For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

இன்டர்நெட்டில் 1,50,000 டாலர்களுக்கு ஏலம் போன தாட்சரின் கைப்பை

லண்டன்:

பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சரின் கைப்பை 1,50, 000 டாலர்களுக்கு இன்டர்நெட் மூலம் ஏலம் விடப்பட்டது.

இந்த ஏலத்தின் மூலம் கிடைத்த பணத்தை மார்பகப் புற்றுநோய் அறக்கட்டளைக்குக் கொடுப்பதாக மார்க்ரெட் தாட்சர் தெரிவித்தார்.

தனது கருப்புநிறக் கைப்பையை ஏலத்திற்கு விடப்போவதாகவும், அதன்மூலம் கிடைக்கும் பணத்தை மார்பகப் புற்று நோய் அறக்கட்டளைக்குக்கொடுக்கப்போவதாகவும் கடந்த ஒரு மாதத்திற்கு முன் பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் மார்க்ரெட் தாட்சர் அறிவித்திருந்தார்.

இதையடுத்து ஹேன்ட்பேக்.காம் என்ற இன்டர்நெட் மூலம் கைப்பை ஏலம் விடப்பட்டது. 63 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியில்இந்த ஏலத்தில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த சைன்மியாரோபான் வென்றார். கைப்பையை அவர் 1, 50 ,000 டாலர்களுக்கு வாங்கினார். இதுகுறித்துக்கூறுகையில், கைப்பையை ஏலம் எடுத்தது எனக்கு இரண்டு விதத்தில் சந்தோஷத்தைக் கொடுக்கிறது.

ஒன்று, புகழ்பெற்ற பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் மார்க்ரெட் தாட்சர் உபயோகப்படுத்திய கைப்பை எனக்குக் கிடைத்துள்ளது. இதன் மூலம் கிடைத்தபணம் மார்பகப் புற்றுநோய் அறக்கட்டளைக்குச் செல்வது எனக்குக் கிடைத்த இன்னொரு சந்தோஷம் என்றார்.

மார்க்ரெட் தீட்சர் இதுகுறித்துக் கூறுகையில், எனது கைப்பை இவ்வளவு அதிகமான விலைக்கு ஏலம் போனதில் நான் மிகவும் பரவசமடைகிறேன்.இந்தப்பணம் மார்பகப் புற்றுநோயாளிகளுக்குப் பயன்படும் வகையில் அறக்கட்டளை ஒன்றுக்குக் கொடுக்க நான் முடிவு செய்துள்ளேன்.

இந்த அழகான கைப்பையை நல்ல விஷயத்திற்காகப் பயன்படுத்த நினைத்திருந்தேன். இப்போது கைப்பையை விற்றதன் மூலம் கிடைத்த பணம்அறக்கட்டளைக்குச் செல்வது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X