For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெர்மனி அழைக்கிறது: ஆனாலும், தயக்கத்தில் இந்திய சாப்ட்வேர் நிபுணர்கள்

By Staff
Google Oneindia Tamil News

பிராங்க்பர்ட்:

இந்திய கம்ப்யூட்டர் நிபுணர்களுக்கு அமெரிக்கா தான் இன்னமும் பேவரிட் நாடாக இருந்து வருகிறது. தனதுநாட்டுக்கு வருமாறு ஜெர்மன் அழைத்தாலும், கிரீன் கார்டுகளை அள்ளி வழங்கினாலும் அங்கு செல்ல இந்தியர்கள்ஆர்வம் காட்டவில்லை.

பிராங்பர்ட் பொருளாதார வளர்ச்சி ஆணையத்தின் செயல் இயக்குனர் ஹார்ட்முட் ஸ்வேசிங்கர் இது குறித்துக்கூறுகையில், கிரீன் கார்டுகளைக் கொடுத்தால் இந்தியர்கள் வந்து குவிந்து விடுவார்கள் என சில வலதுசாரிக்கட்சிகள் கூறி வந்தன. இந்தியர்களை ஜெர்மனிக்கு அழைத்து வருவதையும் அவை எதிர்த்து வந்தன.

ஆனால், உண்மை நிலவரம் என்னவென்றால், இங்கு வருவதற்கு இந்திய சாப்ட்வேர் புலிகள் ஆர்வம்காட்டவில்லை. நான் கடந்த மாதம் இந்தியாவின் பல நகரங்களுக்கும் பயணம் செய்து ஜெர்மனியின் கிரீன் கார்டுகுறித்து விளக்கினேன். ஜெர்மனி வருமாறு இந்திய சாப்ட்வேர் நிபுணர்களுக்கும், ஐ.டி. நிறுவனங்களுக்கும்கோரிக்கை விடுத்தேன்.

இந்தியாவில் சென்னை, பெங்களூர், மும்பை ஆகிய இடங்களுக்குச் சென்றிருந்தேன். என்னுடன் பிராங்பர்ட்தொழிலாளர் நல அலுவலக அதிகாரியும், ஜெர்மன் தொழிலாளர் சங்கப் பிரதிநிதியும் இந்தியா வந்திருந்தனர்.

3 நகரங்களில் சேர்த்து 3 மாநாடுகளையும், பல கலந்துரையாடல்களையும் நடத்தினோம். இதில் 750க்கும்மேற்பட்ட சாப்ட்வேர் நிபுணர்கள் கலந்து கொண்டனர். இந்த கலந்துரையாடல்கள் மூலம் ஒரு விஷயத்தைநன்றாகப் புரிந்து கொண்டோம்.

இந்திய சாப்ட்வேர் நிபுணர்களுக்கு மிகவும் பிடித்த இடம் அமெரிக்கா தான். அங்கு ஏற்கனவேபல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் உள்ளனர். பெரும் வெற்றிகளையும் அவர்கள் குவித்து வருகிறார்கள்.

தங்கள் நண்பர்கள் நிறைந்துள்ள அமெரிக்காவுக்கு செல்லவே இந்திய இளம் கம்ப்யூட்டர் நிபுணர்களும்விரும்புகிறார்கள். அமெரிக்காவில் வெற்றிவாகை சூடுவது தான் இவர்களின் கனவாக உள்ளது.

அதே நேரத்தில் ஜெர்மனியின் கிரீன் கார்டு திட்டத்திலும் பிரச்சனை உள்ளது. இந்த கார்ட் பெற்றவர்கள் ஒருவருடம் ஜெர்மனியில் வசிக்க முடியும். தேவைப்பட்டால், அதிகபட்சமாக 5 ஆண்டுகளுக்கு மட்டும் தான் நீட்டிப்புகிடைக்கும். அதற்கு மேல் ஜெர்மனியில் தங்க முடியாது. இதை இந்தியர்கள் விரும்பவில்லை.

அதே போல கிரீன் கார்ட் வழங்குவதில் இந்தியர்களுக்கு சலுகை ஏதும் இல்லை என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.ஜெர்மனுக்கு சாதகமானதாகவும் இந்தியர்களுக்கு பாதகமானதாகவும் இது இருப்பதாக நினைக்கிறார்கள்.

மேலும் கிரீன் கார்ட் பெற வேண்டுமானால், ஐ.டியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆனால், இந்திய சாப்ட்வேர்பொறியாளர்கள் பெரும்பாலும் ஒரு இன்ஜினியரிங் அடிப்படைப் படிப்பும், அதற்குப் பின் சாப்ட்வேரில் மேல்படிப்பும் பயின்றவர்கள். எனவே, நிபந்தனையுடன் கூடிய கிரீன் கார்ட் திட்டத்தை வைத்துக் கொண்டுஇந்தியர்களை ஜெர்மனிக்கு இழுக்க முடியாது.

அதே நேரத்தில் ஜெர்மனியில் அலுவலகத்தைத் தொடங்க பல இந்திய சாப்ட்வேர் நிறுவனங்கள் ஆர்வம் காட்டிவருகின்றன. கடந்த இரண்டரை ஆண்டுகளில் பிராங்பர்ட் நகரைச் சுற்றி சுமார் 12 இந்திய நிறுவனங்கள்அலுவலகங்கைளத் திறந்துள்ளன. இதன்மூலம் ஜெர்மனியின் சாப்ட்வேர் சந்தையில் இந்திய நிறுவனங்கள் அடிஎடுத்து வைக்க ஆரம்பித்துள்ளன.

இது தவிர ஜெர்மன் நாட்டு சாப்ட்வேர் பொறியாளர்களுக்கு பயிற்சி அளிக்க டாடா இன்போடெக் நிறுவனம் முன்வந்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு டாடா நிறுவனம் இந்த பயிற்சியை அளிக்கும். இதன் மூலம் ஜெர்மனியில் நிலவும்சாப்ட்வேர் பொறியாளர்கள் பற்றாக்குறையை ஓரளவுக்கு போக்க முடியும் என நினைக்கிறோம் என்றார் அவர்.

ஜெர்மனியில் நிலவும் ஆசியர்களுக்கு எதிரான இனரீதியான மனோபாவமும் இந்திய சாப்ட்வேர் நிபுணர்கள்அங்கு செல்லத் தடையாக இருந்து வருவதும் உண்மை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X