For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

திமுகவுக்கு ஸ்டாலின்...அதிமுகவுக்கு தினகரன்...தமாகாவுக்கு?

சென்னை:

வாரிசு அரசியலுக்கு பெயர் பெற்ற தமிழக்தில், தி.மு.க.வுக்கு ஸ்டாலின், பா.ம.க.வுக்கு அன்புமணிஎன்பதைத் தொடர்ந்து த.மா.கா.வுக்கும் அடுத்த வாரிசு தயாராகிறது.

மூப்பனாரின் மகன் கோவிந்தவாசன் நேரடி அரசியலுக்கு வர வேண்டும் என்ற கோஷம்த.மா.கா.வில் பகிரங்கமாக ஒலிக்கத் துவங்கியுள்ளது.

தமிழக அரசியல் களத்தில் தலைவர்களின் வாரிசுகளாக வலம் வருபவர்களில் முக்கியமானவர்ஸ்டாலின். தி.மு.க தலைவரும், முதல்வருமான கருணாநிதியின் மூன்றாவது மகன். தி.மு.கவில்தலைமைக்கு அடுத்து தளபதியாக நடைபோடுபவர்.

கட்சியின் இளைஞரணித் தலைவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும், சென்னை மாநகராட்சியின்மேயராகவும் தற்போது இருக்கிறார். கட்சியிலும், ஆட்சியிலும் இவருக்கென தனி வட்டங்களைஉருவாக்கி, அதன் மூலம் அசைக்க முடியாத ஒரு அரசியல்வாதியாக வளர்ந்து கொண்டிருக்கிறார்.

எதிர்கால தி.மு.கவும், அதன் கட்டுக்குலையாத தொண்டர் கூட்டமும் இவர் பின்னால் அணி வகுக்கக்காத்திருக்கின்றன என்பதில் துளியளவும் சந்தேகமில்லை.

தி.மு.க வில் அடுத்த வாரிசுக்கு அந்த கட்சித் தலைமையே அதிக முக்கியத்துவம் கொடுப்பதையும்,தொண்டர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் அவரை முன்னிறுத்துவதில் அக்கட்சி எடுத்துக்கொள்கிற அக்கறையையும் பார்த்தே, பா.ம.க விலும் தனது வாரிசை அறிமுகப்படுத்தினார்டாக்டர் ராமதாஸ் என்றால் அது பொய்யில்லை.

அரசல் புரசலாக அரசியலில் தலையிட்டுக் கொண்டிருந்த ராமதாசின் அன்பு மகன் டாக்டர் அன்புமணி(இவரும் ஒரு டாக்டர்), இப்போது ஸ்டாலின் ஸ்டைலில் தந்தைக்கு இணையாக அரசியல் நடத்துகிறார்.எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் டாக்டர் ராமதாசுடன், டாக்டர் அன்புமணியும் இப்போது ஆஜராகிவிடுகிறார்.

கட்சியின் இளைஞரணி அமைப்புக்கு அவர் பொறுப்பேற்கவில்லையே தவிர, கட்சியின் இளைஞர்கள்கூட்டமெல்லாம் இவரைச் சுற்றி தான் வலம் வருகின்றன. அதற்கு வசதியாக "பசுமை தாயகம்என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதற்கு மகனை தலைவராக்கியுள்ளார் ராமதாஸ். பா.ம.க வுடன்இணைந்த ஒரு அமைப்பாக செயல்படும் இது ஏறக்குறைய இளைஞரணி மாதிரி.

இந்த இரண்டு கட்சியிலும் தலைவர்களுக்கென சொந்த வாரிசுகள் இருந்ததால், அரசியல்வாரிசுகளாக அவர்களுக்கு உடனடி அங்கீகாரம் கிடைத்தது. அ.தி.முக வில் அதற்கு சாத்தியமில்லை.ஆனாலும், தனக்கு அடுத்தபடியாக தலைமைக்கு தகுதி உள்ளவராக ஒருவரை தயார் செய்ய வேண்டும்;நம்பிக்கைக்குரியவராக அவர் இருக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் அரசியல் இலக்கணப்படி,திடீரென்று மகுடம் சூட்டப்பட்டவர் தான் தினகரன்.

சசிகலா குடும்பத்துக்கு மட்டுமல்ல, ஜெயலலிதாவின் அடுத்த அரசியல் வாரிசாகவும் அவர்அங்கீகரிக்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.

தி.மு.க, அ.தி.மு.க என்ற இரு பெரும் கட்சிகளிலும் அடுத்த தலைமைக்குரியவர்கள் அடையாளம்காட்டப்பட்டு விட்டனர். அதேபோல் பெரும்பான்மை பெற்ற ஒரு சமுதாயத்தை பின்பலமாககொண்ட பா.ம.க.வுக்கும் இன்னொரு டாக்டர் கிடைத்து விட்டார். அந்த வரிசையில் தமாகாவுக்கும்தலைமை வாரிசு வேண்டும் என்ற கோஷம் மெல்ல கிளம்பியுள்ளது.

