For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

இலைகளில்லா மரத்தில்

இறங்கியது காகம்

இலையுதிரில் சாயும் இரவு

இந்த ஹைகூ கவிதை அற்புதமான படிமங்களை

உள்ளடக்கியது.

இலைகளில்லா மரம்-

காகம்-

இரவு-

-----------------------------------------------------

இந்த மூன்-றுமே கவிதைகளால் சிலாகிக்கப்படுகிறது இல்லை-

இவற்றை நேர் எதிர் படிமங்களாய்

இந்தக் கவிதை தூக்கிப் பிடித்திருக்கிறது-

--------------------------------------------------

காகம்.......

புறாவும் காகமும் இருத்தலின் இரண்டு பக்கங்கள்-

இரவு........

இரவும் பகலும் நாளின் இரண்டு பகுதிகள்

இலையுதிர்........

இலையுதிரும் வசந்தமும் பருவங்களின் இரண்டு பரிமாணங்கள்

காகத்திற்கும் தாழ்வு மனப்பான்மை

அதன் கருமை நிறத்தால் ஏற்படவில்லை-

அதிக எண்ணிக்கை இருப்பதாலும்,

அதிக ஆண்டுகள் வாழ்வதாலும்

காகங்கள் மனிதர்களுக்கு இளக்காரமாயின.

ஒருவேளை எண்ணிக்கையில் குறைந்திருந்தால்

மலர்களைப் போல உதிரத் தெரிந்திருந்தால்

அவையும் அபூர்வமாயிருக்கும்,

தாழ்வு மனப்பான்மை அடிக்கடி அலங்கரிக்கத் துணிவதுபோல்

அதீத எச்சரிக்கையுடன் இருக்கவும் - செய்கிறது.

அதனால்தான் அவை யாரையும் நம்புவதில்லை.

அதிகமாயிருப்பது எதுவுமே சலித்துப் போகிறது-

எப்போதாவது தட்டுப்படுவது

மனிதனின் மனத்தை ஈர்க்கிறது-

நாம் காகங்கவைப் பறவையாகவே கருதுவதில்லை-

புறாவை, கொக்குகளை, கிளிகளை நாம்

பறவைகளாக உருவகப்படுத்திய அளவுக்கு காகத்தைச் செய்யவில்லை-

யாரேனும் வீட்டில் காகத்தை வளர்ப்பதைப் பார்த்திருக்கிறீர்களா?

------------------------------------------------

இரவு - ஆழமானது, வெளிச்சத்திலும் விசாலமானது.

இரவு ஏற்றத்தாழ்வுகளைப் போக்குகிறது-

இரவு- நிறங்களை வெல்லுகிறது-

வளர்ச்சிக்கு வழி விடுகிறது.

இரவு- புலன்களைத் தீவிரப்படுத்துகிறது.

----------------------------------------------

இரவு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது-

இரவு சமத்தன்மையை அளிக்கிறது.

உழைக்கிற தோள்களுக்கு ஓய்வு தருகிறது-

இரவு இல்லாமலிருந்தால்

வெளிச்சம் நிச்சயம் சபிக்கப்பட்டிருக்கும்.

------------------------------------------------

தீவுகள் பூமியை சொந்தம் கொண்டாடலாம்-

வானத்தை எப்படி முடியும்?

வானமும், நிலவும், ஞாயிறும், நட்சத்திரங்களும், காற்றும்

எல்லோருக்கும் பொதுவானவை-

சிறகுகளை விரித்தும் பறவைகளுக்கு பூமி முழுமையுமே

கணக்கற்ற கூடுகளின் கைகுலுக்கும் மஞ்சம்

இலையுதிர் - மரம் ஓய்வெடுக்கும் பருவம்

மரம் தியானிக்கும் நேரம்.

------------------------------------------------------

இரவையும் கவிதைகள் பாராட்டுவதில்லை-

இலையுதிரையும் கவிஞர்கள் பாடியதில்லை.

இலைகளில்லாத இலையுதிரும் இரவும் போன்றே:

எல்லா மரங்களிலும் ஓர் சமத்தன்மையை உண்டாக்குகின்றன.

இலையுதிர் காலத்தில்

இலைகளில்லாத மரத்தில்

எந்தப் பறவை வந்து அமரும்?

--------------------------------------------------

இலையுதிர் வசந்தத்தைப் பிரசவிக்கும் கர்ப்ப காலம்-

தேவையில்லாதது தேவையானதற்குத் தேவையாயிருக்கிறது-

பழத்தில் தோல் சதைப்பகுதியை பழுதுபடாமல் காப்பாற்றுவது போல்

(தொடர்ச்-சி அ-டுத்-த பக்-கம்)

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X