For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பரிசு மற்றும் பாராட்டு மழையில் நனைகிறார் மல்லேஸ்வரி

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

சிட்னி ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் வெண்கலம் வென்று இந்தியாவுக்குப் பெருமைசேர்த்த கர்னம் மல்லேஸ்வரிக்கு பாராட்டு மற்றும் பரிசுகள் குவிகின்றன.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான 69 கிலோ எடைப் பிரிவில்மல்லேஸ்வரி மொத்தம் 240 கிலோ எடை தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார்.

சிட்னி ஒலிம்பிக்கில் இந்தியாவுக்குக் கிடைத்த முதல் பதக்கம் இது. அது தவிர ஒலிம்பிக்போட்டியில் பதக்கம் பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும்,சுதந்திரத்துக்குப் பிறகு ஒலிம்பிக்கில் தனிநபர் போட்டியில் பதக்கம் வென்ற மூன்றாவதுநபர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

இவ்வாறு அவர் சாதனையுடன் பல பெருமைகளையும் பெற்றுள்ள அவருக்கு பலபக்கங்களில் இருந்து பாராட்டும், பரிசுகளும் குவிந்த வண்ணம் உள்ளன.

ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வு செய்யும் குழுவினர் இரு வீராங்கனைகளை மட்டுமேதேர்வு செய்ய முடிவு செய்தனர்.

சனமாச்சா சானு, குஞ்சராணி தேவி, கர்னம் மல்லேஸ்வரி ஆகிய மூவரில் இருவர்மட்டுமே சிட்னி ஒலிம்பிக்குத் தேர்வு செய்யப்பட இருந்தனர். கடைசி வரைமல்லேஸ்வரிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் இருந்தது.

தேர்வாளர்களும் மல்லேஸ்வரியின் பெயரை பரிசீலிக்கவில்லை. ஆனால், ஏதோ ஒருவகையில் மல்லேஸ்வரிக்கு அந்த அதிர்ஷ்டம் அடித்தது. குஞ்சராணி நீக்கப்பட்டார்.

சிட்னி ஒலிம்பிக்கில் சானுவும் மல்லேஸ்வரியும் கலந்து கொண்டனர். சானு தோற்றார்.மல்லேஸ்வரி பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார்.

பதக்கம் வென்றவுடன், எனது கனவு நனவாகிவிட்டது. எனது திறமையை நான்நிரூபித்துவிட்டேன் என்று சொல்லி மகிழ்ந்தார் மல்லேஸ்வரி.

ஆந்திர அரசு ரூ. 10 லட்சம் பரிசு:

ஏற்கெனவே மல்லேஸ்வரி புரிந்த சாதனையைப் பாராட்டி அவருக்கு ரூ. 10 லட்சம்பரிசு வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

அதேபோல் மல்லேஸ்வரி செய்த ஈடு இணையற்ற சாதனையைப் பாராட்டுவதாககுடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர அரசு ரூ. 25 லட்சம் பரிசு:

அவர்களை அடுத்து, மகாராஷ்டிர அரசும் தனது பங்குக்கு மல்லேஸ்வரியைப்பாராட்டும் வகையில் அவருக்கு ரூ. 25 லட்சம் பரிசு அளிப்பதாக மகாராஷ்டிர அரசுஅறிவித்துள்ளது.

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ. 1 கோடியும், வெள்ளி வென்றால் ரூ. 50 லட்சமும்,வெண்கலம் வென்றால் ரூ. 25 லட்சமும் பரிசு அறிவிக்கப்படும் என்று மகாராஷ்டிரஅரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.

அந்த அறிவிப்புப்படி வெண்கலம் வென்ற மல்லேஸ்வரிக்கு ரூ 25 லட்சம் பரிசுத்தொகையை மகாராஷ்டிர அரசு வழங்க உள்ளது என்று அம் மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்தார்.

மல்லேஸ்வரியின் சாதனையைப் பாராட்டிய அவர், மாநில அரசு சார்பில் ஒரு விழாஏற்பாடு செய்யப்பட்டு அந்த விழாவில் மல்லேஸ்வரிக்குப் பரிசு வழங்கப்படும்என்றார் அவர்.

