2 பஸ்கள் மோதலில் 10 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்:

பஞ்சாப் மாநிலம், சண்டிகர்-லூதியானா தேசிய நெடுஞ்சாலையில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 10 பேர் இறந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இவ்விபத்து ஏற்பட்டது. இரண்டு பஸ்கள் மோதிக்கொண்டு தாறுமாறாக ஓடி அருகில் சென்று கார் மற்றும் ஸ்கூட்டர்மீது மோதிக் கவிழ்ந்தது. இதில் 10 பேர் இறந்தனர். 50 பேர் காயமடைந்தனர். இவர்களில் 7 பேருக்கு தலையில் பலத்த அடிபட்டுள்ளது. அவர்களுக்குமருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்தில் சிக்கிய அரசு பஸ், அமிர்தரசிலிருந்து சண்டிகார் நோக்கி வந்து கொண்டிருந்தது. எதிர் திசையில், சண்டிகரிலிருந்து அபோகர் நோக்கி ஒரு தனியார் பஸ் சென்றுகொண்டிருந்தது.

லூதியானா அருகே வந்தபோது, இரு பஸ்களும் மோதிக் கொண்டன. மோதிய வேகத்தில், இரு பஸ்களும் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மற்றும்ஸ்கூட்டர் மீது விழுந்தன. இதில், காரில் வந்த 3 பேரும், பஸ்சில் பயணித்த 7 பேரும் நசுங்கி இறந்தனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+