For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கல்கத்தாவைக் கலக்கும் வீரப்பன், ஜார்ஜ் ஸ்பீட்!

By Staff
Google Oneindia Tamil News

கல்கத்தா:

Veerappanகல்கத்தாவிலும் நுழைந்து விட்டான் வீரப்பன். துணைக்கு பிஜியின் ஜார்ஜ் ஸ்பீட்டும்வந்துள்ளார்.

புரியவில்லையா? இந்த இரு பிரபல தலைகளும், கல்கத்தாவில் நடக்கப் போகும்கொலு நிகழ்ச்சியில் இடம் பிடித்திருக்கிறார்கள் - பொம்மை வடிவில்.

வங்காளிகள் கொண்டாடும் ஐந்து நாள் துர்கா பூஜை, செவ்வாய்க்கிழமைதுவங்குகிறது. இதையொட்டி நடக்கும் கொலுவில் இருவரது பொம்மைகளும் இடம்பெறப் போகிறது. இவர்களது பொம்மைகள் கல்கத்தா நகர் முழுவதும் சூடானவிற்பனையில் உள்ளன.

களிமண்ணால் செய்யப்பட்ட வண்ணமயமான துர்கா சிலை மற்றும் கணேசர், லட்சுமி,கார்த்திகேயன், சரஸ்வதி ஆகியோரின் சிலைகளும் துர்கா பூஜையின்போது தவறாமல்இடம் பெறும்.

Speightஇந்து மத நம்பிக்கையின்படி தீய சக்திகளை அழிக்க துர்கை, பூமிக்கு வந்ததாககூறப்படுவதுண்டு. இந்த ஆண்டு பிஜியில் புரட்சி நடத்திய ஜார்ஜ் ஸ்பீட், காட்டுக்குள்இருந்து கொண்டு "சிலம்பி வரும் வீரப்பன் ஆகியோரது படங்கள் கொலுவில் இடம்பெறுகிறது.

இருவரது பொம்மைகளையும் செய்வது பொம்மை தயாரிப்பாளர்களுக்கு எளிதாகஇருக்கிறதாம். இருவரையும் அரக்கன் என்று சித்தரிக்கிறார்கள். அரக்கனின் உடலும்,தலைகள் மட்டும் வீரப்பன் மற்றும் ஸ்பீட் ஆகியோருடையதாகவும் இருக்கிறது.

இந்த இரு அரக்கர்களையும் கடவுள் துர்கா அழிப்பதாக கொலுக்களில்சித்தரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொம்மைகள் தயாரிக்கும் கார்த்திக் சந்திர பால்கூறுகையில், ஒவ்வொரு முறையும் இதுபோன்ற அம்சங்களைச் சேர்ப்பது எங்களதுவழக்கம். கடந்த ஆண்டு கார்கில் போர் குறித்த பொம்மைகளைத் தயாரித்தோம்.அப்போது நவாஸ் ஷெரீப்பை அரக்கனாக சித்தரித்தோம். இந்த முறை எங்களிடம்சிக்கியவர்கள் வீரப்பனும்,ஸ்பீட்டும் என்கிறார்.

ஒவ்வொரு ஆண்டும் துர்கா பூஜையின்போது பொது இடங்களில் மட்டும் 1000க்கும்மேற்பட்ட பூஜைகள் நடத்தப்படுகின்றன. இங்கெல்லாம் கொலுவும் வைக்கப்படுகிறது.இதற்காக ரூ. 50 லட்சம் வரை செலவிடப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு கடுமையான வெள்ளம் நகரைப் பாதித்துள்ளதால் கொண்டாட்டத்தில்உற்சாகம் குறைவாகவே உள்ளது. பலர் பொது பூஜைகளை ரத்து செய்துள்ளனர்.அதற்குப் பதிலாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிதிவசூலிக்கின்றனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X