திருமணம் காணச் சென்று பிணமான சிறுவர்கள்
கோவை:
திருமண விழாவிற்குச் சென்ற நான்கு சிறுவர்கள் நீர்ச் சுழலில் அடித்துச் செல்லப்பட்டனர்.
கோவை, பொள்ளாச்சி அருகே காளியாபுரம் உள்ளது. இந்த ஊரில் கணேசன் என்பவருக்கும் ஜோதிமணிஎன்பவருக்கும் திருமணம் ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருந்தது.
இந்த திருமணத்தில் கலந்து கொள்ள இரண்டு நாட்களுக்கு முன்பே இவரது உறவினர்கள் சென்றனர். இவர்களில்கோவை வடவள்ளியைச் சேர்ந்த ஆறுச்சாமி, இவரது மனைவி, குழந்தைகள் கார்த்திகா (12), யசோதா (7)ஆகியோரும் சென்றனர்.
திருப்பூரிலிருந்து இவரது உறவினர் ஆறுமுகம், அவரது குழந்தை பிரபு (17) ஆகியோரும் காளியாபுரத்தில்விழாவிற்குச் சென்றனர்.
இந்நிலையில் காளியாபுரத்திற்கு அருகில் உள்ள தேவிபட்டிணத்தைச் சேர்ந்த வெள்ளியங்கிரி என்பவரது மகன்பாலசுப்ரமணியம், மூன்று சிறுவர்களுடன் சேர்ந்து, ஆற்றிற்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
ஆற்றில் ஒரு துணியைப் பயன்படுத்தி மீன் பிடிக்கத் தொடங்கினர். அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றின் நீர்ச்சுழல் ஒன்றில் சிக்கிக் கொண்டனர். இதில் நான்குபேரும் சிக்கித் தவித்தனர்.
தண்ணீரின் வேகம் அதிகமாக இருக்கவே நான்கு பேரும் அடித்துச் செல்லப்பட்டனர். குழந்தைகள் செப்டம்பர் 9ம்தேதி இரவு வீடு திரும்பாததால், பெற்றோர்கள் தேடி அலைந்தனர்.
செப்டம்பர் 10 ம் தேதி காலையில் குழந்தைகள் நான்குபேரின் உடல்கள் காளியாபுரம் உப்பாறு பாலம் அருகேகண்டுபிடித்தனர். பின்னர் இவர்களது உடல்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று பிரேதபரிசோதனை செய்யப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications