For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

அடையாள அட்டை இல்-லா-மல் ஓட்-டு-போ-ட மு-டி-யா-து

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:

தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்காளத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் புகைப்பட அடையாளஅட்டை கட்டாயமாக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி எம்எஸ்.கில் தெரிவித்தார்.

சென்னையில் ராஜ்பவனில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும், அரசியல் பிரமுகர்களையும் சந்தித்துப்பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில்,

அடுத்தவருடம் வரவுள்ள சட்டசபைத் தேர்தலில் எலக்ட்ரானிக் ஓட்டுப் பதிவு முறையை அனைத்துமாநிலங்களிலும் அமல்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஹரியானாவில் நடந்த தேர்தலிலும், அண்மையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடந்தஇடைத்தேர்தலிலும் எலக்ட்ரானிக் இயந்திரம் மூலம் ஓட்டுப் பதிவு நடந்தது. அது மிகவும் வெற்றிகரமாக முடிந்தது.

அதேநேரம் எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரத்தால் தொழில்நுட்பக் கோளாறு எதுவும் ஏற்படாதவாறுபார்த்துக்கொள்வோம்.

இந்த ஓட்டுப் பதிவு முறைக்கு 99 சதவீத அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

கேரளாவில் ஏற்கனவே 70 சதவீதம் வாக்காளர்களுக்கு புகைப்படஅடையாள அட்டை வழங்கப்பட்டு விட்டது.மேற்குவங்காளத்தில் 75 சதவீத வாக்காளர்களுக்கும், பாண்டிச்சேரியில் 84 சதவீத வாக்காளர்களுக்கும் புகைப்படஅடையாள அட்டை வழங்கப்பட்டு விட்டது.

தமிழ்நாட்டில் 52 சதவீதம் மக்களுக்கே இதுவரை புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

அந்தந்த மாநிலத்தில் ஆளுங்கட்சியின் காலம் முடிவதற்கு 6 மாதத்திற்கு முன் தேர்தல் நடத்தப்பட்டுவிடும்.

ஜூலை முதல் வாரத்தில் இருந்து தமிழ்நாட்டில் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.

எல்லாக் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை இரவு 11 மணியாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.இதுகுறித்துப் பரிசீலிக்கப்படும்.

நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பெண்களுக்கு ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதெல்லாம் செயல்படுத்தமுடியாத விஷயங்கள். அதில் ஏகப்பட்ட பிரச்சனைகள். அதைவிட வேட்பாளர்கள் தேர்வின்போது பெண்களுக்குஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று கட்சிகளுக்கு உத்தரவிடலாம்.

அதை செயல்படுத்தாத கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கலாம். அதுதான் சரியானமுறையாக இருக்கும். அதைத் தவிர்த்து பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு என்று கூறுவதெல்லாம் வெறும்அரசியல் பேச்சுக்கள் என்றார் கில்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X