விவசாயிகளுக்கு கடன் வட்டி குறைகிறது
சென்னை:
கூட்டுறவு வங்கிகள் மூலமாக விவசாயிகளுக்கு வழங்கும் கடன் மீதான வட்டி விகிதத்தை குறைப்பது என்றுமுதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில் செவ்வாய் கிழமை நடைபெற்ற தமிழக அமைச்சரவைக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
தமிழக அமைச்சரவைக் கூட்டம் கோட்டையில் செவ்வாய் கிழமை காலை நடைபெற்றது. பகல் 1 மணி வரைநடைபெற்ற இக்கூட்டத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் மீதான வட்டிவிகிதத்தைக் குறைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
ரூ. 25 ஆயிரம் வரையிலான கடன் தொகைக்கு இதுவரை விதிக்கப்பட்டு வந்த 13 சதவீதம் என்ற வட்டியை 12சதவிகிதமாகக் குறைப்பதென்றும், 50 ஆயிரம் ரூபாய் வரையிலான கடன் தொகைக்கு தற்பொழுதுள்ள 16 சதவீதவட்டியை 15 சதவீதமமாகக் குறைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இத்தகவலை தமிழக அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!