For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"ராஜ்குமாருக்காக தடா கைதிகளை விடுவிக்கலாம்" - தமிழகம் வாதம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ராஜ்குமார் விடுதலைக்காக தடா கைதிகளை விடுவிக்கலாம் என உச்ச நீதிமன்றத்தில்தாக்கல் செய்த பதில் மனுவில் தமிழக அரசு கூறியுள்ளது.

கடத்தல் பேரத்தில் கைதிகளை விடுவிப்பது புதிதல்ல. இதற்கு முன்பு முன்னாள் மத்தியஅமைச்சர் முஃப்தி முகமது சையீத் மகளுக்காக தீவிரவாதிகள் விடுதலைசெய்யப்பட்டுள்ளனர்.

அதுபோல் நடிகர் ராஜ்குமார் விடுதலைக்காக 5 தடா கைதிகளை விடுதலை செய்யஅனுமதிக்க வேண்டும் என்று தனது பதில் மனுவில் தமிழக அரசு கூறியுள்ளது.

கன்னட நடிகர் ராஜ்குமாரை விடுதலை செய்வதற்காக வீரப்பன் விதித்தநிபந்தனைப்படி 5 தடா கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.

ஆனால், தமிழக அரசின் முடிவை எதிர்த்து டெல்லி வக்கீல் வதேரா என்பவர்உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம், விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

அந்த நோட்டீஸை ஏற்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவிவரம்:

நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திச் செல்லலாம் என்று ஓராண்டுக்கு முன்பே கிடைத்ததகவல் கர்நாடக போலீசுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

அதையடுத்து கர்நாடக போலீஸ் கேட்டுக் கொண்டதற்கிணங்க தமிழ்நாட்டில்ராஜ்குமார் சென்ற இடமெல்லாம் தமிழக போலீஸ் உரிய பாதுகாப்பு அளித்தது.

கடந்த ஜூலை 30-ம் தேதி ராஜ்குமார் கஜனூரில் உள்ள பண்ணை இல்லத்துக்கு வருவதுபற்றி தமிழக அரசுக்கு கர்நாடகம் எந்த தகவலும் தரவில்லை.

அப்படி தகவல் தந்திருந்தால் வீரப்பனின் கடத்தல் முயற்சியை தடுத்திருக்கலாம்.இதற்கு முன்பு ஜூன் 22-ம் தேதி ராஜ்குமார் தாளவாடி வந்தபோது கர்நாடக அரசுதகவல் தரவில்லை.

ஆனாலும், உள்ளூர் தகவலை வைத்து தமிழக போலீஸ் உரிய பாதுகாப்பு அளித்தது.மேலும் இதே போல் ஜூலை 28-ம் தேதி ராஜ்குமார் தமிழக போலீசுக்கு தகவல்தெரிவிக்காமல் தொட்டகஜனூருக்கு வந்து சென்றார்.

தற்போது வீரப்பனிடம் இருந்து ராஜ்குமாரை மீட்பதற்காக வீரப்பனின் கூட்டாளிகள்மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தின் முடிவு, பொது அமைதிக்காக பரந்த பரிசீலனைகொண்டதாக இருக்க வேண்டும். பொது நீதிக்காக பெரிய அளவில் பரிசீலனை செய்யவேண்டும்.

மேலும் உள்ளூர் பகுதி மக்களின் நீண்டகால பாதுகாப்பை ஆழமாக பரிசீலித்து,கிடப்பில் உள்ள வழக்குகளை தியாகம் செய்ய அரசை அனுமதிக்க வேண்டும்.

கடத்தல் விவகாரங்களில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதும், கைதிகளைவிடுதலை செய்வதும் இறதற்கு முன்பு நடந்திராத சம்பவங்கள் அல்ல.

உதாரணமாக முன்னாள் உள்துறை அமைச்சர் முஃப்திமுகமது சையது மகள் ரூபியா சையதை மீட்பதற்காக தீவிரவாதிகள் விடுதலைசெய்யப்பட்டதை குறிப்பிடலாம் என்று தமிழக அரசு தனது பதில் மனுவில்கூறியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X