For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

கிராமங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்த தமிழக அரசு முடிவு

சென்னை:

கிராமப் பகுதிகளில் எல்லோரும் பங்கேற்கக் கூடிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவரல்லாத இளைஞர்கள் என அனைவரும் பங்கேற்கக் கூடிய விளையாட்டுப் போட்டிகள் மிகக் குறைந்தஅளவிலேயே நடத்தப்படுகின்றன.

ஆனால், இளைஞர்களிடையே உள்ள பெரும் ஆர்வம் காரணமாக திறந்த வெளி விளையாட்டுப் போட்டிகளுக்கு வட்டார அளவில் மிகுந்த வரவேற்புஉள்ளது.

இதை உணர்ந்து அனைத்து ஊராட்சிப் பகுதிகளிலும் ஊரக விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இம் மையங்களை சார்ந்த மாணவரல்லாத இளைஞர்கள் வட்டார அளவில் நடத்தப்படுகின்ற போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புள்ளது என்பதைக் கருத்தில்கொண்டு வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் அனைவரும் பங்கேற்கக் கூடிய வகையில் திறந்த வெளி விளையாட்டுப்போட்டிகளை வலுப்படுத்தலாம் என்று முடிவு செய்யபப்ட்டுள்ளது.

மேலும் அதற்கான செலவினமாக தற்போது ஒதுக்கப்படுகிற நிதியை ரூ.12.94 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.

இந்தப் போட்டிகளில் கைப்பந்து, கபடி, பூப்பந்து, கால்பந்து, கிரிக்கெட் ஆகிய விளையாட்டுக்களில் ஏதாவது ஒன்று நடத்தப்படும். மேலும் தடகளப்போட்டிகளான ஓட்டப் பந்தயங்கள், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், தட்டெறிதல் ஆகிய போட்டிகளும்நடத்தப்படும்.

இந்த போட்டிகளை நடத்த ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்துக்கும் ரூ.3 ஆயிரம் வீதம் 385 ஊராட்சி ஒன்றியங்களுக்கு ரூ. 11.55 லட்சம், மாவட்டஅளவில் போட்டிகள் நடத்த ரூ.7.77 லட்சம், மாநில அளவில் நடத்த ரூ.5.68 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X