For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

- ஹேமங் பதானி

By Staff
Google Oneindia Tamil News

மே 26, 2000


கடவுளுக்கு நன்றி... - ஹேமங் பதானி

சியக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியில் சேர்க்கப்படுவோமா என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்களும்ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் தமிழகத்தின் ஹேமங் பதானி இந்தியஅணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய அணியில் தமிழக வீரர்களே இல்லாத காலம் இருந்தது. அதன் பிறகு ஸ்ரீகாந்த் அணியில் நிரந்தரமாக இடம்பெற்றார். அவருக்குப் பிறகு அவ்வப்போது தமிழக வீரர்கள் இந்திய அணியில் இடம் பெற்றனர். இப்போது,ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் 3 தமிழக வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ராபின் சிங், டி. குமரன்ஆகியோருடன் புது முகமாக ஹேமங் பதானி இடம் பெற்றுள்ளார். இது அவருக்கே ஆச்சரியமான விஷயமாகும்.

தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்திய அணியில் இடம் பெற்றுள்ள புதிய நம்பிக்கை நட்சத்திரம்பதானியுடன் பேட்டியைத் துவங்கும் முன்...இரண்டாவது முன்னுரை...

ஹேமங் வீடு, சென்னை புரசைவாக்கத்தில் உள்ளது. வீட்டு விலாசத்தை விசாரித்தால், வாங்க சார் என்று அவரதுவீட்டுக்கே அழைத்துச் செல்கின்றனர் அப்பகுதி மக்கள்.

ரொம்ப பெருமையா இருக்குதுங்க. நம்ம ஊரிலிருந்து, எங்க தெருவிலிருந்து ஒருத்தர் இந்தியாவுக்காகவிளையாடப் போகிறார் என்று கேள்விப்பட்டவுடனேயே குஷியாயிட்டோம். நிறைய ரன் எடுத்து நல்லவிளையாடனும்னு ஆண்டவன் கிட்ட வேண்டிக்கிட்டிருக்கோம் என்கிறார்கள் ஹேமங்க் வீடு இருக்கும்தெருவாசிகள்.

ஆசியக் கோப்பைக்கான இந்திய அணிக்கு பதானி தேர்வு செய்யப்பட்ட செய்தி வெளயானதுமே,சென்னைவாசிகள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தார்கள் என்றால் மிகையில்லை.

ஒரு மாதம் முன்பு, மும்பையில் நடந்த ரஞ்சி டிராபி அரையிறுதிப்போட்டியில் மும்பைக்கு எதிராக முதல்இன்னிங்ஸில் 162 ரன்னும், இரண்டாவது இன்னிங்ஸில் 63 ரன்னும் எடுத்ததுதான் ஹேமங் பதானி இந்தியஅணிக்குள் நுழைய காரணமானது

இதோ பதானியின் பேட்டி...

ஹேமங் வீடு. காலிங் பெல்லை அழுத்தியவுடனேயே, ஹலோ... வாங்க...என்று வாய் நிறைய சிரிப்போடுவரவேற்கிறார் பதானி.

ரொம்ப சந்தோஷமா இருக்கு . முதலில் அப்பா, அம்மாவுக்கும், அடுத்து கடவுளுக்கும் நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறேன். என்றபடியே பேச ஆரம்பிக்கிறார்.அப்பா (கமல் பதானி), பொழுது போக்குக்கா கிரிக்கெட் விளையாடச் செல்லும்போது நானும் உடன் செல்வேன்.ஆறு வயசுல பேட் பிடிக்க ஆரம்பிச்சேன். கிரிக்கெட்டுக்காகவே, மைலாப்பூரில் உள்ள சாந்தோம் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தேன். ஸ்போர்ட்ஸுக்கு நல்ல பள்ளி அது. பள்ளித் தோழர்களுடன் ஹேமங் பதானி (இடமிருந்து 2-வது). முதலில் இருப்பவர் இந்திய அணிக்குத் தேர்வுசெய்யப்பட்டுள்ள மற்றொரு தமிழக வீரர் வேகப்பந்து வீச்சாளர் டி. குமரன்
தினசரி காலை ஐந்து மணிக்கு ப்ராக்டிஸுக்கு கிளம்பிடுவேன். ஸ்கூல் முடிந்து மறுபடியும் ப்ராக்டிஸ். ராத்திரி வீடுதிரும்ப எட்டு மணியாயிடும். அப்போ பேட், ஸ்டெம்ப்னு ஒரு பெரிய பையைக எடுத்துத்துட்டு பஸ்ல ஏறினாஉடனே இறக்கிவிட்ருவாங்க, இவ்வளவு பெரிய பையையெல்லாம் கொண்டுவராதேன்னு திட்டுவாங்க. வேறவழியில்லைன்னு அடுத்த பஸ் பிடிச்சு வீட்டுக்கு வருவேன். இன்னிக்கு சந்தோஷமா இருக்கு.

