For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மொத்தம் 30 பேர் நரபலி..? நடுக்கத்தில் மதுரை

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

கடந்த வியாழக்கிழமை நரபலி பீதியில் உறைந்த மதுரை மாநகரம் இன்னும் பீதியின் பிடியில் இருந்து மீளவில்லை.

மதுரை அழகர் மலையடிவாரத்தில், கருமாரியம்மன் கோவில், அருள் ஞானசித்தர் ஆசிரமம் என்ற ( நரபலி) ஆசிரமத்ததை நடத்திவந்தநளினசேகரன் மூன்று தினங்களுக்கு முன் மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் சரண்ணடைந்தார்.

போலீஸ் விசாரணை, வழக்குப் பதிவுகள் ஒரு புறம் தொடர பொது மக்களும் களத்தில் இறங்கியுள்ளனர். நரபலி ஆசிரமத்தில்நளினசேகரனுக்கு உதவியாக இருந்த இருபதுக்கும் மேற்பட்ட உதவியாளர்கள், பொதுமக்கள் ஆசிரமத்தை தாக்க வருவது தெரிந்து, அழகர்மலையடிவாரத்திற்கு காட்டுப் பகுதியில் ஓடி ஒளிந்து கொண்டனர்.

மக்கள் தேடுதலை நிறுத்தியவுடன் ஊரைத்தாண்டி சென்று விடலாம் என்று காத்திருந்தனர். மக்களின் கோபப் பார்வை ஆசிரமத்தைவிட்டுநீங்கவில்லை. மலைப் பகுதியையும் தொடர்ச்சியாக நோட்டமிட்டுக்கொண்டிருந்தனர் மக்கள்.

மூன்று நாட்களாக சாப்பிட ஏதும்மில்லாமல், அவதிப்பட்ட சின்ன சாமியார்கள் இருவர் நேற்று முன் தினம் இரவு, அழகர் மலையின்வடக்குப் புறமாக கீழே இறங்கி பரளி புதூர் கிராமத்தினுள் புகுந்தனர்.

பசி மயக்கத்தில் அங்குள்ள ஒரு வீட்டின் கதவைத் தட்டினர். அழகர் கோவிலுக்க வெகுதூரத்தில் இருந்து வருவதாகவும், கடைசி பஸ்ஸைதவறவிட்டு விட்டதாகவும் சொல்லியிருக்கிறார்கள். பசிக்கிறது சாப்பாடு ஏதாவது இருந்தால் கொடுங்கள் என்று கேட்க, மக்களும் சாப்பாடுகொடுத்துள்ளனர்.

சாப்பிட்ட பின்னர் பொதுமக்கள் அவர்களிடம் சாதாரணமாக விசாரித்துக் கொண்டிருக்க, ஒருவன் பயத்தில் ஒட்டம் எடுக்க ஆரம்பித்தான்.பொதுமக்கள் விரட்டிப் பிடிக்க முயற்சி செய்ய தப்பி விட்டான். மற்றொருவன் மாட்டிக்கொண்டான்.

இவன் நளினி சேகரனின் அஸிஸ்டென்ட். பெயர் முத்துராமன். இவனை பொதுமக்கள் விசாரிக்க ஆரம்பிக்க முன்னுக்கு பின்னாகவேபதில்கள் வர ஆரம்பித்தன. கட்டிப்போட்டு உதைக்க ஆரம்பித்தனர் மக்கள்.

உயிர் பயத்தில், முத்துராமன் சொன்னது மதுரையையே பீதியில் உறைய வைத்துள்ளது.

சாமியார் நளினிசேகரன் காளிதேவிக்கு நரபலி கொடுக்கவேண்டும். அப்படி செய்தால் தனக்கு கூடுதல் சக்தி கிடைக்கும் என்று கூறினார்.அதற்காக ஆட்களைக் கொண்டு வர எங்களை அனுப்பினார்.

நாங்கள் நான்கு பேர் ஒரு ஆட்டோவில் செல்வோம். எங்களுடன் மதுரையைச் சேர்ந்த இரு டாக்டர்களும் வருவார்கள். அழகர்மலையடிவாரம் தவிர பக்கத்தில் உள்ள காட்டுப் பகுதிகளுக்கும் சென்றுள்ளோம். காட்டுப்பகுதியில், மலையடிவாரத்தில் தனியாகநிற்பவரிடம் சென்று பேச்சு கொடுப்போம்.

தனியாக நிற்பவர் பேச ஆரம்பித்ததும், டாக்டர் ஒரு ஊசியை வலுக்கட்டாயமாக போடுவார். சில நிமிடங்களில் அந்த நபர்மயங்கிவிடுவார். மயங்கியவரை ஆசிரமத்திற்கு கொண்டுவருவோம். இரவில் காளிதேவிக்கு பூஜை நடைபெறும். அப்பொழுதுமயங்கியவரை அங்கே கொண்டு வருவார்கள்.

அவருக்கும் விசேஷ பூஜை நிடத்தப்படும். அங்கு அவரை சாமியார் நளினிசேகரன் அங்கேயே பெரிய அரிவாளால் வெட்டி பலிகொடுப்பார். அப்பொழுது சுற்றியிருப்பவர்கள் பயங்கராமாக கோஷம் எழுப்புவார்கள். மயக்கத்தில் இருந்தவர் வெட்டப்பட்டதும்சாமியார் தனக்கு வேண்டிய உறுப்புகளை எடுத்துக்கொண்டு ஒரு துணியால் பிணத்தை எங்களிடம் கொடுத்துவிடுவார்.

நாங்கள் அந்த பிணத்தை புதைத்துவிடுவோம். எங்களிடம் சிக்கியவர் யார்? பெயர் ஊர் இதெல்லாம் கூட எங்களுக்குத் தெரியாது. மயக்கநிலையிலேயே பலி கொடுத்துவிடுவார்கள். நரபலி கொடுத்துள்ள பிணங்களை ஆசிரமத்தைச் சுற்றியே புதைத்துள்ளோம். சில பிணங்களைகிணற்றில் வீசியுள்ளோம்.

சில பிணங்களை மலையடிவாரத்தில் புதைத்துள்ளோம். இதுவரை முப்பதுக்கும் மேற்பட்டவர்களை பலிகொடுத்துள்ளோம் என்றுஅடிதாங்காமல் சொல்லிமுடித்துள்ளான் முத்துராமன்.

பிடிபட்ட முத்துராமனை போலீஸிடம் ஒப்படைக்க, மிகவும் தயங்கிய மக்கள் இறுதியில் அதிகாரிகள் முன்னிலையில் நத்தம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இன்னும் பலர் மலையடிவாரத்தில் பதுங்கியிருக்கலாம் என்று மக்கள் தொடர்ந்து மலையடிவாரத்தைசுற்றிவருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X