நிதி நிறுவன மோசடிகள்: தலைமறைவான 300 பேர்
சென்னை:
தமிழகம் முழுவதும் நிதி நிறுவனங்கள் நடத்தி மோசடி செய்த 300க்கும் மேற்பட்டவர்கள் தலைமறைவாக உள்ளனர். இவர்களை பிடிக்க சிறப்புப் போஸீஸ்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தனியார் நிதி நறுவனங்களில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களின் நலன்களை பாதுகாக்க தமிழக அரசு தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவந்துள்ளது. இந்த வழக்குகளை விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவையும் தனி நீதிமன்றத்தையும் அமைத்துள்ளது.
நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது குற்றப்பிரிவு ஐ.ஜி பாலசுப்பிரமணியம், போலீஸ் எஸ்.பி மெளர்யா ஆகியோர் தீவிர நடவடிக்கைஎடுத்துவருகிறார்கள்.
296 தனியார் நிதி நிறுவனங்களில் சுமார் 9,28,400 பேர் 1,549 கோடிரூபாயை முதலீடு செய்துள்ளனர். இதுவரை 177 கோடி ரூபாய் பணத்தை மட்டுமேஇந்த மோசடி நிதி நிறுவனங்களிடம் இருந்து போலீசாரால் மீட்க முடிந்துள்ளது.
இந்தப் பணத்தை முதலீட்டாளர்களுக்கு பிரித்தும் கொடுத்துள்ளனர் போலீஸார். மீதள்ள பணத்தையும் மீட்டு முதலீட்டாளர்களுக்கு தர போலீசார் நடவடிக்கைஎடுத்து வருகின்றனர்.
தனியார் நிதி நிறுவுன மோசடியில் சம்பந்தப்பட்டுள்ள 1,135 பேரில் இதுவரை 356 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 119 பேர் நீதிமன்றங்களில்சரணடைந்துள்ளனர். 300 பேர் தலைமறைவாகி விட்டனர். இது தவிர சுமார் 1,400 கோடிரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும் போலீஸார் முடக்கிவைத்துள்ளனர்.
இந்தச் சொத்துக்களை விற்று முதலீட்டாளர்களுக்கு கொடுக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications