For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அழகிரி.: -- தி-மு-க-வில் நீயா -நானா யுத்தம்

By Staff
Google Oneindia Tamil News

ஸ்டாலின் Vs அழகிரி.: -- தி-மு-க-வில் நீயா -நானா யுத்தம்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்-னை:

தேர்தலை எதிர்பார்த்து தமிழக அரசியல் கட்சிகள் மிகவேகமாக செயல்பட ஆரம்பித்துவிட்டன.

சில நாட்களுக்கு முன், தி.மு.கழக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், மாவட்ட செயலாளர்களின் கூட்டத்தை கூட்டினார் தி.மு.கழக தலைவரும்,தமிழகமுதல்வருமான கருணாநிதி. தேர்-த-லுக்-கு தயா-ரா-கு-மா-று கழக கண்மணிகளை உற்சாகப்படுத்தி அனுப்பினார்.

தி.மு.கவில் மிகவும் பரபரப்பாக பேசப்படுகின்ற முக்-கி-ய விஷயம் வே-றான்-று தான். இந்த தேர்தலில் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியும்தேர்தலில் நிற்கிறார் என்பது தான்.ஏற்கனவே ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் இடை மிக சைலண்டாக ஒரு போட்டி உண்டு என்கிறார்கள் தி.மு.கவில்.

தென் மாவட்டங்களை பொறுத்தவரை அழகிரியின் ராஜ்யம் தான். மதுரை, திண்டுக்கல், பழனி, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி,நாகர்கோவில், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அழகிரியின் ஆசி பெற்ற கழகத்தினரே கொடிகட்டிபறக்கமுடியும். கட்சியில் எந்தபொறுப்பிலும் இல்லாத போதும் தனக்கென ஒரு செல்வாக்கை அங்கே ஏற்படுத்திக்கொண்டுள்-ளார் அழகிரி.

ஸ்டாலினும் தென்மாவட்டங்களில் விசிட் என்றால் சற்று யோசிக்கவே செய்கிறாராம்.எல்லோரும் அண்ணனுடைய ஆட்கள், அண்ணன் என்னசொல்கிறார் என்று கேளுங்கள் என்கிறார். அழகிரி உத்தரவு பெற்றால் தான் ஸ்டாலினை அங்கே வரவேற்க கூட ஆட்கள் செல்வார்கள் என்கிறநிலை தென்மாவட்டங்களில்.

ஒன்றியச்செயலாளர் முதல் மாவட்டச்செயலாளர் வரை யாராக இருந்தாலும் அழகிரியின் ஆசியில்லாமல் அங்கே செயல்பட முடியாது.

தனது கட்டுப்பாட்டில் தான் தென் மாவட்டங்கள் இருக்கிறது என்பதாலும், தமிழக அரசியலில் தீவிரமாக பங்கேற்க திட்டமிட்டுவிட்டார் அழ-கி-ரிஎன்கிறார்கள் மதுரை பகுதி உடன்பிறப்புக்கள்.

ஸ்டாலின் மாதிரி தானும், அரசியலில் நேரடியாக பங்குகொள்ள வேண்டும் என்பதில் இப்பொழுது மிகவும் உறுதியாகிவிட்டார் அழகிரி. இதுவரை கிங்மேக்கராகவே இருந்த அழகிரி இந்தமுறை தானும் அரசராகிவிட ஆசைப்பட்டுவிட்டார் என்கிறார்கள்.

அழகிரி இந்த முடிவுக்கு வருவதற்கு காரணம் இருக்கிறது. ஆரம்பகாலம் முதல், ஏன் 1996-ம் வருடம் தேர்தலில் திருமங்கலம் தொகுதியில்எம்.எல்.ஏவாக நிறுத்தி முத்துராமலிங்கத்தை வெற்றி பெறவும் செய்தவர் அழகிரி.

இந்த நேரத்தில்..முத்துராமலிங்கம் சமீபகாலமாக ஸ்டாலினுடன் நெருங்கி பேசுகிறார், அடிக்கடி சந்திக்கிறார், ஸ்டாலின் ஆதரவாளராகவேமாறிவிட்டார் என்று தகவல் அழகிரிக்கு கிடைக்க கொதித்துப்போனாராம் அழகிரி.

ஸ்டாலின் மாதிரி நாம் நேரடியாக அரசியல் களத்தில் இறங்கினால் தான் இந்த மாதிரியான பிரச்சனைகளுக்கு முடிவுகட்ட முடியம் என்று தீர்மானித்துவிட்டார் அழகிரி என்கிறார்கள். இதைத் தொடர்ந்து முத்துராமலிங்கத்தின் தொகுதியான, திருமங்கலம் தொகுதியிலேயே போட்டியிடுவது என்றும்முடிவெடுத்துவிட்டார் அழகிரி.

அழகிரி அங்கே போட்டியிட்டால் வெற்றியில் மாற்றமே இருக்காது என்று ஆதரவாளர்கள் சொல்ல களமிறங்க ஆத்தமாகிக் கொண்டிருக்கிறார்அழகிரி.

முத்துராமலிங்கம் அழகிரியின் கோபத்துக்கு ஆளான பிறகு கட்சிக்காரர்கள்,முத்துராமலிங்கத்தை ஒதுக்க ஆரம்பித்-து விட்-டனர். திருமங்கலம்தொகுதியிலேயே நடக்கின்ற கட்சி கூட்டத்தில் கூட முத்துராமலிங்கத்தை அழைப்பதில்லை என்கிற சூழ்நிலை.

அழகிரியின் முடிவு இப்படி இருக்க..கடந்த 24 - ம் தேதி அ.தி.மு.க அவைத் தலைவர் காளிமுத்து வீட்டிற்குச்சென்றார், எம்.எல்.ஏமுத்துராமலிங்கம். அங்கே, அ.தி.மு.க. எம்.பி தினகரனும் இருக்க மூவரும் சந்தித்து பேசியதாக மதுரை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காளிமுத்து என் உறவினர் அவரை உறவினர் என்கிற முறையில் தான் சந்திக்கச் சென்றேன். அங்கே தினகரன் இருப்பது எனக்கு தெரியாது என்றுமறுத்திருக்கிறார் முத்துராமலிங்கம். அதெல்லாம் இல்லை கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள், முத்துராமலிங்கம் மட்டுமல்ல இன்னும் பலர்அ.தி.மு.கவில் சேர்வார்கள் என்கிறார்கள் அ.தி.மு.கவினர் உற்-சா-கத்-தோ-டு.

சென்னைக்கு தளபதி தென் தமி-ழ-கத்-துக்-கு அண்ணன். நாங்க எந்த பக்கம் போவது என்பது தான் எங்க கவலை என்று இப்பொழுதே அணி பிரிந்துகொண்டிருக்கின்ற-னர் திமுகவினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X