கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் ஸ்டிரைக் ..டெலிபோன் ஊழியர்கள் எச்சரிக்கை
டெல்லி
செப்டம்பர் 22 ம் தேதிக்குள் எங்களது கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதற்கான உத்தரவை அரசு பிறப்பிக்காவிட்டால், மீண்டும்வேலைநிறுத்தத்தில் இறங்குவோம் தொலைத் தொடர்பு ஊழியர்கள் எச்சரித்துள்ளனர்.
தேசிய தொலைத் தொடர்பு ஊழியர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் குப்தா கூறுகையில், மத்திய அரசு எங்களது கோரிக்கைகளை செப்டம்பர் 22 ம்தேதிக்குள் நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்போம் என்றார்.
நாடு முழுவதும் கடந்த புதன்கிழமை தொடங்கி 3 நாட்கள் தொலைத்தொடர்பு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினர். இதில், தேசிய தொலைத்தொடர்பு ஊழியர்கள் சம்மேளனம் (என்.ஈ.டி.ஈ), பாரதிய தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம் (பி.ஈ.டி.ஈ), தேசிய தொலைத்தொடர்பு சம்மேளனம்(எப்.என்.டி.யூ) ஆகிய மூன்று தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டன.
மத்திய தொலைத்தொடர்புத் துறையிலிருந்து பிரித்து பாரத் சன்சார் நிஹாம் லிமிடெட் என்று தனி நிறுவனமாக மாற்றி, வரும் அக்டோபர் 1 ம் தேதி முதல்அதை அமல்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டது. இதை எதிர்த்தும், ஓய்வூதிய சலுகை, பணிப்பாதுகாப்பு போன்ற சலுகைகளை அமல்படுத்தக் கோரியும்தொலைத் தொடர்பு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கத் தலைவர்களுக்கும், தொலைத்தொடர்பு அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஏற்பட்டது.பேச்சுவார்த்தையின் முடிவில் தொலைத்தொடர்பு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக பாஸ்வான் ஒத்துக்கொண்டார். இதையடுத்து,போராட்டம் கடந்த வெள்ளிக்கிழமை கைவிடப்பட்டது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications