For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூ. 2,600 கோடியில் தேசிய குடிநீர்த் திட்டம்: முதலில் தமிழகத்தில் அமல்

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

அகில இந்திய அளவில் கிராமங்களுக்கும் குடிநீர் வழங்க 2,600 கோடி ரூபாய்செலவில் புதிய திட்டத்தை மத்தியஅரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டத்தில் பொதுமக்களும் பங்கேற்க முடியும் என்பது தான் ஹைலைட்.

கோவையில் இது குறித்து மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறுகையில்,ராஜிவ் காந்தி குடிநீர் திட்டத்தின் கீழ் மத்திய அரசு பொதுமக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க புதியதிட்டம் ஒன்றை அறிமுகப்படுத்துகிறது. இந்தியாவிலேயே முதன் முறையாக இத்திட்டம் கோவை மாவட்டத்தில்துவக்கப்படுகிறது.

ஊரக குடிநீர் மற்றும் சுகாதாரம் இதில் அடங்கும். இந்தியாவில் 53 மாவட்டங்களில் இத்திட்டம்அமல்படுத்தப்படுகிறது. இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்குபகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 11.22 கோடி ரூபாய் வழங்கப்பட்டு விட்டது. ஒரு கிராமத்தில்பொதுமக்கள் இத்திட்டத்தில் பயனடைய வேண்டுமானால், அவர்கள் தங்கள் பங்கிற்கு 10 சதவீதத்தைநிதியாகவோ அல்லது உடலுழைப்பாகவோ செலுத்த வேண்டும்.

பஞ்சாயத்து மூலம் இந்த நிதியைப் பெற முடியாது. பொதுமக்கள் தங்களது சொந்த நிதியை இதற்குச் செலுத்தவேண்டும்.

இந்த திட்டத்தில் இந்தியாவிலேயே முதல் முறையாக கோவை மாவட்டத்தில் உள்ள ஓடந்துறையில் ரூ. 48 லட்சரூபாய் செலவில் அமல்படுத்தப்படுத்தப்படுகிறது. இங்கு பொதுமக்கள் தங்கள் பங்குத் தொகையாக ரூ. 7.2 லட்சரூபாய் செலுத்தியுள்ளனர்.

கூடுதல் நிதி மூலம் சுகாதாரத் திட்டங்கள் அமல்படுத்தப்படவுள்ளது.

தமிழ்நாட்டில் வேலூர், கடலூர், பெரம்பலூர் மற்றும் கோவையில் இந்த திட்டம் முதன் முறையாகசெயல்படுத்தப்படுகிறது.

அடுத்த நிதியாண்டில் ஈரோடு, திருச்சி மற்றும் கன்னியாகுமரியில் இத்திட்டம் அமல்படுத்தப்படும்.

இந்தியாவில் ராஜிவ் காந்தி தேசிய குடிநீர் திட்டத்தின் கீழ் 14 லட்சத்து 22 ஆயிரத்து 664 கிராமங்களில் 11 லட்சத்து71 ஆயிரத்து 104 கிராமங்கள் குடிநீர் பெற்றுள்ளன.

இந்திய அளவில் ராஜஸ்தான், தமிழ்நாடு, குஜராத் ஆகிய மாநிலங்களில் அடுத்த சில ஆண்டுகளில் குடிநீர் பஞ்சம்ஏற்படும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, இந்த மாநிலங்களில் மழை நீரைச் சேமிக்கதிட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை, மதுரை போன்ற இடங்களில் இந்த சேமிப்புத் திட்டம் அரசு கட்டடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.மழைக் காலங்களில், கட்டடங்களில் விழும் நீரை தரைப்பகுதியில் உள்ள ஒரு ஆழ்துளைக் கிணற்றில்விடப்பட்டால் அந்தப் பகுதியில் நீர் தொடர்ந்து பயன்பாட்டிற்கு வரும்.

இத்தகைய கொள்கையை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்பதிலும், இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்பதிலும் அரசு தீவிரமாக இருந்து வருகிறது.

தமிழகத்தில் நடப்பாண்டில், 6 ஆயிரத்து 500 குடியிருப்புகளில், 340 கோடி ரூபாய் செலவில்அமல்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அமைச்சர் ராஜா கூறினார். பேட்டியின்போது மத்திய ஊரக வளர்ச்சித் துறை செயலர் திரிபாதி, மாவட்டகலெக்டர் சந்தானம் ஆகியோர் பங்கேற்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X