For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செயலை விட அதன் பயனை நேசித்தால்!

By Staff
Google Oneindia Tamil News
புலிகள் இயக்கத்தை திமுக ஏற்கவில்லை: கருணாநிதி அறிவிப்பு

சென்னை:

ஈபிஆர்எல்எப் தலைவர் பத்மநாபா கொலைக்கு பிறகு விடுதலைப் புலிகளை நாங்கள் ஏற்கவில்லை. அமிர்தலிங்கம்,சபாரத்தினம், உமாமகேஸ்வரன் என்று தன் இனத் தலைவர்களை எல்லாம் அழித்து விட்டு விடுதலைப் புலிகளால் எப்படிதமிழர்களுக்காக போராட முடியும்.

எனவே நாங்கள் புலிகளை ஆதரிப்பதில் இருந்து ஒதுங்கிக் கொண்டோம் என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமானகருணாநிதி தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் விஷயத்தில் முதல் முறையாக அவர் மனம் திறந்து இந்த விளக்கத்தை அளித்துள்ளார். 1989ம் ஆண்டுஆட்சியை புலிகள் பிரச்னை காரணமாக பறிகொடுத்தவர் முதல்வர் கருணாநிதி. அப்போதிருந்த மத்திய அரசு தெரிவித்ததகவல்களை புலிகளிடம் சொல்லி விட்டதாக குற்றம் சாட்டி, அப்போதைய திமுக அரசு கலைக்கப்பட்டது.

அதன் பின்னர் இதுவரையில் அவர் புலிகள் விஷயத்தில் திட்டவட்டமான நிலை எதையும் அறிவிக்காமல் இருந்து வந்தார்.இந்நிலையில் சட்டசபையில் திங்கள் கிழமை புலிகள் விஷயத்தில் திமுக நிலையை தெளிவுபடுத்தினார். இதுகுறித்து முதல்வர்கருணாநிதி பேசியதாவது:

தமிழ் ஈழத்தை ஆதரித்தோம்; அதற்காக கண்ணீர் விட்டோம் என்பதற்காக விடுதலைப்புலிகள் செய்த எல்லா காரியத்தையும்நாங்கள் ஏற்கவில்லை. அமிர்தலிங்கம், ஸ்ரீசபாரத்தினம் ஆகியோரும் எனக்கு நண்பர்கள் தான். ஆனால், அவர்கள் வெவ்வேறுஇயக்கத்தை சேர்ந்தவர்கள்.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கட்சியும், இலங்கையில் வெவ்வேறு இயக்கத்தை ஆதரித்து குரல் கொடுத்தன.

எம்ஜிஆர் விடுதலைப்புலிகளை ஆதரித்தார். திமுக டெலோ இயக்கத்தை ஆதரித்தது. எல்லா இயக்கங்களும் தமிழர்களுக்காகபோராடும் இயக்கம் என்ற சமன் நிலையில் தான் பார்க்கப்பட்டன.

முன்பு என்னுடைய பிறந்த நாளின்போது வெளிப்படையாக ஒரு அறிவிப்பு வெளியிட்டேன். பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லவருகிறவர்கள் தரும் உண்டியல் வருமானத்தை தமிழ் போராளிக் குழுக்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்தேன். அதன்படிஉண்டியல் வருமானத்தை போராளிக் குழுக்களுக்கு பிரித்துக் கொடுத்தேன். 3 குழுக்கள் பெற்றுக் கொண்டன. புலிகள் பெறமறுத்து விட்டனர்.

இலங்கையில் தான் அவர்களுக்குள் கோஷ்டிப்பூசல் என்றால், இங்கேயும் அதையே காட்டினர். என்னிடம் பணம் வாங்கினால்,ஒரு சிலர் கோபித்துக் கொள்வார்கள் என்று நினைத்து வாங்க மறுத்து விட்டனர். பின்னர் அந்த பணம் மற்றக் குழுக்களுக்கு பிரித்துவழங்கப்பட்டது. அந்தளவுக்கு தான் எங்களுக்கும் புலிகளுக்கும் உள்ள தொடர்பு இருந்தது.

சென்னையில் 19.6.90 அன்று பத்மநாபா கொலை நடந்தது. அதற்கு பிறகு நாங்கள் புலிகளை ஏற்கவில்லை. அமிர்தலிங்கம்,ஸ்ரீசபாரத்தினம், உமாமகேஸ்வரன் போன்ற தலைவர்களையும் புலிகள் கொன்றனர். இதன் பின்னர் புலிகளை நாங்கள்ஏற்கவில்லை.

தன் இனத்தை அழித்து விட்டு எப்படி தன் இனத்துக்காக அவர்களால் போராட முடியும். அதனால் தான் நாங்கள் புலிகளைஆதரிக்கவில்லை. அப்போதே ஒதுங்கிக் கொண்டோம். இந்த ஆட்சி வந்த பிறகு புலிகளுக்கு ஆதரவாக கடத்தல்நடவடிக்கையில் ஈடுபட்ட 51 பேர் கைது செய்யப்பட்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 4வயர்லெஸ் செட்டுகள் பறிதல் செய்யப்பட்டன. 96 மே மாதத்திற்கு பிறகு தமிழகத்தில் விடுதலைப்புலிகள் சம்பந்தப்பட்டவன்றைச் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை.

தமிழ் ஈழத்தை ஆதரிக்கிறேன் என்பது வேறு. பேச்சுவார்த்தை மூலம் தமிழ் ஈழம் கிடைத்தால் மகிழ்வேன் என்பது வேறு.இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளாமல் நான் தமிழ் ஈழத்தை ஆதரிப்பதாக கூறாதீர்கள் என்றார்முதல்வர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X