For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கைகளை இழந்தவரின் எவரஸ்ட் முயற்சி தோல்வி

By Staff
Google Oneindia Tamil News

காத்மாண்டு:

தென் கொரியாவைச் சேர்ந்த கைகளை இழந்த ஒருவர் எவரெஸ்ட் மலை ஏறும்முயற்சியை கைவிட்டார்.

கிம் ஹாக் பின் என்ற தென் கொரியர், 1991-ம் ஆண்டு 8,850 மீட்டர் உயரமுள்ளஅலாஸ்கா மலையில் ஏறினார். அப்போது, 7,500 மீட்டர் ஏறிய நிலையில் அவரதுகைகள், பனிப் பாறைகளின் இடுக்கில் சிக்கிக் கொண்டது. அவரைக் காப்பாற்றகைகளை வெட்டி எடுக்க நேரிட்டது.

கைகள் போனாலும் சாதனைத் தாகம் அவரது மனதிலிருந்து அகலவில்லை. உலகின்உயரமான சிகரமான எவரெஸ்ட்டில் ஏற முடிவு செய்தார். இருப்பினும் அவரது முயற்சிதோல்வி அடைந்துள்ளது.

இருப்பினும், கிம்முடன் சென்ற மற்றவர்கள் எவரெஸ்ட் சிகரத்தை அக்டோபர் மாதம்4-ம் தேதி வெற்றிகரமாக சென்றடைந்தனர் என சுற்றுலாத்துறை அதிகாரிகள்தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, தென் கொரிய அதிகாரிகள் தெரிவிக்கையில், 35 வயதான இந்தமலையேறும் வீரர் அவர் உடல் நிலை ஒத்துழைக்காததால் தன் முயற்சியில்வெற்றியடைய இயலவில்லை என தெரிவித்தனர்.

ஐசை பிடித்துக் கொள்ள உதவும் கோடாலியோ அல்லது தன்னை கட்டிக் கொள்வதற்குகயிறையோ கிம் உபயோகிப்பதில்லை. பல்லின் உதவி கொண்டே பொருட்களைபிடித்துக் கொண்டு மலை ஏறும் முயற்சியில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் அளித்த பேட்டி ஒன்றில், கைகள் இல்லாமல் மலை ஏறுவது தனக்குகடினமான செயல் அல்ல எனக் கிம் கூறியிருந்தார்.

1998-ம் ஆண்டு மே மாதம். டாம் விட்கார் என்ற ஊனமுற்ற அமெரிக்கர் எவரெஸ்ட்ஏறி சாதனை புரிந்தார். இவருக்கு ஒரு கால் கிடையாது. ஒரு காலுடனேயே சிகரத்தைஏறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X