சென்னையில் அமைகிறது தேசிய சட்டப் பள்ளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சட்டக் கல்வி முறையில் உள்ள சீர்கேடுகளை நீக்குவதற்காக, தேசிய சட்ட பல்கலைக்கழகம் ஒன்றைத் துவக்க மத்திய அரசுமுடிவு செய்துள்ளது. இப்பல்கலைக்கழகத்தின் தென் மண்டல அலுவலகம் சென்னையில் அமைகிறது.

இந்தியாவில் சட்டக் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. இதற்கு காரணம், சமீபத்தில்இந்திய பார் கவுன்சில் வெளியிட்ட உத்தரவு தான். நாடு முழுவதும் உள்ள பல்வேறு சட்டக் கல்லூரிகளை மூடுமாறு பார் கவுன்சில்உத்தரவிட்டிருந்தது.

இவற்றில் பெரும்பான்மையானவை மாலை நேர சட்டக் கல்லூரிகள். இந்நிலையில், தேசிய அளவில் சட்டக் கல்வியில் உள்ளகுறைகளை களைவதற்காகவும், சட்டக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் தேசிய சட்டப் பல்கலைக்கழகம் ஒன்றைஉருவாக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இப்பல்கலைக்கழகம் "தேசிய சட்டப் பள்ளி என்று அழைக்கப்படும். தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக மத்திய சட்டஅமைச்சர் செயல்படுவார். புதுடெல்லியை தலைமையிடமாகக் கொண்டு உருவாக்கப்படும் சட்ட பல்கலைக்கழகத்தன், தென்னிந்தியபிராந்தியத்திற்கான மண்டல அலுவலகம் சென்னையிலும், வட பிராந்தியத்திற்கான மண்டல அலுவலகம் டெல்லியிலும், கிழக்குமற்றும் வட கிழக்கு பிராந்தியத்திற்கான அலுவலகம் கல்கத்தாவிலும், மேற்கு பிராந்தியத்திற்கான அலுவலகம்மும்பையிலும் அமைக்கப்படுகின்றன.

இதற்கான கொள்கை முடிவை ஏற்கனவே எடுத்துள்ள நிலையில் மத்திய அமைச்சரவையின் ஆலோசனைக்கு இந்த திட்டம்அனுப்பப்பட்டுள்ளது. அமைச்சரவை ஒப்புதலுக்கு பின்னர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கான மசோதா அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+