தமிழகத்தில் இன்று
"இன்டர்நெட் வசதி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்
சென்னை:
உலகளாவிய இண்டர்நெட் வசதியை உறுதி செய்வதுடன், அந்த வசதிகள் எல்லோருக்கும் கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் கருணாநிதி வலியுறுத்தினார்.
டெல்லியில் சனிக் கிழமை நடைபெற்ற தகவல் தொழில்நுட்ப அமைச்சர்கள் மாநாட்டில் தமிழகத்தின் சார்பில் முதல்வர் கருணாநிதி பங்கேற்றார்.தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இம்மாநாட்டில் முதல்வர் கருணாநிதி வலியுறுத்திய கருத்துக்கள் வருமாறு:
தகவல் தொழில்நுட்பம் என்பது மக்களுக்கு அவசியமான ஒன்று என்பதை உறுதி செய்ய, தகவல் தொழில் நுட்பத்தில் தாய்மொழியாம் தமிழில்பயில்வதை ஊக்கப்படுத்தும் வகையில் பல முன்னோடியான பணிகளை தமிழக அரசு செய்து வருகிறது.
இனி வருங்காலங்களில் இணையத் தொடர்பு என்பது இன்றியமையாதது என்பதை முழுமையாக உணர்ந்துள்ளதன் பயனாகவும், இவ்விணைய வசதி தமிழகம்முழுவதும் கிடைக்க வேண்டும் என்ற தொலைநோக்குத் திட்டத்தில் 10 ஆயிரம் சமுாய இணைய மையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
மின்னணு வசதியுடன் கூடிய இணைய ஆட்சி முறை அமைப்பை நாம் ஏற்றுக் கொள்வதன் மூலம்,உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதரமானதொரு பொதுவான தொடர்பு வசதியை ஏற்படுத்த வேண்டும்.
உலகளவிலான இணைய வசதியை பெறுவதை உறுதி செய்ய வேண்டும். அவ்வசதிகள் எல்லாவற்றையும் உள்ளடக்கியதாகவும், எல்லாரும் எளிதில்வாங்கக் கூடியதாகவும் பாதுகாப்பானதாகவும் இருத்தல் வேண்டும்.
பன்னாட்டு நுழைவு, தேசிய அளவிலான விளம்பரம், சொந்த உபயோகத்திற்கான கணினிகள், தந்திக் கம்பியின்றி காற்றாலைகள் மூலம் இயங்கக்கூடிய தகவல் தொடர்பு சாதனங்கள், டிஜிடல் தொலைக் காட்சி பெட்டிகள், செயற்கைகோள்கள் மூலம் நேரிடையாக நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் வசதிகள்போன்ற அனைத்தும் முழுமையாக இயந்திரமயமாக்கப்பட வேண்டும்.
உள்நாட்டுச் சந்தையில் குறைந்த விலையிலான பன்னாட்டு உயர்கடத்தும் திறன் கொண்ட இணைய வசதிகள் தடையின்றி கிடைக்க செய்ய வேண்டும்.
தொலைத் தொடர்பு கட்டுப்பாடுகளை விரைவில் நீக்க வேண்டும். உள்ளூர் பகுதிகளுக்கிடையில் தொடர்புகளை உருவாக்க வேண்டும். ஒவ்வொருஇணைப்பகத்திலும் பன்னாட்டுத் தொலைத் தொடர்பு வசதி (ஐஎஸ்டிஎன்), டிஎஸ்எல் ஆகிய வசதிகளை அளிக்க வேண்டும்.
தேவைப்படும் தகவல் தொடர்பு திறன்கள் உடன் கிடைக்க வகை செய்ய வேண்டும். பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தகவல் தொடர்புக்கானபல்வேறு வழிகளையும் ஒருங்கிணைக்க வேண்டும்.
ஆப்டிக் பைபர் இணைப்புகள் மூலமாக உள்நாட்டு தகவல் தொடர்பு வசதிகள் விரைவாக மேம்படுவதை ஊக்குவித்து, பொதுமக்கள் பயன்பெறும்வகையில் ஒருங்கிணைத்தல் வேண்டும்.
தகவல் தொழில் நுட்பச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். தேசிய குடிமகன் அடையாள அட்டை முறையை கொண்டு வர வேண்டும். கணினி மூலமானவர்த்தக முறையை ஊக்குவிக்க வேண்டும் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications