For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாருங்கள் உலகை மாற்றலாம்...இந்தியாவுக்கு அமெரிக்கா அழைப்பு

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்:

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே புதிய, நீடித்த உறவை ஏற்படுத்துவதுஎன்று இந்தியப் பிரதமர் வாஜ்பாய், அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் இருவரும்சபதம் மேற்கொண்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையில் இரு நாடுகளும் இனி சீரிய முயற்சிகளை மேற்கொள்ளும் என்றுஅவர்கள் தெரிவித்தனர்.

வாஜ்பாயி மேற்கொண்ட 5 நாள் அதிகாரப்பூர்வ அமெரிக்கப் பயணம் முடிவுக்குவருகிறது. இதையடுத்து வாஜ்பாயைப் கவுரப்படுத்தும் வகையில் வெள்ளைமாளிகையில் கிளின்டன் ஞாயிற்றுக்கிழமை இரவு விருந்து அளித்தார்.

அந்த விருந்து நிகழ்ச்சியில் கிளின்டனும், வாஜ்பாயும் சந்தித்துப் பேசினர். பின்னர்இருவரும் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

கிளின்டன் கூறியதாவது:

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே புதிய, வலுவான, நீடித்த உறவைஏற்படுத்தவேண்டும் என்று நானும் இந்தியப் பிரதமர் வாஜ்பாயியும் உறுதிபூண்டுள்ளோம்.

இந்தியாவின் வெற்றியைத் தனது வெற்றியாகவே அமெரிக்கா கருதுகிறது.அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயல்பட்டால் உலகத்தையே மாற்றிஅமைக்கலாம்.

அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டதற்காக வாஜ்பாய்க்கும், இந்திய அரசுக்கும்,இந்திய மக்களுக்கும் நான் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுக்கு வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கெனவே நல்ல உறவு உள்ளது. பல்வேறுபிரச்சினைகளில் இரு நாடுகளும் ஒரே மாதிரியாகவே செயல்பட்டு வருகின்றன. இந்நடவடிக்கையில் மேலும் முன்னேற்றம் காண நல்ல வழிகளைக்கண்டுபிடிக்கவேண்டும்.

பல வரலாற்றுக் காரணங்களால் இரு நாடுகளின் மக்கள் மனதில் பயமும், கருத்துவேறுபாடும் நிலவுகிறது. இவற்றையெல்லாம் கடந்து இரு நாட்டு மக்களும் இணைந்துசெயல்படவேண்டியது அவசியம். இல்லையென்றால் அதுவே நமது சுதந்திரத்தையும்தனித்தன்மையையும் பாதித்துவிடும் என்றார் கிளின்டன்.

வாஜ்பாய் கூறியதாவது:

எனக்கும் என் நாட்டு மக்களுக்கும் கிளின்டன் தெரிவித்த பாராட்டுக்கு நன்றி.அமெரிக்காவில் மகாத்மா காந்தி சிலையைத் திறந்து வைக்கப்பட்டதன் மூலம்அமெரிக்காவையும், பில் கிளின்டனையும் இந்திய மக்கள் என்றும் மறக்கமாட்டார்கள்.

கடந்த காலத்தை கொஞ்சம் திரும்பிப் பார்த்தால், மகாத்மா காந்தியும், உட்ரோவில்சனும் தெரிவித்த கருத்துக்களும், எண்ணங்களும் எதிர்லாகத்தில் உண்மையாகும்என்பது விளங்கும். தீர்க்கதரிசனமாக இருவரும் எதிர்காலத்துக்குத் தேவையானகருத்துக்களையே கூறியுள்ளனர்.

மேலும், வரலாற்றின் சரியான பாதையில்தான் அமெரிக்காவும், இந்தியாவும்நடைபெற்று வருகின்றன என்பதும் விளங்கும். எதிர்காலத்தில் இந்தியாவும்,அமெரிக்காவும் இணைந்து செயல்படும். அதற்கான முயற்சிகளை இந்தியா நிச்சயம்மேற்கொள்ளும் என்றார் வாஜ்பாய்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X