காட்டுக்குள் யோகா செய்யும் ராஜ்குமார்: வீடியோ வெளியீடு
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமார் யோகா செய்வது போன்ற காட்சிகள் நிறைந்த வீடியோ கேசட்டை நக்கீரன் கோபால் திங்கள்கிழமை "ரிலீஸ் செய்தார்.
ராஜ்குமார் கடத்தப்பட்டு 42 நாட்கள் ஆகி விட்டன. ஐந்து தமிழ்த் தீவிரவாதிகள், 51 தடா கைதிகளை விடுவித்தால் மட்டுமே ராஜ்குமார் திரும்பிவருவார் என்று சந்தனக் கடத்தல் வீரப்பன் திட்டவட்டமாக தெரிவித்து விட்டான்.
இந்த நிலையில், காட்டிலிருந்து வெளியே வந்துள்ள நக்கீரன் கோபால் ஒவ்வொரு புகைப்படமாக, வீடியோ கேசட்டாக வெளியிட்டு வருகிறார். இப்போதுபுதிதாக ஒரு வீடியோ கேசட்டை அவர் வெளியிட்டுள்ளார். நடிகர் ராஜ்குமார், காட்டில் யோகாசனம் உள்ளிட்ட உடற் பயிற்சிகளை செய்வது போன்றகாட்சிகள் உள்ளன.
ராஜ்குமார் யோகா செய்யும்போது அவருக்கு உடன் இருக்கும் உறவினர்கள் உதவி செய்தனர். கடைசியாக கோபால் காட்டுக்குச் சென்றிருந்தபோதுஇந்தக் காட்சிகளை பதிவு செய்து கொண்டு வந்துள்ளார்.
டெல்லிக்கு குழு அனுப்புகிறது கர்நாடகம்:
இதற்கிடையே, நடிகர் ராஜ்குமாரை மீட்பதற்காக மைசூர் சிறையில் உள்ள51 தமிழ்த் தடா கைதிகளை விடுவிக்க அனுமதிக்க வேண்டும் என சுப்ரீம்கோர்ட்டில் மனு செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக கர்நாடக அரசின் சொலிசிடர் ஜெனரல் ஹரீஷ் சால்வேயுடன் மாநில அரசு தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது.
சிறப்பு அதிரடிப்படை ஹர்ஷவர்த்தன ராஜு, சிறப்பு அரசு வழக்கறிஞர் அஸ்வினி குமார் ஜோஷி, சட்ட செயலாளர் கெம்பண்ணா ஆகியோர் டெல்லி சென்று,சால்வேயுடன் விவாதிக்கவுள்ளனர்.
சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படவுள்ள மனுவில் சேர்க்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து இவர்கள் சால்வேயுடன் விவாதிப்பர். செப்டம்பர் 14-ம்தேதிக்குள் இதுதொடர்பான மனுவை கர்நாடகம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, தடா கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற மாநில அரசின் கோரிக்கைக்கு ஆதரவாக வேறு ஒரு அமைப்பும் சுப்ரீம் கோர்ட்டில்மனுத்தாக்கல் செய்யவுள்ளது. இந்த அமைப்புதான் தடா கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்து நடத்தி வருகிறது.
சதாசிவா கமிஷன்:
இதற்கிடையே அதிரடிப்படை வீரர்களின் அடக்குமுறை குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட சதாசிவா கமிஷனை எதிர்த்துப் போடப்பட்ட மனு மீதான இறுதிக்கட்ட விசாரணை செவ்வாய்க்கிழமை நடக்கிறது.
கர்நாடக ஐகோர்ட்டில் இந்த வழக்கு நடந்து வருகிறது. வீரப்பனால் பாதிக்கப்பட்ட போலீஸ் அதிகாரி ஒருவர், சதாசிவா கமிஷன் தனது விசாரணையைநடத்தக் கூடாது என்று கோரி ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதிரடிப்படை வீரர்கள் அடக்குமுறை குறித்து விவாதிக்க இந்தக் கமிஷனை, தேசிய மனித உரிமைக் கமிஷன் நியமித்தது நினைவிருக்கலாம்.
மீண்டும் போகத் தயார் .. கோபால்:
இதற்கிடையே மீண்டும் காட்டுக்குப் போகத் தயாராக இருப்பதாக கோபால் தெரிவித்துள்ளார் என நக்கீரன் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.இருப்பினும் இரு மாநில அரசுகளும், கைதிகள் விடுதலை குறித்து எடுக்கும் முடிவைப் பொறுத்தே இது அமையும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications