For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

சிறுபான்மையினரைக் காப்பது எங்களது கடமை: கருணாநிதி

சென்னை:

சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டும் என்ற கடமையுணர்வு எங்களுக்கு உண்டு. ஒரு சில மாதங்களில் தேர்தல் வரும் என்பதால் இதைசொல்லவில்லை. தேர்தல் வந்தாலும் வராவிட்டாலும் நான் எப்போதும் சிறுபான்மையினருடன் இருப்பவன் என்று தமிழக முதல்வர் கருணாநிதிதெரிவித்தார்.

சென்னையில் திங்கள்கிழமை காயிதே மில்லத் நினைவிடத்தில் நடந்த அஞ்சலிக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

யார் ஒருவர், எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினாரோ, யார் ஒருவர் ஒற்றுமைக்கு ஊனம் வரக் கூடாது என்று கருதினாரோ,யார் ஒருவர் எல்லோரும் அருகில் இருக்க வேண்டும் என்று எண்ணினாரோ அவர் துயிலும் இடத்தில் அவருடைய எண்ணங்களை பெருமளவில் நிறைவேற்றிவிட்டோம் என்ற அளவிலும் இங்கே நாம் கூடியிருக்கிறோம்.

காயிதே மில்லத் நினைவிடத்திற்கு நான் வருவது இது முதல் தடவையோ அல்லது இரண்டாவது தடவையோ அல்ல. 1972 முதல் இந்த இடத்திற்கு வருபவன்.காயிதே மில்லத்துக்கு அஞ்சலி செலுத்தும் கடமையை தொடர்ந்து நிறைவேற்றுபவன்.

மறைந்தும் மறையாத அந்த மாணிக்கத்திற்கும் எனக்கும், அண்ணா, பெரியாருக்கும் இடையே எவ்வளவு நெருங்கிய பிணைப்பு உண்டு என்பதை வரலாறுஉணர்த்தும். அந்த வரலாற்று நாயகனின் பிறந்த நாளில் அவரை பாராட்டுவது மூலம் நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொள்கிறோம்.

மாறுபட்ட அரசியல் அணியில் இருந்தாலும் கலைஞரை நான் என்றும் மறப்பவன் அல்ல என்று இங்கே பேசிய காதர் மைதீன் (முஸ்லீம் லீக் தலைவர்)பேசினார். நானும் காதர் மைதீன் போன்றவர்களை மறப்பவன் அல்ல. இவரா இப்படி பேசினார் என்று இருவருமே எண்ணியதுண்டு.

இருவரும் ஒருவரையொருவர் உணர்ந்துள்ள நிலையில் அண்ணா, பெரியார் கடைப்பிடித்த நாகரீகத்தை பின்பற்றுபவர்கள். அந்த நாகரீகத்தைப் பேணாமல்இருந்திருந்தால் இன்று இருவரும் சந்திக்கும்போது கூச்சப்பட்டிருப்போம். இப்போது கூச்சம் இல்லை என்ற நிலையில் நாம் இங்கே கூடியிருப்பதற்கு, காயிதேமில்லத் காட்டிய வழியை பின்பற்றியது தான் காரணம்.

காயிதேமில்லத் ஆற்றிய அரும் பணிகள் ஏராளம். அரசியலில் தனித்து நின்று கம்பீரமாக செயல்பட்டவர் அவர். பாகிஸ்தான் பிரிந்த போது, உங்களுக்குஎன்ன வேண்டும் என்று பாகிஸ்தான் அதிபர் காயிதே மில்லத்திடம் கேட்டார். அதற்கு அவர் அளித்த பதில், எங்கள் நாட்டில் உள்ளவர்களை நான் பார்த்துக்கொள்கிறேன். உங்கள் நாட்டில் உள்ள இந்துக்களை நீங்கள் பாதுகாக்க வேண்டும் என்பது தான்.

அவரது கருத்தை பின்பற்றி சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டிய கடமை உணர்வு எங்களுக்கு உண்டு. சில மாதங்களில் தேர்தல் வரும் என்பதால் நான்இதை கூறவில்லை. தேர்தல் வந்தாலும், வராவிட்டாலும் எப்போதும் நான் உங்களுடன் இருப்பவன். காயிதே மில்லத் என்ற பெயர் நம்மை எல்லாம்ஒன்று சேர்க்கும் மந்திர சக்தி என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X