க. கொஞ்ச நேரம் அழுவாங்க. கொஞ்ச நேரம் எதுவும் பேசாம அசையாம இடிஞ்சி போயிஉக்காந்திருப்பாங்க.

எப்பிடியெல்லாம் இந்தப் பிள்ளைகள நாம கஷ்டப்பட்டு வளத்தோம். நாம சாப்பிட வேண்டியத இவுகளுக்கு தந்துட்டு எத்தனைநா நாம வெறும் வயித்தோடகிடந்தோம்ன்னு நெனைச்சிப் பாப்பாங்க. பொத்திப் பொத்தி வளத்தமே என்ன ஆச்சி இப்பொ. எக்கா, எப்பிடி இருக்க.நீயாச்சும் பெத்த பிள்ளைகளோடஇரு."" இருக்க முடியாது போலிருக்கெ நெலமெ ஒண்ணும் சரியில்ல. நானும் ஒங்கூடதாம் வந்து இருக்க வேண்டியதிருக்கும்ன்னு சொல்லி வருத்தப்பட்டாஅக்காக்காரி.

ஒரு நா.

ரெண்டு மருமகளும் புருசங்காரங்களக் கூப்புட்டு இந்தா பாருங்க, உங்க ஆத்தா ஒரு நாளைக்கி நாழி ரெண்டு படி சோளத்த இடிச்சி காச்சி வச்சாலும் குடிச்சிப்போடுதா. வயித்துக்குள்ள அய்யனாருதாம் இருக்கு போலிருக்கு! இப்பிடி வெறுவாக்கலங்கெட்டவங்களுக்கு உக்கார வச்சி கஞ்சி ஊத்த எங்களால ஆகாது.அவுக அவுகளுக்கு ஏண்டபடி காத்துட்டுக்காச்சும் வேல பாத்துக் கொண்டாந்து தந்தா கஞ்சி ஊத்தலாம். ஒங்களுக்கு ஆத்தாதாம் வேனும்ன்னாஆத்தாளைக் கட்டி அழுங்க நாங்க இப்பவே வெளியேறிக்கிடுதோம்ன்னாங்க. பிள்ளைெகளால ஒண்ணும் பேச முடியல.

இவுக பேசுறத எல்லாம் கேட்டுக்கிட்டுதாம் இருக்கா. நம்மளால யாருக்கும் உவத்திரியம் வேண்டாம்ன்னு தங்கச்சி இருக்கிற இடத்துக்கேஅக்காவும் போயி சேந்துக்கிட்டா. இப்ப இவுகளுக்கு அந்த நாயிதாம் கஞ்சி எடுக்க ஊருக்குள்ள பொயிட்டு வருது. தூக்குச் சட்டிய வாயிலகவ்விக்கிட்டு வீடுவீடாய் போயி நிக்கும். அவுக ஊத்துற கஞ்சியும் வெஞ்சனத்தையும் கொண்டாந்து இவுககிட்டக் கொடுக்கும். அவுக சாப்பிட்டதுபோக நாய்க்கும் கொடுப்பாக.

ஊருக்குள்ள, நாயி கஞ்சி எடுத்து மனுசருக்கு ஊத்துறத அதியசமா பேசிக்கிடுதாங்க.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X