For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

காவிரிப் பிரச்சனை: -க-ரு-ணா-நி-தி-யை கு-றை சொல்-கி-றார் கெளடா

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:

Jeyalalitha-Court caseமக்களுக்காக ரத்தம், கண்ணீர், வியர்வை அனைத்தையும் சிந்தி உழைத்த என் மீதுபொய்யான போலியான வழக்குகள் போடப்பட்டுள்ளது. அவற்றைச் சந்திக்க நான்குஆண்டுகளாக நான் படாதபாடுகிறேன். நெருப்பாற்றில் நீந்திக் கொண்டிருக்கிறேன்என்று சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா கண்கள் கலங்க வாக்கு மூலம் அளித்தார்.

கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர்களுக்கு சிம்மசொப்பணமாக விளங்கும் என்னைஅரசியல் ரீதியாக வீழ்த்த முடியாது என்பதால், இப்படிப்பட்ட பொய்யானவழக்குகளைப் புனைந்து களங்கம் கற்பிக்கின்றனர் என்று அவர் கூறினார்.

டான்சி நில பேர ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர்இரண்டாவது நாளாக திங்கள்கிழமை மாலை மூன்றாவது சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதிஅன்பழகன் முன்னிலையில் வாக்கு மூலம் அளித்தனர்.

ஜெயலலிதா அளித்த வாக்கு மூலம் வருமாறு:

டான்சி நில பேர ஊழல் வழக்கு என் மீது பொய்யாகப் புனையப்பட்டுள்ளது. முதல்வர்கருணாநிதி, சட்ட அமைச்சர் ஆலடி அருணா, மேயர் ஸ்டாலின் மற்றும் மாநிலஅமைச்சர்கள், ஆளும் கட்சி நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனஎல்லோரும் இவ்வழக்கு பற்றி தாறுமாறாக பேசி வருகின்றனர்.

சட்டப் பேரவையானாலும், பொதுக் கூட்டமானாலும், அரசு விழாவானாலும்,பத்திரிகையாளர் சந்திப்பானாலும், கல்யாணமானாலும், கருமாதியானாலும், எங்கேஎந்த சந்தர்ப்பத்தில் பேசினாலும் டான்சி வழக்கு இப்படித்தான் முடியும், அந்தஅம்மையார் சிறைக்கு போவார். அவருக்கு 30 ஆண்டு சிறை கிடைக்கும், ஜெயலலிதாஇனிமேல் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு போக முடியாது, சிறைச்சாலைக்கு தான்போக வேண்டும் என்று பேசி வருகின்றனர்.

இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதியாக தாங்கள் சீர் தூக்கிப் பார்த்து தீர்ப்பு கூறுவதற்குமுன்பே, 4 ஆண்டுகளாக தீர்ப்பு இப்படித்தான் இருக்கும், தண்டனை இப்படித்தான்இருக்கும் என்று பேசி வருகின்றனர்.

தாங்கள் ஏதாவது நடவடிக்கை எடுப்பீர்கள் என்று எதிர்பார்த்து இப்போது நியாயம்வழங்குவீர்கள் என்று வந்துள்ளேன். வழக்கு முடியும் முன்பே முதல்வரும்,அமைச்சர்களும் இப்படி பேசுவது நீதிமன்றத்தை அச்சுறுத்துவதாக ஆகாதா? நான்எந்த நம்பிக்கையில் வழக்கை சந்திப்பது?

நீதிபதி: வெளியில் யார் என்ன சொன்னாலும் இந்த நீதிமன்றம் கேட்காது.

ஜெயலலிதா: நான் ஒரு முன்னாள் முதல்வர். 1991-ல் மக்கள் என்னை முதல்வராகத்தேர்ந்தெடுத்தனர். நானும் முடிந்த அளவுக்கு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும்என்று பல திட்டங்களை நடைமுறைப்படுத்தினேன்.