த.மா.கா தலைவர் ஜி.கே.மூப்பனாரின் மகன் கோவிந்தவாசன். ஐக்கிய முன்னணி ஆட்சியின்போதுஇவரது திருமணத்தை மிகவும் விமரிசையாக நடத்தி, அப்போதைய பிரதமர் முதல் எல்லோரையும்மூப்பனார் அழைத்து வந்ததால், பிரபலமானவர் கோவிந்தவாசன். இப்போது இவரை கட்சியின்இளைஞரணித் தலைவராக்க வேண்டும் என்று வெளிப்படையாகவே கேட்கத் துவங்கி விட்டனர்த.மா.கா.வினர்.

கடந்த சனிக் கிழமை அன்று சென்னையில் மூப்பனார் முன்னிலையில் நடந்த மாவட்டத் தலைவர்கள்கூட்டத்தில் எழுப்பப்பட்ட இக்கோரிக்கைக்கு, பெரும் வரவேற்பும், கைத்தட்டலும் கிடைத்துள்ளது.த.மா.காவி ன் கோவை மாவட்டத் தலைவரும், மூப்பனாரின் தீவிர விசுவாசியுமான கோவைதங்கம் என்பவர் தான் இந்த காாேரிக்கையை எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தியவர்.

""தமாகாவில் இளைஞரணி இப்போது சரிவர செயல்படவில்லை. இளைஞரணிக்கென அமைப்புகள்போடப்படவில்லை. தி.மு.க வுக்கு இளைஞரணி தான் உயிராக இருக்கிறது. கருணாநிதியின் மகனேஅந்த அமைப்புக்கு தலைமை ஏற்று, கட்சியினர் மத்தியில் சுறுசுறுப்பையும், உற்சாகத்தையும்ஏற்படுத்தி வருகிறார்.

அதற்கு போட்டியாக அ.தி.மு.க விலும் இப்போது இளைஞர்களை கவர தினகரனை அழைத்துவந்துள்ளார் ஜெயலலிதா. அ.தி.மு.க வில் இப்போது இளைஞர்கள் கூட்டம் எல்லாம் தினகரன்வரவால் எழுச்சி அடைந்துள்ளனர்.

பா.ம.க விலும் ராமதாசின் மகன் டாக்டர் அன்புமணி நேரடி அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.அந்த கட்சியில் எல்லா மட்டத்திலும் அவருக்கென தனி அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.அதுதவிர கட்சி நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டு, தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

அதேபோல் நம்ம கட்சியிலும் தலைவர் மகன் கோவிந்தவாசன் இளைஞரணிக்கு பொறுப்பேற்கவேண்டும். இளைஞரணியை பலப்படுத்த வேண்டும் என்றால் இதற்கு மூப்பனார் சம்மதித்தாகவேண்டும்

இப்படி அவர் பரபரப்பாக பேசியதும், கட்சியினர் எல்லோரும் கைதட்டி அதை வரவேற்றனர்.அமைதியாக அதைக் கேட்டுக் கொண்டிருந்த மூப்பனார் கூட்டத்தின் முடிவில் பதிலளித்தார்

""மற்ற கட்சிகள் எப்படியோ. அதைப் பற்றி கவலையில்லை. ஆனால், த.மா.கா.வில் அதுநடக்காது. நான் தலைவராக இருக்கிற வரைக்கும் அது நடக்காது. அப்படியொரு நிலை வந்தால்நான் அரசியலை விட்டு ஒதுங்கி விடுவேன் என்றார் மூப்பனார்.

மூப்பனாரின் இந்த பதிலை அவரது சொந்த கட்சியினரே பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.ஏனென்றால், த.ம.ாகா வில் மூப்பனார் குடும்பத்தின் ஆதிக்கம் இப்போதும் இருந்து கொண்டு தான்இருக்கிறது.

மூப்பனாரின் தம்பி ரங்கசாமி மூப்பனார், மூப்பனாரின் மகன் கோவிந்தவாசன் ஆகியோர்திரைமறைவு அரசியல் நடத்திக் கொண்டு தான் இருக்கின்றனர். மாநில, மாவட்ட நிர்வாகிகள்நியமனத்தில் இவர்களது சிபாரிசை பெற்றவர்களுக்கு பதவிகள் கிடைத்துள்ளன என்பதே இதற்குசான்று.

அதோடு இருதய அறுவை சிகிச்சைக்கு பின்னர் மூப்பனாரால் தீவிரமாக செயல்பட முடியவில்லை.அவரால் கலந்து கொள்ள முடியாத கட்சியினர் சம்பந்தப்பட்ட திருமண நிகழ்ச்சிகள்போன்றவற்றிற்கு கோவிந்தவாசனை தான் அனுப்பி வைக்கிறார் மூப்பனார். அப்படிகோவிந்தவாசன் கலந்து கொள்ளும் திருமண நிகழ்ச்சிகளுக்காக பல வண்ண போஸ்டர்களும், ஆடம்பரவரவேற்பு ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன என்பதும் உண்மை.

இதெல்லாம் விட தி.மு.க வின் ஸ்டாலின், அ.தி.மு.க வின் தினகரன், பா.ம.க வின் அன்புமணி ஆகியஇளம் தலைவர்களுடன் இவருக்கு தொடர்பு உண்டு என்பதும், அவர்களை அடிக்கடி சந்தித்துப் பேசும்அளவுக்கு நெருங்கிய நட்பை வளர்த்துக் கொண்டு வருகிறார் என்பதும், கோவிந்தவாசனின் அரசியல்ஆர்வத்தின் வெளிப்பாடுகள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X