For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
காலத்-தை வென்-ற ரயில் என்-ஜின்-கள்

டார்ஜிலிங் (மேற்கு வங்கம்):

பிரபல ஹிந்தித் திரைப்படம் ஆராதனா"(தமிழில் சிவகாமியின் செல்வன்). ராஜேஷ் கன்னா, ஷர்மிளா தாகூர்நடித்தது. அதில் ஒரு பாட்டு மேரே சப்னோக்கி ராணி கப் ஆயே கிதூ..." இதில் ஷர்மிளா தாகூர் ரயிலில் வ-ரு-வார்.ரயில் பாதையை ஒட்டிய சாலையில் ராஜேஷ் கன்னா ஜீப் ஓட்டிய-வா-ரே இந்-தப் பா-ட-லைப் பா-டு-வார்.

எல்லோராலும் இந்த பாடலை எளிதில் மறக்க முடியாதோ அதேபோல், ஷர்மிளா தாகூர் பயணம் செய்த அந்தமலை ரயிலையும், ரயில் பாதையை ஒட்டிய சாலையையும், மலைப் பிரதேசத்தையும், பள்ளத்தாக்கையும் யாராலும்மறந்து விடமுடியாது. அந்த மலைப் பிரதேசம் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மலைப் பகுதி. அந்த ரயில் உலகப்பிரசித்தி பெற்ற சிறிய மலை ரயில். (தமிழகத்தில் ஊட்டியில் இருப்பது போல்)

இந்த சிறிய மலை ரயில் டார்ஜிலிங் மலைவாழ் மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றாகி விட்டது. தினமும்,அந்த ரயிலில் விசில் சத்தத்தைக் கேட்டதால்தான் தூக்கம் வரும் நிலைக்கு அவர்கள் ஆளாகிவிட்டனர்(மிகையில்லை). இரண்டு நீராவி இன்ஜின்கள், 3 அழகிய பெட்டிகள், சுமார் 86 கிலோமீட்டர் நீள ரயில் பாதை, வழிநெடுகிலும், அழகிய பள்ளத்தாக்குகள், சுரங்கப் பாதைகள், நீரோடைகள் என வழி நெடுகிலும் இந்த அழகிய சிறியமலை ரயில் பயணத்துக்கு அழகு சேர்க்கின்றன.

இந்தியாவில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் அம்சங்களில் இந்த சிறியமலை ரயிலும் ஒன்று. 104 ஆண்டு பழைமை வாய்ந்த இந்த மலை ரயிலின் நீராவி இன்ஜின்களுக்கு தற்போது ஓய்வுகொடுக்கப்பட்டுள்ளது. ஓய்வுதான் என்றாலும், அது இதுவரை பதித்த தடயங்களை யாராலும் அழித்துவிடமுடியாது. மலைப் பாதையில் இடையே இடையே வரும் சுரங்கப் பாதைகளில் நீராவி இன்ஜினிலிருந்துவெளியேறிய கரும்புகை படிந்துள்ளது. இது என்னென்றும் நிலைத்து நிற்கும்.

தற்போது புதிதாக இரு டீசல் இன்ஜின்களை இந்த சிறிய மலை ரயிலில் இணைக்கப்பட்டுள்ளன. புதிதுதான்என்றாலும், அதன் விசில் சத்தத்தை மக்கள் அதிகம் விரும்பிய பழைய ரயில் இன்ஜினின் விசில் சத்தம் போல்மாற்றப்பட்டுள்ளது.

குயின் ஆஃப் ஹில்ஸ்" என்று அழைக்கப்படும் இந்த ரயிலில் இணைக்கப்பட்டுள்ள சுமார் 800 ஹார்ஸ் பவர் இருஇன்ஜின்கள் ரயிலின் வேகத்தை அதிகரிக்கும். பழைய நீராவி இன்ஜின் மூலம் எட்டரை மணி நேரமாக இருந்தபயண நேரம் தற்போதைய டீசல் இன்ஜின்களால் 6 மணி நேரமாகக் குறையும். மேலும், கூடுதலாக இருபெட்டிகளும் ரயிலில் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கூடுதல் சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்ய முடியும்.

அமெரிக்க எழுத்தாளர் மார்க் வெய்ன், 1930-களில் இந்த சிறிய மலை ரயிலில் பயணம் செய்து அதன் மூலம்கிடைத்த அனுபவத்தை அவர் ஒரு புத்தகமாவே எழுதியுள்ளார். இந்த மலை ரயில் பயணம் தனது வாழ்க்கையில்மறக்கமுடியாத அனுபவம் என்று அவர் விவரித்துள்ளார்.

சுமார் ரூ.4 கோடி செலவில் இரு புதிய டீசல் இன்ஜின்கள் இந்த மலைப் பாதையில் இயக்கப்படவுள்ளன. இவற்றைவட-கிழக்கு ஃபிரண்டியர் ரயில்வே பராமரிக்கும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த புகழ் பெற்ற 86 கிலோமீட்டர் நீளப் பாதையில் ஓடுவதிலிருந்துதான் நூற்றாண்டு பழைமையான இரு நீராவிஇன்ஜின்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதே தவிர, இம் மலைப் பாதையில் உள்ள இரு குறைந்த தூரப்பயணத்துக்கு இவை பயன்படுத்தப்படும். அதாவது, டார்ஜிலிங்-குர்சியாங் இடையேயும், டார்ஜிலிங்-கூம்இடையேயும் இந்த இன்ஜின்கள் இயக்கப்படும்.

நிதிப் பற்றாக்குறை, சிறிய நீராவி இன்ஜின்கள் இல்லாமை போன்ற காரணங்களால் இந்த இரு பாதைகளிலும் ரயில்போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆனால், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வேண்டுகோளுக்குஇணங்க மீண்டும் இப் பாதைகளில் போக்குவரத்து செயல்படுத்தப்படவுள்ளது.

இந்த சிறிய மலை ரயிலை "புராதன ரயில் என்று யுனெஸ்கோ அறிவித்துள்ளது. உலகிலேயே மிக உயரத்தில் உள்ளரயில் நிலையங்களில் ஒன்று கருதப்படும் கூம் ரயில் நிலையத்தை மாதிரி ரயில் நிலையமாக மேம்படுத்தவும், அங்குஅனைத்து அம்சங்களுடன் கூடிய ரயில் கண்காட்சியை அமைக்கவும் ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சுமார் ரூ. 2 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் இந்த ரயில் கண்காட்சியை, வரும் ஜூன் மாதம் குடியரசுத்தலைவர் கே.ஆர். நாராயணன் துவக்கி வைக்கிறார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X