For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆர்.எஸ்.எஸ்.ஸை விட்டு விலகிச் செல்கிறதா பா.ஜ.க.?

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் பற்றி ஆர்.எஸ்.எஸ். தெரிவித்த கருத்துக்களால்பா.ஜ.க. சற்று அதிர்ச்சி அடைந்திருப்பதாகத் தெரிகிறது.

ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொள்கைக்கும், பாஜகவின் கொள்கைக்கும் நிறையவேறுபாடுகள் உள்ளன என்று பாஜக தலைவர் பங்காரு லட்சுமண்கூறியிருப்பதிலிருந்தே இது விளங்கும்.

கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் தாங்கள் இந்த மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்றுநினைப்பதை விடுத்து நாங்கள் இந்தியர்கள் என்ற ஒரே மதமாகக் கருதவேண்டும்.இந்திய நடைமுறைப் பழக்க வழக்கங்களையே கடைப்பிடிக்கவேண்டும் என்றுஆர்.எஸ்.எஸ். தலைவர் கே.எஸ்.சுதர்சன் சமீபத்தில் கூறியிருந்தார்.

வெளிநாட்டு அமைப்புகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு இந்தியாவுக்கு எதிரானநடவடிக்கையில் ஈடுபட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றுமுஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ அமைப்பினரை அவர் எச்சரித்திருந்தார்.

கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் பற்றி சுதர்சன் கூறியது எல்லாம்ஆர்.எஸ்.எஸ்.ஸின் கருத்துக்கள்தான். அவற்றுக்கும் பாஜகவுக்கும் எந்தத் தொடர்பும்இல்லை. எந்தவிதமாக கருத்தையும் தெரிவிக்க சுதர்சனுக்கு உரிமை உள்ளது.

அதே நேரத்தில் பல மத, இன, மொழி பேசும் மக்களைக் கொண்ட இந்தியசமுதாயம்தான் அதை எப்படி எடுத்துக் கொண்டு சுதர்சன் கூறியது சரியா தவறாஎன்பதைத் தீர்மானிக்கவேண்டும் என்று பாஜக தலைவர் பங்காரு லட்சுமண்கூறியுள்ளார்.

24 கட்சிகள் கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தலைமை தாங்கியிருக்கிறதுபாஜக. அக் கட்சித் தலைவர்கள் பலர் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் ஆவர்.ஆர்.எஸ்.எஸ். கொள்கையின் அடிப்படையில்தான் பாஜகவின் செயல்பாடேஇருக்கிறது.

இந் நிலையில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் சொல்லிய கருத்துக்கும், அதற்கு பாஜகதலைவர் தெரிவித்துள்ள பதிலுக்கும் பெரிய இடைவெளி இருக்கிறது. இதுஆர்.எஸ்.எஸ்.ஸை விட்டு பாஜக விலகிச் செல்கிறதா என்ற எண்ணத்தைத்தோற்றுவித்துள்ளது.

மிகப்பெரியதாகவும், சக்தி மிக்கதாகவும் கருதப்படும் இந்துக்கள் அமைப்பானஆர்.எஸ்.எஸ். அமைப்பு முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான இத்தகையஉச்சபட்ச எச்சரிக்கையை விடுத்திருப்பது இதுவே முதன்முறை.

ஆர்.எஸ்.எஸ்.ஸின் இந்த நடவடிக்கை பாஜகவில் பெரும் சலசலப்பைஏற்படுத்தியுள்ளது. ஆனால், அது வெளியில் தெரியாத வகையில் கட்சித் தலைவர்பங்காரு லட்சுமண் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஆக்ராவில் நடந்த ஆர்.எஸ்.எஸ். மாநாட்டில் கலந்து கொண்ட மத்தியஉள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி கூறியுள்ள கருத்துக்களும்பாஜக-ஆர்.எஸ்.எஸ். இடையேயான உறவை மேலும் பிரச்சினைக்குள்ளாக்கியுள்ளது.

பாஜகவுக்கு ஒரு நம்பிக்கையை அளிப்பது ஆர்.எஸ்.எஸ். தான். ஆனால், அதேநேரத்தில் நாட்டை எப்படி வழிநடத்துவது குறித்து ஆர்.எஸ்.எஸ்.ஸின் வழிகாட்டுதல்மத்திய அரசுக்குத் தேவையில்லை என்று அத்வானி கூறியுள்ளார்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X