For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்று முதல் கொலு...

By Staff
Google Oneindia Tamil News

நவராத்திரி விழா வியாழக்கிழமை தொடங்கியது.

மஹாளய அமாவாசையன்று கொலுப்படி அமைத்து பொம்மைகளை வைப்பர். மறுநாள் முதல் நவராத்திரி விழா துவங்கும்.

இந்த ஆண்டு வெள்ளிக்கிழமை துவங்குகிறது. லட்சுமி, பார்வதி, சரஸ்வதி மூவரையும் பூஜிக்கும் விதமாக நவராத்திரி பூஜை அமைகிறது.

நவராத்திரி 9 நாட்கள் கொண்டாடப்படும். ஒன்பது நாட்களிலும் ஒன்பது தேவியருக்கு கீழ்கண்ட வரிசையில் பூஜை செய்வது வழக்கம்.

முதல் நாள்: மகேஷ்வரி

இரண்டாம் நாள்: கொளமாரி

மூன்றாம் நாள்: வாராஹி

நான்காம் நாள்: மகாலட்சுமி

ஐந்தாம் நாள் : வைஷ்ணவி

ஆறாம் நாள்: இந்திராணி

ஏழாம் நாள்: சரஸ்வதி

எட்டாம் நாள்: நரசிம்மி

ஒன்பதாம் நாள்: சாமுண்டி

நவராத்திரி ஒன்பது நாட்களும் பார்வதி தேவி ஊசி முனையில் நின்று தவமியற்றியதால் இந்த நாட்களில் வீடுகளில் ஊசி நூல் எடுத்துத்

துணி மணிகளைத் தைப்பது தவிர்க்கப்படுகிறது.

நவராத்திரி குறித்த புராணக் கதை:

மகிஷாசுரன் என்ற அரக்கன் கடுந்தவம் புரிந்து பிரும்மாவிடமிருந்து தனக்குத் தேவர்கள், மனிதர், அசுரர்களால் மரணம் ஏற்படக்கூடாது என்றவரத்தினைப் பெற்று விட்டான்.

ஆண்களால் மரணம் நேரிடக் கூடாது என்று வரம் பெற்றமையால் சண்டிதேவியால் அவனுக்கு அழிவு நேரிடுகிறது. தேவி ஒன்பது நாட்கள் கொலுவிருந்துபத்தாவது நாள் மகிஷாசுரனை வதம் செய்ததால் தேவி மகிஷாசுரமர்த்தினி என அழைக்கப்படுகிறாள்.

இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ஆகிய சக்திகளின் வடிவமாக துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று தேவியரையும் நவராத்திரியில் வழிபடுவதுமரபு.

வீட்டின் உள்ளே பொம்மைகளை வைப்பதற்கு அமைக்கப்படும் மரப்படிகளுக்கு கொலுப்படி என்று பெயர். இந்தப் பண்டிகைக்கு கொலு என்ற பெயரும்உண்டு.கொலுப்படிகள் ஒற்றைப்படையில் (3.5.7 ...) அமைக்கப்பட வேண்டும்.

இந்த பண்டிகையின் போது வீட்டில் உள்ள சிறு குழந்தைகளுக்கு விதவிதமான உடைகள் அணிவித்து, விதவிதமான வேஷங்கள் போட்டு அருகில் உள்ளநண்பர்கள் வீடுகள், உறவினர் வீடுகளுக்கு அனுப்பி அவர்களை தங்கள் வீட்டு கொலுவுக்கு வருமாறு அழைப்பு விடுப்பார்கள்.

வீட்டுக்கு வருபவர்களுக்கு வெற்றிலை, பாக்கு,தேங்காய், சுண்டல் போன்றவை கொடுத்து மரியாதை செய்வார்கள்.

நவம் என்றால் ஒன்பது. நவராத்திரி கொண்டாடப்படும் ஒன்பது நாளும் ஒன்பது விதமான நவ தானியங்களைக் கொண்டு சுண்டல் செய்து அம்மனுக்குநிவேதனம் செய்யப்படும்.

சுண்டல் என்பது தானியங்களை (குறிப்பாக பருப்புகளை) வேக வைத்து உப்பு சேர்த்து செய்யப்படுவது.

துர்காஷ்டமி:

நவராத்திரி விழாவின் எட்டாவது நாள் துர்காஷ்டமியாக கொண்டாடப்படுகிறது,

ஒன்பது நாட்களும் வழிபட முடியாதவர்கள் இன்று பூஜை செய்து பலன் பெறலாம். அஷ்டமி தினத்தன்று பத்ரகாளி தோன்றினாள் என்று நம்பப்படுகிறது.

சரஸ்வதி பூஜை:

ஆயுத பூஜை தினத்தன்று கடைகள் மற்றும் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் நடத்துவோர் தாங்கள் உபயோகிக்கும் தொழில் நுட்ப கருவிகளுக்கும்மற்ற வர்த்தகத்திற்கு உதவும் பொருட்களுக்கும் பூஜை நடத்துவர்.

வீட்டில் கல்வி கற்கும் அனைவரும் தங்கள் பாட புத்தகங்களுக்கு பூஜை செய்வார்கள். இது கலைகளின் அரசி, சரஸ்வதிக்கு நன்றி தெரிவித்து அவளது ஆசிகளைமேலும் பெறுவதற்கு பிரார்த்தனை செய்யும் தினமாக கொண்டாடப்படுகிறது.

விஜயதசமி:

நவராத்திரி முடிந்து, விஜயதசமியன்று ஆலயங்களில் சிறப்பான பூஜைகள் நடைபெறும். இந்த நாளில்தான் தேவி அந்தி வேளையில் மகிஷாசுரனை சம்ஹாரம்செய்தாள். தீமைகள் அழிக்கப்பட்டு நன்மைகள் நடந்த இந் நாளில் நலம் தரும் கல்வி கற்க குழந்தைகளை பெற்றோர் அனுப்புவது இன்றும் உள்ளபழக்கம்.

முற்காலத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கல்வி பயில குருகுலத்திற்கு அனுப்பி வைத்துக் கொண்டிருந்தனர்.

குருவின் வீட்டிற்கு குழந்தைகள் கல்விக் காலம் முடியும் வரை தங்கி கல்வி பயின்று வருவார்கள். அதற்கு விஜய தசமி உகந்த நல்ல நாளாககருதப்பட்டுவந்தது.

அதனால் அன்றைய தினம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை குருவின் இல்லத்திற்கு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய் குரு தட்சணையுடன்அழைத்துச் சென்று குருவிடம் தங்கள் குழந்தைகளை கல்வி கற்க ஒப்படைப்பார்கள்.

அன்றைய தினம் அட்சராபியாசம் எனப்படும் முதல் பாடத்தை குரு தொடங்குவார். தரையில் அமர்ந்துதான் அக் காலத்தில் மாணவர்கள் கல்விபயில்வார்கள். அவர்களுக்கு முதல் வார்த்தையான அ குருவின் கையால் மாணவனின் கையைப் பிடித்து தரையில் மண்ணின் மீது எழுதி வைக்கப்பட்டு பாடம்துவக்கி வைக்கப்படும்.

இன்றும் குழந்தைகளை விஜய தசமியன்று பள்ளியில் சேர்க்கும் பழக்கம் சில இடங்களில் உள்ளது. புதிய அலுவலகக் கணக்குகளையும் சிலர் விஜய தசமியன்றுதுவங்குவதுண்டு. சிலர் புதிய தொழிலையும் இந்த தினத்தன்று தொடங்குவதுண்டு.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X