For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

சிறுபான்மை மக்களின் காவலன் திமுக என்கிறார் கருணாநிதி

சென்னை:

தமிழகத்தில் வசிக்கும் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாவல் அரணாக தமிழக அரசு எப்போதும் இருக்கும் என்று முதல்வர் மு. கருணாநிதி தெரிவித்தார்.

சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழக கத்தோலிக்க இளைஞர் எழுச்சி மாநாட்டில் அவர் பேசியதாவது:

கத்தோலிக்க என்னும் கிரேக்க மொழிச் சொல்லுக்கு பரந்து விரிந்த, எல்லாவற்றுக்கும் பொருந்தும், எக்காலத்துக்கும் உரிய,எல்லாவற்றையும் உள்ளடக்கிய, எங்கும் உள்ள என்று பல பொருள் உண்டு.

அத்தகைய அற்புதமான பொருளடக்கத்தைக் கொண்டுள்ள கத்தோலிக்க மதத்தை சார்ந்த அருட்தந்தை வின்சென்ட் சின்னதுரை பேசும் போது சென்னையில்ஒரு பிரார்த்தனைக் கூடம் தகர்க்கப்பட்டு, அது உடனடியாக 24 மணி நேரத்தில் கட்டித் தரப்பட்டது என்று கூறி என்னைப் பாராட்டினார்.

அதிலே தகர்க்கப்பட்டது என்றால் வேறு சிலரால் தகர்க்கப்பட்டது என்று பொருள் அல்ல. விதிகளை மீறி கட்டப்பட்டதாக அதிகாரிகள் மிகுந்தஅக்கறையோடு, விதிகளை மீறலாமா என்று கேட்டு, சட்டத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டு செய்த வேலையினால் கிறிஸ்தவ மக்கள் சிலருடையஉள்ளத்திலே ஏற்பட்ட அந்த பாதிப்புக்காக நான் மிகவும் வருந்துகிறேன்.

கிறிஸ்தவ மக்களுக்கானாலும் சரி, இஸ்லாமிய மக்களுக்கானாலும் சரி எந்த ஒரு பாதிப்பு ஏற்பட்டாலும், அதற்காக நீங்கள் யாரும் சத்தம் போட்டுஅழத் தேவையில்லை. கொஞ்சம் சிணுங்கினாலே போதும், உடனடியாக உங்களுடைைய கவலையைத் தீர்க்கின்ற அரசு தான் திமுக அரசு என்பதைஉறுதியாக சொல்கிறேன்.

இன்றைக்கு ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையிலே கிறிஸ்தவர்களுக்கு அங்கொன்றும், இங்கொன்றுமாக சில பாதகங்கள் ஏற்படுவதாக எண்ணுவதுதவறு.

தமிழ்நாட்டில் 1982-ம் ஆண்டிலேயே கன்னியாகுமரி மாவட்டத்தில் மண்டைக்காடு சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த சம்பவத்தில்துப்பாக்கிச் சூடு காரணமாக 6 பேர் மாண்டார்கள். 9 பேர் படுகாயமடைந்தனர் என்பது நமக்குத் தெரிந்த வரலாறு.

எனவே இன்றுள்ள அரசியல் சூழ்நிலையில் அல்ல, என்றைக்கும் சூசையும், சுப்பனும்தான் மோதிக் கொள்கிறார்கள் என்று இல்லை. சுப்பனும், குப்பனும்மோதிக் கொள்கிற நிகழ்ச்சிகள் கூட தமிழ்நாட்டில் உண்டு.

ஆனால் சுப்பனும், குப்பனும் மோதிக் கொண்டால், அதில் காட்டுகின்ற அக்கறையை விட சூசையும், சுப்பனும் மோதிக் கொள்ளும்போது இந்த அரசுஅதிக அக்கறை காட்டும். சிறுபான்மை மக்களுக்கு பாதுகாவல் அரணாக இந்த அரசு என்றென்றும் இருக்கும் என்றார் முதல்வர் கருணாநிதி.

மாநாட்டில் அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி, எழுத்தாளர் வலம்புரிஜான் மற்றும் பேராயர்கள் பேசினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X