For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காங். தலைவர்கள் மாற்றமும்...அலுவலக திண்டாட்டங்களும்...

By Staff
Google Oneindia Tamil News

காங். தலைவர்கள் மாற்றமும்...அலுவலக திண்டாட்டங்களும்...

சென்னை:

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் நிலை படு மோசமாகிக் கொண்டிருக்கிறது. இன்றைய கோஷ்டிச் சண்டையின் உச்சத்தில் .. காங்கிரஸ் கமிட்டிக்கு என அலுவலகம்கூட இல்லாத நிலை.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் இளங்கோவனுக்கு ஆதரவாக ஒரு கோஷ்டியும், முந்தைய தலைவர் திண்டிவனம் ராமமூர்த்திக்கு ஆதரவாக ஒருகோஷ்டியும், காங்கிரஸ் கட்சியின் கோஷ்டிப்பூசலை வலுப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

ஈ,வி.கே.எஸ். இளங்கோவன், முன்னாள் மத்திய அமைச்சரும்,ராஜீவ்காந்தியின் நண்பருமான பிரபுவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்கிறார்கள்.கிட்டத்தட்ட பிரபு சொல்வதைத்தான் இளங்கோ கேட்பார் என்கிற நிலையில் பிரபுவுடன் கருத்து வேறுபாடு உள்ள அனைவருமே இளங்கோவுக்கு எதிராககளம் இறங்கியுள்ளனர்.

திண்டிவனம் ராமமூர்த்தி, குமரி அனந்தன், தங்கபாலு ஆகியோர் த.மா.காவில் சேரத் திட்டமிட்டுவிட்டனர் என்கிறார்கள் விபரம் தெரிந்தவர்கள்.

சில நாட்களுக்கு முன்பு திண்டிவனம் ராமமூர்த்தி, குமரிஅனந்தன், தங்கபாலு ஆகியோர் டெல்லி சென்றிருந்தனர். அப் பொழுதே புதிய தலைவர் இளங்கோஎன்று இவர்களுக்குத் தெரிய அப்பொழுதே எதிர்ப்பு காட்டியுள்ளனர். தலைமையின் முடிவில் மாற்றமில்லை என்று புரிந்து கொண்டவர்கள், அப் பொழுதேத.மா.காவில் சேர்ந்து விடுவது என்று முடிவு எடுத்துவிட்டனர்.

இந்த முடிவின் அடிப்படையில்தான் சில நாட்களுக்கு முன் தேனியில் நடந்த த.மா.கா பேரணி ஒன்றில் மூப்பனாருடன் கை கோர்த்து நின்றனர்.

அறிக்கை..பதில் அறிக்கை..பேட்டி..

அடுத்தவாரம், தனது ஆதரவாளர்களை சந்தித்து தனது அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த இருக்கிறார் திண்டிவனம் ராமமூர்த்தி.ஒவ்வொரு கோஷ்டியும் ஒருவரையொருவர் எதிர்த்து அறிக்கைகள் விடுவதும், பத்திரிக்கைகளுக்கு பேட்டிகொடுப்பதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

சென்னை சத்தியமூர்த்தி பவனில்தான் ஆரம்பத்தில் இருந்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வந்தது. மூப்பனார் தலைமையில் த.மா.காஉருவானபொழுது சத்தியமூர்த்தி பவனை மூப்பனார் கைப்பற்றிக் கொண்டார்.

அப்பொழுது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த குமரி அனந்தன், மேற்கு மாம்பலத்தில் உள்ள அவரது மாமனாரின் வீட்டையே வாடகைக்குஎடுத்து காங்கிரஸ் கட்சியின் அலுவவகத்தை நடத்தி வந்தார். பிறுகு மயிலாப்பூரில் உள்ள லஸ் கார்னரில் வேறு இடத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிஅலுவலகமாக்கினர்.

தங்கபாலு தலைவரானதும் அங்கேயே அலுவவலகம் செயல்பட்டு வந்தது. தங்கபாலுவுக்கு அடுத்து திண்டிவனம் ராமமூர்த்தி தலைவரானார். உடனேமயிலாப்பூரில் லஸ் பகுதியில் சற்று பெரிய இடத்தில் 55 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு அலுவலகம் அமைத்துச் செயல்பட்டார்.

தலைவர்கள் மாற்றம் நடக்க அலுவலகமும் மாறிக்கொண்டிருக்கிறது. இப்பொழுது இளங்கோவன் தலை வராக அறிவிக்கப்பட வெகுண்டு எழுந்ததிண்டிவனம் ராமமூர்த்தி அடுத்த சில மணிநேரங்களிலேயே, தமிழ்நாடு காங்கிரஸ் அலுவலகத்தையே சுத்தமாக காலி செய்துவிட்டார். அலுவலகத்தில் உள்ளமேஜை, நாற்காலி உட்பட அனைத்தையும் லாரியில் ஏற்றி சென்று விட்டார்.

அலுவலகத்தின் வெளியே இருந்த கட்சி போர்டு, கொடியைையும் விட்டுவைக்கவில்லை. அலுவலகத்தில் இருந்த கமப்யூட்டர், டெலிபோன்கள் உட்படசகலமும் காலி செய்து, அலுவலக கட்டிடத்தையும் பூட்டிவிட்டு சாவியை கட்டிட சொந்தக்காரரிடம் கொடுத்து விட்டு சென்றுவிட்டார்.

இது பற்றி திண்டிவனம் ராமமூர்த்தி சொன்னது வேடிக்கையானது. நான் தான் இந்த இடத்துக்கு டெபாஸிட் கட்டினேன். அதனால் காலி செய்கிறேன்என்றார். புதிய தலைவர் வரட்டும். புதிய அலுவலகம் பார்த்துக்கொள்ளட்டும் என்று தான் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளாராம் திண்டிவனம்ராமமூர்த்தி.

வருகின்ற 1-ம் தேதி புதிய தலைவர் இளங்கோவன் சென்னை வருகிறார். அவரது ஆதரவாளர்கள் இளங்கோவன் சென்னை வருவதற்கு உள்ளாக புதியஅலுவலகம் தேடும் பணியில் இறங்கியுள்ளனர் அவரது ஆதரவாளர்கள். இளங்கோவன் சென்னைக்கு வரும் போது சிறப்பான வரவேற்பு கொடுக்கவும்தயாராகி வருகின்றது இளங்கோவன் கோஷ்டி.

(அடுத்த பக்கத்தில் இதுவரை இருந்த தலைவர்கள் பட்டியல்)

next

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X