தமிழகத்தில் இன்று
டெல்லி:
சமதா கட்சித் தலைவர் நிதிஷ் குமார் உள்பட மேலும் இருவர் மத்திய அமைச்சர்களாக சனிக்கிழமை பதவி ஏற்றுக்கொண்டனர்.
மத்திய அமைச்சர்களாக இருந்த நிதிஷ் குமார், நவீன் பட்நாயக், உமா பாரதி ஆகியோர் ராஜிநாமா செய்ததைஅடுத்து 3 இடங்கள் காலியாக இருந்தன.
பிகார் முதல்வர் பதவிக்காக நிதிஷ் குமாரும், ஒரிசா முதல்வர் பதவிக்காக நவீன் பட்நாயக்கும், உள்கட்சிப்பிரச்சினை காரணமாக உமா பாரதியும் மத்திய அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், பிகார்முதல்வராக முதலில் தேர்வு செய்யப்பட்ட நிதிஷ் குமார், அமைச்சரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கமுடியாமல் தோல்வியடைந்தார். தற்போது லல்லு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி பிகார் முதல்வராகஉள்ளார்.
பிகார் முதல்வர் பதவிக்காக, மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்த நிதிஷ் குமார், பிகார் முதல்வர் பதவிகிடைக்காததால் விரக்தியில் இருந்தார். இதையடுத்து அவர் மீண்டும் மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்படலாம்என்று கருதப்பட்டது.
அதன்படியே, சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில் நிதிஷ் குமாருடன், பிஜு ஜனதாதளத்தைச் சேர்ந்த அருண் சேதி, பிரிஜ் கிஷோர் திரிபாதி ஆகியோர் மத்திய அமைச்சர்களாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். நிதிஷ் குமார் காபினெட் அமைச்சரவாகவும் மற்ற இருவர் இணை அமைச்சர்களாகவும்பதவியேற்றனர்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் மூன்று பேருக்கும் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தற்போது வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 74 அமைச்சர்கள் உள்ளனர். இவர்களில் 29 பேர்காபினெட் அமைச்சர்களாகவும், 7 பேர் இணை அமைச்சர்களாகவும், 38 பேர் துணை அமைச்சர்களாகவும்உள்ளனர்.
யு.என்.ஐ.