ரூ. 1 லட்சம் கேட்டு பெண் அதிகாரி கடத்தல்
சென்னை:
சென்னையில், ரூ. 1 லட்சத்து 50,000 பணம் கேட்டு பெண் அதிகாரியை சிலர் கடத்திச் சென்றனர்.
சென்னை, ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் தாமோதரன். இவரது மனைவி ராணி (48). தமிழக அரசின் வேளாண் துறையில், பணியாற்றி சமீபத்தில் வாலண்டரிரிடையர்மென்ட் பெற்றுக் கொண்டவர்.
சனிக்கிழமை ராணி வீட்டுக்கு அருகிலுள்ள வங்கிக்குச் சென்றார். அங்கு ரூ. 1 லட்சத்து .50,000 பணத்தை "டிரா செய்து கொண்டார். பின்னர் வீட்டுக்குத்திரும்பிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை.
வங்கிக்குச் சென்ற ராணி நெடு நேரமாகியும் வீடு திரும்பாததால், வீட்டில் உள்ளவர்கள் குழப்பமடைந்து வங்கிக்குச் சென்று விசாரித்துள்ளனர். அப்போதுபணத்துடன் ராணி சென்று வெகு நேரமாகி விட்டது எனத் தெரிய வந்தது.
இதையடுத்து ராணி வீட்டார் போலீஸில் புகார் கொடுத்தனர். இந்த நிலையில், சனிக்கிழமை ராணி வீட்டுக்கு ஒரு போன் வந்தது. ராணியின் மகள்கோகிலா போனை எடுத்துப் பேசினார். மறுமுனையில் இருந்தது ராணிதான்.
பதற்றமான குரலில் பேசிய ராணி, தன்னை சிலர் கடத்தி வைத்துள்ளதாகவும், தன்னிடமிருந்த ரூ. 1, 50,000 பணத்தை எடுத்துக் கொண்டதாகவும் மேலும்ரூ. 1,50,000 பணம் கொடுத்தால்தான் விடுவிப்பதாகவும் கூறுவதாக கூறியுள்ளார். இந்தத் தகவலை போலீசுக்குத் தெரியப்படுத்த வேண்டாம் எனவும்,பணத்தை தயார் செய்யுமாறும் அவர் கூறியுள்ளார். கடத்தல்காரர்களும் அதே போனில் கோகிலாவை மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து போலீஸார் கடத்தல்காரர்களை தேடும் பணியை முடுக்கி விட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications