தமிழகத்தில் இன்று
விவ-சா-யத்-து-றை-யை- மு-றை-ப்-ப-டுத்-த பு-தி-ய நடவடிக்கைக் குழு
டெல்லி:
மத்திய வேளாண் துறையில் நடவடிக்கைக் குழு விரைவில் ஏற்படுத்தப்படும் என்றுமத்திய வேளாண்துறை அமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்தார்.
மத்திய வேளாண்துறை அமைச்சராக வெள்ளக்கிழமை மீண்டும் பதவி ஏற்றுக் கொண்டநிதிஷ் குமார், திங்கள்கிழமை அலுவலகம் வந்து தனது பணிகளைத் துவங்கினார்.அங்கு நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
பட்ஜெட்டில் பாதுகாப்புக்கு அடுத்தபடியாக வேளாண்மைத் துறைக்குத்தான் அதிக நிதிஒதுக்கப்படுகிறது. விவசாயிகளின் பிரச்சினைகள் உள்பட வேளாண்மைத் துறையில்அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து அதற்கு தக்க ஆலோசனைக்கூறும் பொருட்டு வேளாண்மைத் துறையில் புதிய நடவடிக்கைக் குழுஏற்படுத்தப்படும்.
இக் குழுவில் விஞ்ஞானிகள், வேளாண்துறை நிபுணர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர்உறுப்பினர்களாக இருப்பர். இக் குழு ஒரு சிறந்த உயர்மட்ட ஆலோசனைக் குழுவாகச்செயல்படும். மேலும், மத்திய வேளாண் துறையில் கொள்கை மாற்றங்கள் குறித்தும்இக் குழு ஆலோசனை வழங்கும்.
தேசிய வேளாண்மைக் கொள்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படும். தற்போது இதுதொடர்பான மசோதா, திட்டக் கமிஷன் பரிசீலனையில் உள்ளது. புதிய தேசியவேளாண்மைக் கொள்கை சட்ட திட்டங்களுக்கும், புதிதாக ஏற்படுத்தப்படவுள்ளநடவடிக்கைக் குழுவின் சட்ட திட்டங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளனஎன்றார் நிதிஷ் குமார்.
யு.என்.ஐ.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!