For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலக டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசை: டெண்டுல்கர், போலக் முதலிடம்

By Staff
Google Oneindia Tamil News

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">லண்டன்:

உலக டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசைப் பட்டியலில் பேட்டிங்கில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கரும், பந்துவீச்சில்தென் ஆப்பிரிக்காவின் ஷான் போலக் முதலிடம் பிடித்துள்ளனர்.

பிரைஸ் வாட்டர் ஹவுஸ் ஸ்கூப்பர்ஸ் அமைப்பு திங்கள்கிழமை இப் பட்டியலை வெளியிட்டது. கடந்த முறைஅறிவிக்கப்பட்ட பட்டியலில் பந்து வீச்சில் 7-ம் இடத்திலிருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கார்ட்னி வால்ஷ்,சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் 5-ம் இடத்துக்குமுன்னேறியுள்ளார்.

பட்டியல் விவரம்:

பேட்டிங்:

1. சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) - 863 புள்ளிகள்.

2. பிரையன் லாரா (மேற்கிந்தியத் தீவுகள்) - 857 புள்ளிகள்.

3. ஸ்டீவ் வாவ் (ஆஸ்திரேலியா) - 841 புள்ளிகள்.

4. ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) - 804 புள்ளிகள்.

5. சயீத் அன்வர் (பாகிஸ்தான்) - 776 புள்ளிகள்.

6. ஜஸ்டின் லாங்கர் (ஆஸ்திரேலியா) - 767 புள்ளிகள்.

7. அரவிந்த டிசில்வா (இலங்கை) - 764 புள்ளிகள்.

8. இன்சமாம் உல்-ஹக் (பாகிஸ்தான்) - 760 புள்ளிகள்.

9. ஜாக்ஸ் காலிஸ் (தென் ஆப்பிரிக்கா) - 747 புள்ளிகள்.

10. ஆன்டி பிளவர் (ஜிம்பாப்வே) - 732 புள்ளிகள்.

பந்துவீச்சு:

1. ஷான் போலக் (தென் ஆப்பிரிக்கா) - 905 புள்ளிகள்.

2. கிளென் மெக்ரா (ஆஸ்திரேலியா) - 896 புள்ளிகள்.

3. ஆலன் டொனால்டு (தென் ஆப்பிரிக்கா) - 877 புள்ளிகள்.

4. கர்ட்லி ஆம்புரோஸ் (மேற்கிந்தியத் தீவுகள்) - 816 புள்ளிகள்.

5. கார்ட்னி வால்ஷ் (மேற்கிந்தியத் தீவுகள்) - 794 புள்ளிகள்.

6. முத்தையா முரளிதரன் (இலங்கை) - 763 புள்ளிகள்.

7. வாஸிம் அக்ரம் (பாகிஸ்தான்) - 736 புள்ளிகள்.

8. பிரெட் லீ (ஆஸ்திரேலியா) - 735 புள்ளிகள்.

9. அனில் கும்ளே (இந்தியா) - 722 புள்ளிகள்.

10. ஹீத் ஸ்டிரீக் (ஜிம்பாப்வே) - 701 புள்ளிகள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X