மத்திய அரசு பாராட்டு:

சிட்னி ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தமல்லேஸ்வரிக்கு மத்திய அரசு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் தீன்ஷா வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பு:

மல்லேஸ்வரி பதக்கம் வென்ற செப்டம்பர் 19-ம் தேதி இந்திய விளையாட்டுச்சரித்திரத்தில் மறக்கமுடியாத நாளாகும். முதன்முறையா இந்திய வீராங்கனை ஒருவர்ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ளார்.

மல்லேஸ்வரியின் சாதனையால் இந்தியா பெருமை கொள்கிறது. அவரது சாதனைஎதிர்கால சந்ததியினருக்கு தூண்டுகோலாக இருக்கும். எதிர்காலத்தில் அவர் மேலும்பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துவதாக தீன்ஷா கூறியுள்ளார்.

மல்லேஸ்வரியின் சாதனையை விளையாட்டு உலகைச் சேர்ந்தவர்களும், முன்னாள்ஒலிம்பியன்களும் வாழ்த்தி பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

சொந்த ஊரில் ஆனந்தம், மகிழ்ச்சிக் கொண்டாட்டம்:

சிட்னி ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்லேஸ்வரியின் சொந்த ஊரில்ஆனந்தத்திலும், மகிழ்ச்சிக் கொண்டாட்டத்திலும் மக்கள் திளைத்தனர்.

ஆந்திர மாநிலத்தில் ஊசவானிபேட்டா என்ற கிராமம் தான் மல்லேஸ்வரியின் சொந்தஊர்.

25 வயதான அவர் திருமணம் ஆகி கணவருடன் ஹரியானா மாநிலம் யமுனா நகரில்வசித்து வருகிறார். ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸ்காரரின் மகளானமல்லேஸ்வரி இந்திய உணவுக் கழகத்தில் பணியாற்றி வருகிறார்.

மல்லேஸ்வரி பதக்கம் வென்ற செய்தி அறிந்ததும் அவரது குடும்பத்தினர் பெரும்மகிழ்ச்சி அடைந்தனர். செய்தி அறிந்த கிராம மக்களும் வீட்டுக்கு வந்து அவரதுஉறவினர்களுக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தனர்.

ஒலிம்பிக்கில் தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்த்தோம்.ஆனால், வெண்கலப் பதக்கம்தான் கிடைத்தது. இருந்தாலும், நாங்கள்மகிழ்ச்சியடைகிறோம். இதுவே பெரிய சாதனைதான்.

மல்லேஸ்வரியை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம் என்றார் மல்லேஸ்வரியின்சகோதரி கர்னம் மாதவி.

மல்லேஸ்வரி பயிற்சி செய்யும் உடற்பயிற்சிக் கூடத்தைச் சேர்ந்தவர்களும்,மல்லேஸ்வரிக்குத் தொடக்க காலத்தில் பயிற்சி அளித்த நீலம்செட்டி அப்பன்னாவும்மல்லேஸ்வரியின் சாதனைக்குப் பாராட்டுத் தெரிவித்தனர்.

மல்லேஸ்வரியின் வெற்றிப்படிகள்:

13 வயதில் பளுதூக்கும் போட்டியில் பயிற்சி பெற்று வருபவர் மல்லேஸ்வரி.படிப்படியாக முன்னேறி தேசிய சாம்பியன் பட்டம் பெற்றார்.

பாங்காக் ஆசியப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் சர்வதேசபோட்டியில் தனது பதக்க வேட்டையைத் தொடங்கினார். இப்போது உலகில் 69 கிலோஎடைப் பிரிவில் உலகில் முதல் 5 வீராங்கனைகளில் ஒருவராக அவர் திகழ்கிறார்.

அவரது சாதயைைப் பாராட்டி இந்திய அரசு அவருக்கு 1994-ல் அர்ஜுனா விருதையும்1996-ல் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதையும் 1997-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும்வழங்கி கவுரவித்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X