பள்ளியில் படிக்கும்போது எனக்கு கிரிக்கெட் மாஸ்டராக இருந்த சுவாதி, ராம் இருவரும் இப்பொழுதும்வழிகாட்டியாக இருக்கிறார்கள். ராபின்சிங், குமரன் எல்லோரும் நல்ல நண்பர்கள். மற்றபடி டெண்டுல்கர், கபில்தேவ், அஸார், வாசிம் அக்ரம், ராபின்னு பிடித்தவர்கள் ஏராளமாக இருக்கின்றனர்.

வீட்-டில் -ஹா-யா-க ஹேமங் பதானி இவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு ஸ்பெஷாலிட்டி உண்டு. எனக்குப் பிடித்தவர்கள் என்பதைவிட எனக்குஇன்ஸ்பிரேஷனாக இருந்தவர்கள் அவர்கள். நிறைய சாதிக்கனும்னு மனசுல வெறியிருக்கு என்று சிரித்தவர்அப்பா, அம்மாவை அழைக்கிறார்.
எனது கனவுகள் நனவாகிவிட்டது. டாக்கா மேட்சில் நல்ல விளையாடுவான். எனக்கு அவன் மேல்நம்பிக்கையிருக்கிறது என்று சொன்ன பதானியின் அப்பா கமல் பதானி,முன்னாள் லீக் மேட்ச் வீரர்.பொழுதுபோக்குக்காக கிரிக்கெட் விளையாடப் போகும்போது இவனையும் கூட்டிகிட்டு போவேன். ஒரு நிலையிலஇவன் கிரிக்கெட்டை விடாமல் பிடிச்சுக்கிட்டான். நம்ம ஸ்டாண்டர்டு இவ்வளவுதான்னு நமக்குத் தெரியும்.அதனால பெருசா ஏதும் முயற்சி எடுக்கலை என்றார் அவர்.

இந்தியாவுக்காக விளையாடப் போறான்னு நினைச்சாலே ரொம்ப பெருமையா இருக்கு. எல்லாம் கடவுள் அருள்.அடுத்து கடுமையான உழைப்புக்குக் கிடைச்ச பரிசு இது. காலையில் கிளம்பினான்னா ராத்திரிதான் வீட்டுக்குவருவான் என்றார் அம்மா விபா பதானி.

நான் காலையில் கிளம்பனும்னா, அம்மா நாலு மணிக்கே எழுந்து எல்லாம் செஞ்சு தருவாங்க. அப்பாவும் கூடவேஎழுந்து எல்லாவற்றையும் ரெடி செய்து கொடுப்பார். எனக்காக அவர்கள் உழைச்சதுக்கு கிடைச்ச பரிசு இது.இவர்கள் இல்லாமல் நான் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது என்றார் ஹேமங் பதானி.

கிரிகெட் தவிர வேறு என்ன பொழுதுபோக்கு...

சினிமா பார்ப்பேன். இங்கிலீஷ் படம்தான். தமிழ் பேச வருமே தவிர படம் பார்த்து புரிந்து கொள்ளும் அளவுக்குத்தெரியாது. ஆனா ரஜினி படம்னா பிடிக்கும். ரஜினி பேசும் தமிழ் புரியும். பிறகு கொஞ்சம் படிப்பு, நிறைய தூக்கம்.இவ்வளவுதான். பந்-து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத்துடன் ஹேமங் பதானி
ஆசிய கோப்பைப் போட்டியில் சதத்தை (100 ரன்கள்) எதிர்பார்க்கலாமா...

ஆசியக் கோப்பையை இந்தியா ஜெயிக்க வேண்டும். ஜெயிக்கும். பொதுவாக அணி ஜெயிக்கவேண்டும் அதுதான்முக்கியமே தவிர, தனி நபர் ஜெயிப்பது என்பது இல்லை. இந்தியா ஜெயிக்க வேண்டும். அதற்காக நான்விளையாடுவேன். அதுதான் இப்போதைய எனது லட்சியம் என்றார் இந்த 26 வயது கிரிக்கெட் வீரர்.

நாம் அவருக்கும், இந்திய அணிக்கும் ஆல் த பெஸ்ட் சொல்லி விடைபெற்றோம்.

பேட்டி - பா. ராஜநாராயணன்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X