For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

இளவரசர்களின் கலை விருந்து

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கலையின் பெயரால் கை கோர்த்துள்ளனர் இரு சர்-வ-தே-ச ராஜ குடும்பத்து இளவல்கள்.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கேன்வாஸ் பெயின்டிங்கில் கை தேர்ந்தவர்.

இவரைப் போலவே, வாட்டர் கலர், கேன்வாஸ் பெயின்டிங்கில் கலக்குபவர் செளதி அரேபிய இளவரச் காலித் அல் பைசல்.

இரண்டு இளவரசர்களும் சேர்ந்து லண்டனில் தங்களது கைவண்ணத்தைக் காட்சிக்கு வைத்தனர். லண்டனின் கிரான்ட் பாங்கட் ஹவுஸ் அரங்கில் வியாழக்கிழமை இந்தக் கலை விருந்துபார்வையாளர்களுக்கப் பரிமாறப்பட்டது.

இங்கிலாந்துக்கும், செளதி அரேபியாவுக்கும் இடையிலான மிகப் பெரிய கலாச்சாரப் பரிவர்த்தனை என்று இதற்குப் பெயரிடப்பட்டிருந்தது.

இளவரசர் காலித் வரைந்திருந்த 26 ஆயில் பெயின்டிங்குகளும், மக்களையும், மலைகளையும் பிரதிபலிப்பதாக இருந்தது. தனது சொந்த மாநிலத்தில் உள்ள ஆசிர் என்ற ஊரை மையமாக வைத்துதனது ஓவியங்களை அல் பைசல் வரைந்திருந்தார்.

"நிறைய படங்கள் வரைந்தேன். ஆனால் அவற்றை பயன்படுத்த சரியான வாய்ப்புக் கிடைக்கவில்லை. எனவே அவற்றில் பலவற்றை எரித்து விட்டேன். சிலர் இதைப் பார்த்து விட்டு,ஏன்எரிக்க வேண்டும். கண்காட்சிக்கு வைக்கலாமே. அதன் மூலம் கிடைக்கும் பணத்தை இறந்த எனது தந்தையும், மன்னருமான பைசல் அறக்கட்டளைக்குக் கொடுக்கலாமே என்றுஆலோசனை தந்தனர். எனவே கண்காட்சியில் அவற்றை வைக்க முடிவு செய்தேன் என்றார் அல் பைசல்.

கிரான்ட் பேங்கட் ஹவுஸ் அரங்கின் மையத்தில் மிகப் பெரிய அரேபிய முறையிலான குடிசை போடப்பட்டு, அதற்குள் இளவரசர் காலித் அல் பைசலின் ஓவியங்கள் வைக்கப்பட்டிந்தன.

இளவரசர் சார்லஸின் 30 வாட்டர் கலர் ஓவியங்கள் இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. பெரும்பாலானவை, ஸ்காட்லாந்து, துருக்கி, கிரீஸ், செளதி அரேபியாவில் வைத்துவரையப்பட்டவை.

தனது ஓவியங்கள் குறித்து சார்லஸ் கூறுகையில், "ஆசிர் நகரம் எனக்கு மிகவும் சவாலாக விளங்கியது. அருமையான மலைத் தொடர்களை படத்தில் கொண்டு வருவது மிகவும் பிரமிப்புக்குரியபணியாக இருந்தது. இருப்பினும் சவாலை துணிவுடன் சந்தித்தேன். ஒரு நாள் முழுவதும் இருந்து அந்தப் படத்தை முடித்தேன் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X