ஒரு ஆங்கிலக் கவிஞன் கூறியதுபோல ரத்தம், வியர்வை, கண்ணீர் என அத்தனையும்சிந்தி மக்களுக்காக உழைத்தேன். ஹூண்டாய், போர்டு போன்ற தொழிற்சாலைகள்எல்லாம் நான் அரும்பாடுபட்டதில் வந்தவைதான்.

மற்ற முதல்வர்கள் ஆண்களாக இருப்பதினால் அவர்களுக்கு குடும்பம் உண்டு.தனிப்பட்ட வாழ்க்கை உண்டு. கேளிக்கை, கோலாகலம் என எல்லாம் உண்டு. ஆனால்,எனக்கென தனிப்பட்ட குடும்பம் இல்லை. 5 ஆண்டுகளாக மக்களுக்காக தான்உழைத்தேன். கருணாநிதி தனது மகன் ஸ்டாலினை முதல்வராக்க நினைக்கிறார்.

நீதிபதி: இது வேறு எங்கோ பேச வேண்டிய விஷயங்கள். வழக்குத் தொடர்பாகமட்டும் பேசுங்கள்.

ஜெயலலிதா: இதுபோன்று பல முன்னாள் முதல்வர்கள் நீதிமன்றத்தில் பேசியுள்ளனர்.இந்த வழக்கு தொடர்பாக 4 ஆண்டுகளாக நான் பட்ட பெரும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. நெருப்பாற்றில் நீந்திக் கொண்டிருக்கிறேன். (அப்போது அதிமுகவக்கீல்கள் கைத் தட்டினர்).

நீதிபதி: இது பொதுக் கூட்டமல்ல. வழக்குத் தொடர்பாக மட்டும் பேசுங்கள்.

ஜெயலலிதா: வழக்குத் தொடர்பாகத்தான் பேசுகிறேன். தனது மகன் ஸ்டாலின்முதல்வராக நான் தடையாக இருப்பாக கருணாநிதி நினைக்கிறார். அரசியல்ரீதியாகஎன்னை வீழ்த்த முடியவில்லை.

கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் சிம்மசொப்பணமாக விளங்கும் என்னை தேர்தலில்நிற்க முடியாமல் செய்வதற்காக போலியான, பொய்யான வழக்குகளைப்புனைந்துள்ளார். நான் குற்றமற்றவள். நான் நிரபராதி.

இன்னொரு வழக்கில் என்னை நீதிமன்றம் விடுதலை செய்து விட்டது. ஆனால், அந்தவழக்கை வைத்து என்னை மக்கள் மத்தியில் எவ்வளவு அவமானப்படுத்தினார்கள்.எந்த அளவுக்கு எனக்கு களங்கம் ஏற்படுத்தினார்கள். அதற்கெல்லாம் நஷ்ட ஈடு தரமுடியுமா? எனக்கு ஏற்பட்ட அவமானத்தை ஈடு கட்ட முடியுமா?

இந்த வழக்கு தொடர்பாக 28 நாள் சிறையில் இருந்துள்ளேன். வழக்கு முடிவதற்குமுன்பே தீர்ப்பு இப்படித் தான் இருக்கும் என்று யாரோ பேசுகின்றனர்.

நீதிபதி: யாரோ என்றால்...?

ஜெயலலிதா: முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது கட்சியினர். ஆனால், நான்உங்களைத்தான் நம்பி இருக்கிறேன். நல்லதொரு தீர்ப்பை வழங்குங்கள் என்றுஉங்களை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா வாக்கு மூலம் அளித்தார். உணர்ச்சிப்பூர்வமாக பேசியதால்அவரது கண்கள் கலங்கியிருந்தன.

மாலை 2.25 மணிக்கு சசிகலாவுடன் நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயலலிதா 4.15 மணிவரை வாக்குமூலம் அளித்தார்.

வழக்குத் தொடர்பாக நீதிபதியின் 40 கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

மீண்டும் இதே வழக்கில் மற்றொரு பிரிவின் கீழ் நடைபெறும் விசாரணைக்காகஜெயலலிதா வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X