For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

இந்தியாவில் தயாரிக்கப்படும் கம்ப்யூட்டர்களுக்கு மவுசு இல்லை

மும்பை:

இந்தியாவில் கம்ப்யூட்டர் விற்பனை கடந்த ஆண்டு 37 சதவீதம் அதிகரித்துள்ளது.இருப்பினும் இந்திய நிறுவனங்கள் தயாரிக்கும் கம்ப்யூட்டர்களின் விற்பனை அளவுமிக மோசமாக குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு 10.4 லட்சம் கம்ப்யூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. இது 1998-99ம்ஆண்டை விட இரண்டு லட்சம் கூடுதலாகும். இந்திய தகவல் தொழில்நுட்பத்துறையின் ஹார்ட்வேர், பயிற்சி மற்றும் சேவைக் கழகம் வெளியிட்டுள்ளஅறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விற்பனை 2000-2001ல் ஆண்டு 10.9 லட்சம் என்ற இலக்கைத் தாண்டும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. இது 35 சதவீத கூடுதல் வளர்ச்சி ஆகும்.

பிரான்ட்கள் அற்ற, உதிரி பாகங்களால் உள்ளூர்களில் வடிவமைக்கப்படும்கம்ப்யூட்டர்கள் (அசெம்பிள்ட்) விற்பனைதான் அதிக அளவில் உள்ளது. இது1999-2000ம் ஆண்டில் 58 சதவீதமாக இருந்தது. முந்தைய ஆண்டு இது 53 சதவீதமாகஇருந்தது. தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகவே அசெம்பிள்ட் கம்ப்யூட்டர்கள்,விற்பனையில் சக்கை போடு போடுகின்றன.

1997-98ல் கம்ப்யூட்டர் விற்பனை 3.7 லட்சமாக இருந்தது. 99-00ல் இது 8லட்சத்திற்கும் மேற்பட்டதாக இருந்தது. இந்தியச் சந்தையில் விற்பனையாகும்பன்னாட்டு நிறுவன கம்ப்யூட்டர்கள் விற்பனை சதவீதம் 22 சதவீதத்திலிருந்து 23சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்திய பிரான்டு கம்ப்யூட்டர்கள் விற்பனை 25சதவீதத்திலிருந்து 19 சதவீதமாக குறைந்துள்ளது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X