For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

மக்களுக்கு நேரடியாக சென்று பணியாற்றுவது மட்டும் சமூக சேவை அல்ல. தனிமனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, அவர்களின் பிரச்னையை அலசிஆராய்ந்து தீர்வு சொல்வது கூட ஒரு வகை சமூக சேவை தான். தனி மனிதர்களுக்குசெய்யும் சேவை கூட சமூகத்திற்கு செய்யும் சேவை தான்.

பல நேரங்களில் புரிந்துகொள்ளாமை. விட்டுக் கொடுத்தல் இல்லாமைதான்பிரச்னைகளுக்கு காரணமாக அமைகிறது. பொதுவாக குடும்பங்களில் காணவன் -மனைவி, மாமியார் - மருமகள் சண்டைக்கு காரணம், விட்டுக் கொடுக்கும்மனப்பக்குவம் இல்லாமல் இருப்பது தான். நீயா, நானா, என்ற ஈகோ’ பிரச்னை.

ஒரு காலத்தில் பெண்கள் வீட்டை விட்டே வெளியே வரமாட்டார்கள். கருத்து சொல்லசுதந்திரமில்லை. பாரதியார் காலத்தில் புதுமைப் பெண், புரட்சிப் பெண் என்றெல்லாம்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியிருந்தது. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. பெண்கள் எல்லாத் துறைகளிலும் முன் னறி விட்டனர். பெண்களுக்கெனஉரிமை வழங்க எவ்வளவு தான் சட்டம் கொண்டு வந்தாலும் அதனால் பயன்குறைவே. இவர்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. அதுவே அவர்களைமுன்னேற்ற பாதையில் இட்டுச் சென்றுவிடும்.

அரசு எவ்வளவு தான் சட்டம் போட்டாலும் பிரச்னைகள் தீரவே இல்லை. சிறு வயதுதிருமணம் நமது நாட்டில் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. வரதட்சணைபிரச்னைக்கு முற்றுப் புள்ளி இல்லை.

என்னதான் இடஒதுக்கீடு செய்தாலும் பெண்கள் சுயமாக தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். சொல்லும் கருத்தில் அவர்களது அறிவு பளிச்சிட வேண்டும்.இன்றைய சூழ்நிலையில் எந்தப் பெண்ணுக்கு சம உரிமை இல்லை? நம் நாட்டிலிருந்தேஆயிரக்கணக்கான பெண்கள் கம்ப்யூட்டர் கல்வி கற்று அமெரிக்காவிற்குசென்றுள்ளனர். எணவே, பெண்ணுக்கு திறமை இருந்தால், ஆண்கள் அதற்கு தடையாகஇருப்பதே இல்லை. திறமை இருந்தால் , ஆண்-பெண் பாகுபாடே இல்லாமல் போகும்.பெண்ணுக்கு திறமை இருந்து வாய்ப்பு உரிமை மறுக்கப்பட்டால் தட்டிக் கேட்பதில்தவறு இல்லை.

கோவை அருகே உள்ள கிராமப் பஞ்சாயத்தில் அனைவரும் பெண் கவுன்சிலர்கள்தான். ஆனால் அவர்களின் பின்னால் இருந்து குரல் கொடுப்பவர்கள்ஆண்களாகத்தான் உள்ளனர். இது போன்ற நிலை இன்னும் கிராமப் புறங்களில் இருந்துகொண்டேதான் உள்ளது.இந்த நிலை மாற வேண்டும்.

சில விஷயங்களில் அவசரப்பட்டு முடிவு எடுத்து விடுகின்றனர். படிப்பு விஷயங்களில்அவர்களின் முடிவு எப்படி இருந்தாலும், வாழ்க்கை பிரச்னையில் அனுபவம்வாய்ந்தவர்களின் ஆலோசனையை பெறுவது நல்லது என்கிறார் விமலா ரமணிகூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X