For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலக கால்பந்து பட்டியலில் பிரேஸில் முதலிடம்

By Staff
Google Oneindia Tamil News

சூரிச்:

சர்வதேச கால்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு புதன்கிழமை வெளியிட்ட தர பட்டியலில் பிரேஸில் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. உலகக்கோப்பை மற்றும் ஐரோப்பிய சாம்பியன் கோப்பையை வென்ற பிரான்ஸ் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐரோப்பிய சாம்பியன் போட்டிகளுக்குப் பிறகு சர்வதேச தரப்பட்டியலில் பல நாடுகள் முன்னேறியுள்ளன

ஐரோப்பிய கால்பந்துப் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் 21-வது இடத்திலிருந்த ஹாலந்து அணி 8-வது இடத்துக்கு வெகுவாகமுன்னேறியுள்ளது. ஏற்கெனவே 6-வது இடத்திலிருந்த ஜெர்மனி, ஐரோப்பிய கால்பந்துப் போட்டியில் தகுதிச் சுற்றிலேயே தோற்றதால் 9-வதுஇடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டது.

744 புள்ளிகளுடன் ஸ்பெயினும், அர்ஜென்டினாவும் 4-வது இடத்தைப் பெற்றுள்ள.

4 முறை உலகக் கோப்பையை வென்றுள்ள பிரேஸில் அணி 825 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பிரான்ஸ் 808 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன.

பட்டியலில் முதல் 30 இடங்களைப் பெற்றுள்ளஅணிகள் விவரம்:

1. பிரேஸில் - 825 புள்ளிகள்.

2. பிரான்ஸ் - 808 புள்ளிகள்

3. செக் குடியரசு - 753 புள்ளிகள்

4. ஸ்பெயின் - 744 புள்ளிகள்

4. அர்ஜென்டினா - 744 புள்ளிகள்

6. இத்தாலி - 732 புள்ளிகள்

7. போர்சுகல் - 717 புள்ளிகள்

8. ஹாலந்து - 713 புள்ளிகள்

9. ஜெர்மனி - 711 புள்ளிகள்
ஞ10. நார்வே - 708 புள்ளிகள்

11. யுகோஸ்லாவியா - 705 புள்ளிகள்

12. ருமேனியா - 701 புள்ளிகள்

13. மெக்ஸிகோ - 698 புள்ளிகள்

14. குரோஷியா - 694 புள்ளிகள்

15. இங்கிலாந்து - 691 புள்ளிகள்

16. டென்மார்க் - 653 புள்ளிகள்

17. கொலம்பியா - 650 புள்ளிகள்

18. ஸ்வீடன் - 645 புள்ளிகள்

19. பராகுவே - 642 புள்ளிகள்

20. அமெரிக்கா - 639 புள்ளிகள்

21. ஸ்காட்லாந்து - 629 புள்ளிகள்

22. சிலி - 625 புள்ளிகள்

23. தென் ஆப்பிரிக்கா - 624 புள்ளிகள்

24. ரஷ்யா - 616 புள்ளிகள்

25. மொராக்கோ - 607 புள்ளிகள்

26. ஸ்லோவேகியா - 606 புள்ளிகள்

27. டுனிசியா - 605 புள்ளிகள்

28. பெல்ஜியம் - 599 புள்ளிகள்

29. துருக்கி - 588 புள்ளிகள்

30. உக்ரைன் - 584 புள்ளிகள்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X